ஆகஸ்ட் 2008 ஞானத்திருவடி | திருக்குறள் – இல்வாழ்க்கை ஓங்காரக்குடில் ஆசான் அனுபவ உரை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை சர்வதாரி- 1

ஆவணி – 5

விலை : ரூ.10/

நிறுவனர்,

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்

 • 1. திருக்குறள் – இல்வாழ்க்கை ……
 • 2. புண்ணிய செயல்களின் விபரம்-தொடர்
 • 3. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் …… . ..
 • 4. ஜீவகாருண்யம்-தொடர் ………
 • 5. ஓங்காரக்குடில் ஆசான் அனுபவ உரை-தொடர் ……..
 • 6. ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால்-தொடர்……..
 • 7. மகான் பதஞ்சலியார் ஆசி நூல்- V.T.பரணீதரன் ….
 • 8. மகான் பட்டினத்தார் பாடல்கள் …………………………..
 • 9. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் ……………

—————————  வெளியீடு ——————————

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,

ஓங்காரக்குடில்,

113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010,

திருச்சி மாவட்டம்.

( 04327 – 256525, 255184, 255784.

____________________________________________________________________

மகான் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி

“இல்வாழ்க்கை ”

 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.                                       41

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.                                  42

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.                                                               43

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.                                                      44

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.                                                                            45

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவது எவன்?                                                                 46

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.                                                          47

ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.                                                  48

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை , அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.                                                  49

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.                                                            50

_________________________________________________________________________

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

– திருமந்திரம், உபதேசம்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 32 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்துள்ளார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக் கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். ஆகவே இந்த மாத இதழை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்து ஞானிகளின் ஆசிபெற வேண்டுகிறேன்.

அன்புடன்,

இரா.மாதவன்.

ஞானத்திருவடி

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின் அருளுரை

திருக்குறள்

இல்வாழ்க்கை – அதிகாரம் 5

குடும்பத்திலிருந்து வாழ்கின்ற  முறையைப் பற்றி கூறுவது  இல்வாழ்க்கை. இல்லறத்தானுக்கு  உரிய பெருமை யாதெனில் சிறந்த  அறிவாளியாக இருந்தும் வறுமையோடு   இருந்தாலும் துன்பத்தைத் தாங்கிக்  கொண்டு நெறிபிறழாமல் வாழ்கின்ற இ  சான்றோர்களின் தேவைகளைப் பூர்த்தி  செய்து வாழ வேண்டும்.

  உண்மைப் பொருள் அறிந்து  மரணத்தை வென்ற ஞானிகளின் பாதங்களை பக்தியுடன் பற்றி பூஜை  செய்கின்றவர்களுக்கு உதவி செய்தல்  வேண்டும். தம்முடைய பார்வையினால்  பிறரின் ஊழை (தீவினையை)  போக்கக்கூடிய வல்லமை பொருந்திய  ஞானிகளுக்குப் பணிந்து சேவை செய்வது, நன்நெறி உள்ள சான்றோர்,  இறைவனிடம் பக்தி செலுத்துகின்ற பக்தன், இறை நிலை அடைந்த  ஞானிகள் இவர்களின் தேவைகளைச் சேவையாய் நினைத்து பூர்த்தி   செய்தால் அவர்கள் வாழ்நாள்  முழுவதும் துணையாய் இருந்து சேவை  செய்தவரின் குடும்பத்தைக்  காப்பார்கள்.

 இல்லறத்தான் வீட்டில், உண்மைப் பொருள் அறிந்து வாசி   வசப்பட்டு காமதேகத்தை நீத்த  ஞானிகள், ஒரு முறை உணவு   உட்கொண்டால் மூன்று புவனத்தில்   உள்ளவர்கள் உண்டதற்கான புண்ணியம் இல்லறத்தானுக்குக்  கிடைக்கும். உணவு கொடுத்த  இல்லறத்தானும் ஞானியாவான்.   இரண்டாவது முறை சாப்பிட்டால்  அந்த உணவை சமைத்த இல்லறத்தானின் மனைவி  ஞானியாவாள். மூன்றாவது முறை சாப்பிட்டால் சந்ததிகள் பாதங்களை   ஞானியாவார்கள். நான்காவது முறை சாப்பிட்டால் தாயும் ஞானியாவாள்.   ஐந்தாவது முறை சாப்பிட்டால் அவனுடைய 21 தலைமுறையும்  ஞானியாவார்கள். அத்தகைய   பெருமை ஞானியர்களுக்கு உண்டு.  அவர்களுக்கு உணவு கொடுத்து   உபசரிப்பது பெறுதற்கரிய புண்ணியமாகும்.

 இவர்களின் தொடர்பு இருந்தால்  நம் அறியாமையை நீக்கி நம்மை  தெளிவுபடுத்துவார்கள். உண்மைப் பொருள் அறிந்து சென்மத்தை  கடைத்தேற்றிக் கொள்வதற்காக  மரணத்தை வெல்லும் மார்க்கத்தில்   செல்லுகின்ற துறவிகளின்  திருவடியைப் பற்றி பூஜை செய்தல்   வேண்டும். அவர்கள் தேவையைப்

  பூர்த்தி செய்தல் வேண்டும்.   உறவினர்கள் இல்லாது   இறந்தவர்களின் ஈமக்கடன்களை  செய்வது இல்லறத்தானுக்கு மிகவும்  சிறப்பாகும்.

  தென்புலம் என்று  சொல்லப்படுவது கேரளம், தமிழ்நாடு ,  ஆந்திரம், கர்நாடகம் ஆகிய   மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த  மண்ணில் அதுவும் குறிப்பாக நம்   தமிழ்நாட்டில் உள்ள தட்பவெப்பம்   மிகவும் வெப்பமாகவும் இருக்காது.  குளிர்ச்சியாகவும் இருக்காது. இந்த   தட்ப வெப்ப நிலை தவத்திற்கு ஏற்றது.  . எனவே இது ஞான பூமி. உலகத்தில்   எங்கு புண்ணியம், பூஜை  செய்திருந்தாலும் இங்கு வந்து   பிறந்துதான் ஜென்மத்தைக்  கடைத்தேற்றிக்கொள்ள முடியும். இந்த   பூமியில் பிறந்து அறத்தைக் காக்கும்  சான்றோர்களும் ஞானிகளும் பலர்  . உண்டு. அவர்களின் தேவைகளைப்   பூர்த்தி செய்தல் வேண்டும். மேலான   ஞானிகள் ஒளி நிலை அடைந்த  இடங்களும், தெய்வசக்தி வாய்ந்த   இடங்களும் பல உண்டு. அந்த  இடங்களுக்குச் சென்று பூஜை  செய்வதும் புண்ணியம் செய்வதும் மிக்க  பலன் தரும். நம்மை நாடி வந்த  விருந்தினர்களுக்குப் பாதுகாப்பு   கொடுத்து உபசரிப்பதும், சுற்றத்தாரைப்  பாதுகாப்பதும் முறையான வழியில் . தன்னை பாதுகாத்துக் கொள்வதும்    இல்லறத்தானுக்குரிய சிறப்பான   கடமையாகும்.

 பொருள் சேர்க்கும் பொழுது  பழிக்கு அஞ்சி பொருள் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்த செய்வது இல்லறத்தானுக்கு மிகவும் பொருளை தான் மட்டும் சிறப்பாகும்.

அனுபவிக்காமல் துயரப்படுபவரின் துயரங்களையும் போக்க வேண்டும். முறைதவறி பொருள் சேர்த்து  தர்மகாரியங்கள் செய்தால் யாரை  வஞ்சித்து பொருளை பெற்றோமோ  அவருக்கே புண்ணியத்தின் பலன்  போய் சேர்ந்துவிடும். முறையாக  பொருள் சேர்த்து அவற்றில்  புண்ணியம் செய்தால் வாழ்க்கையில்  தடையில்லை.

  சிலர் வெளியில் நல்லவர்களாக  இருப்பார்கள். வீட்டிற்கு சென்றால்   மனைவி குழந்தைகள் நடுங்கும் படியாக   இருப்பார்கள். மனைவி குழந்தைகள்   செய்த குற்றங்களை மன்னித்து  உறவினர்களும் சுற்றத்தார்களும்  வாழ்த்தும் படியாக இருக்க வேண்டும் . அன்பு என்பது இல்லறத்தானுக்கு உயர்ந்த பண்பு. அன்பு இல்லையெனில் உலக மக்களுக்கு நன்மை செய்ய  முடியாது. மனைவியின் துணையோடு  அன்பினால் அறப்பணிகள் செய்து  அறத்தை நிலைநாட்ட வேண்டும்.

  பொருளறிந்தவன்  அருளறிவான். பொருள் என்பது  ஞானிகள், அருள் என்பது திருவடி.   உண்மையறிந்தவனே சிறப்பான  இல்லறத்தை நடத்துகின்றான்.   உண்மையறிந்தால் உடற்கூறு   அறிவான். மனைவியை அறிவான்.  பெண்ணின் இயல்பறிவான். ஆணின்

 இயல்பறிவான். உலகத்தை புரிந்து, இயற்கையைப் புரிந்து, பசி காமம்  இயல்பறிந்து, உடற்கூற்றை அறிவான்.  இந்த உடம்பை அதிகமாக காமத்திற்கு  பயன்படுத்தினால் நோய் வந்துவிடும் உடம்பையும் அறிந்து மென்மையாக   மனைவியைப் பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த இல்லறத்தான். அந்த உண்மையை அறியாதவன்  அவளையும் வருத்தி, தானும்   வருந்துவான். மற்றவர்களை  நன் நெறிப்படுத்தி தானும் அறத்திலிருந்து தவறாமல்  நடந்து கொண்டு உண்மைப்  பொருளறிந்தவன் ஜென்மத்தை  கடைத்தேற்றிக் கொள்வான். அத்தகையவர்கள் உயர்ந்த நிலையில்  உள்ளவர்களாவர்.

  தயைசிந்தை , ஜீவதயவு, மனிதநேயம் போன்ற பண்புகளைப் பொருந்தியது.  இத்தகைய அறத்தைச் சார்ந்துள்ள  குடும்பத்தில் பிரச்சனைகள் வராது.   ஆரவாரம் இருக்காது. மகிழ்வாக இருப்பார்கள். அறம் என்பது  இல்லறத்திற்கு சிறப்பானது. அறம் செய்யும் போது பிறர் மதிக்கக் கூடிய  அளவில் செய்தல் வேண்டும். பிறர்  மதிக்காத ஒன்றை அறம் என்று செய்தல் கூடாது. அவ்வாறு செய்வது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது ஆகும். உலக நடை  அறிந்தும் அறம் செய்தல் வேண்டும்.  வாழுகின்ற முறையோடு மேல்  கூறப்பட்ட முறையை கடைபிடித்து   வாழவேண்டிய நெறிமுறையுடன் வாழ்பவர்கள் வானத்திலுள்ள  தெய்வத்திற்கு ஒப்பானவர்கள்.

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில்  பௌர்ணமி திருவிளக்கு பூஜை நாள் : 16.08.2008 – சனிக்கிழமை, காலை 9 மணி அளவில் இடம் : ஓங்காரக்குடில், துறையூர். அன்புடையீர் வணக்கம்,          துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன் அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (அன்னதானம்) வழங்கப்படும். இந்த பௌர்ணமி திருவிளக்கு பூஜைக்கு 10 மூட்டை அரிசி அன்னதானத்திற்குக் கொடுத்து பூஜை செய்பவர்கள் திரு. Dr.ரவி, கோவை, திரு. V.மோகன், ஜெயங்கொண்டம். அடுத்த திருவிளக்கு பூஜை நாள் : 15.09.2008 – திங்கட்கிழமை    

தொடர் -7

நாம் புண்ணியவான் ஆவதற்கு ஓங்காரக்குடில் ஆசான் அருளிய புண்ணிய செயல்களின் விவரம்

35. தகுதியுள்ள நண்பர்கள் சிலசமயத்தில் அறியாமையால் குற்றம் செய்தாலும், அதனை அனுசரித்து நடப்பதும் புண்ணியமாகும்.

36. நமது செயல்பாடுகள் மற்ற உயிர்கள் மகிழ்ச்சியடையும்படி இருந்தால் அதுவும் புண்ணியமாகும்.

37. நமக்கு துன்பம் வந்த காலத்தில் கடன் கொடுத்து உதவி செய்தவர்களுக்கு நாம் பெற்ற கடனை திரும்பக் கொடுத்துவிடுவது புண்ணியமாகும்.

38. நமக்கு வீடு இல்லாத காலத்திலும், வியாபாரத்திற்குக் கடை இல்லாத காலத்திலும், வாடகைக்கு வீடும் கடையும் கொடுத்து உதவியவர்களுக்கு அவர்களுக்கு தேவையான காலத்தில் கடை மற்றும் வீட்டை காலி செய்து கொடுப்பதும் புண்ணியமாகும்.

39. நமது வீட்டில் டேப்ரெக்கார்டர், ரேடியோ, டி.வி பயன்படுத்தும் காலத்தில் அருகில் உள்ளவர்கள் சத்தம் அதிகம் என்று சொன்னால், சத்தத்தை குறைத்து வைத்துக்கொள்வது புண்ணியமாகும்.

40. நாம் பேருந்தில் செல்லும் காலத்தில் கர்ப்பஸ்திரீகள், வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், கையில் குழந்தையோடு நின்று பயணம் செய்கின்றவர்களுக்கு நாம் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டுக்கொடுப்பது புண்ணியமாகும்.

41. நமது வீட்டில் உள்ள பசு அல்லது எருமை பால் கறக்கும் முன்னர் கன்றுக்கு பால்விட்டு கறப்பது புண்ணியமாகும்.

42. தாய்ப்பால் இல்லா குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்ப்பால் போல்பாதுகாப்பதால் நாம் பசுவை பாதுகாப்பது புண்ணியமாகும்.

43. கடவுளால் படைக்கப்பட்ட ஆடு, மாடு, கோழி மற்றும் ஜீவராசிகளை கடவுளுக்கே வெட்டி பலி கொடுப்பது பாவமாகும். அது போன்ற காரியங்கள் செய்யாதிருப்பது புண்ணியமாகும்.

44. நாம் கற்றறிந்த உண்மையை மற்றவர்களுக்கு மனதில் பதியுமாறு

சொல்வதும் புண்ணியமாகும்.

45. நாம் அனுபவிக்கக்கூடிய இன்பங்கள் அனைத்தும் பிறரால் பழிக்கப்படாதிருப்பது புண்ணியமாகும்.

46. ஆசான் சுப்ரமணியர் மேல் பக்தி கொண்டவர்களுக்கும், சமூக சான்றோர்களுக்கும் உதவி செய்வது புண்ணியமாகும்.

47. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது பாவமாகும்; கலப்படம் செய்யாதிருப்பது புண்ணியமாகும்.

48. சில பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிவிடுவார்கள். அவர்களை சுபகாரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், சுபகாரியங்களுக்குச் செல்லும் காலத்தில் அவர்கள் எதிரே வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் சுபகாரியங்கள் தடைபடும் என்றும் சொல்வது கருணை இல்லாத செயல்களாகும். அவ்வாறு அவர்கள் மனம் புண்படும்படி பேசாதிருப்பது புண்ணியமாகும்.

49. உண்மைப் பொருள் உணர்ந்த ஆசான் நமக்கு மனமுவந்து உபதேசித்தால் அது அளவில்லா புண்ணியமாகும்.

50. மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணம் மும்மலமாகிய களிம்புதான். களிம்பு அற பாடுபடுவது புண்ணியமாகும்.

51. கடவுளால் செய்யப்பட்ட திருக்குறளை தொட்டு வணங்குவதும், படிப்பதும், திருக்குறளைப் பரப்புவதும் புண்ணியமாகும்.

மேற்கண்ட அனைத்துப் புண்ணிய செயல்களுக்கும் ஆசான் அகத்தீசர் ஆசி இருக்க வேண்டும்.

மேற்கண்ட புண்ணிய செயல்களை செம்மையாக செய்து முடிக்கவேண்டுமென்றால் புலால் மறுத்தும், உயிர்கொலை தவிர்த்தும் மற்றும் விருந்தை உபசரித்தும் மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் ஆசான் அகத்தீசரை தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும், முடிந்தால் இரவு 12 மணிக்கு 30 நிமிடமும் ஓம் அகத்தீசாய நம என்று நாமஜெபமாகிய பூஜைசெய்து ஆசிபெறவேண்டும்.

ஆகவே, ஆசான் அகத்தீசரை பூஜிப்போம்,

ஆசிபெற்று இன்புற்று வாழ்வோம்.

– முற்றும்.

******************

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க

32ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் தீட்சை விழா

21.9.2008 ஞாயிற்றுக்கிழமை – ஓங்காரக்குடில், துறையூர்.

ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி

சுத்தசன்மார்க்க வேண்டுகோள்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகள் ஜீவகாருண்ய தலைவர் ஆவார். அவர் அருளிய சுத்த சன்மார்க்க வேண்டுகோளை தினமும் பாராயணம் செய்தும் “ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி” என்று நாமஜெபமாகிய பூஜை செய்தும் வந்தால் சகல நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.

ஆசான் இராமலிங்க சுவாமிகள் ஆசி இருந்தால் தான் ஜீவகாருண்யத்திற்குரிய அறிவு வரும். ஜீவகாருண்யம் உள்ள மக்கள் தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள். மகான் இராமலிங்க சுவாமிகள் திருவடியை பூஜிக்க பூஜிக்கத்தான் நம்மிடம் உள்ள லோபித்தனம் நீங்கும். லோபித்தனம் உள்ள மக்கள் நிச்சயமாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதற்குத் தடையாக இருப்பது பொருள் கொடாத வன்மனமாகிய லோபித்தனம்தான். மகான் இராமலிங்க சுவாமிகள் ஆசி பெற்றால் லோபித்தனம் நீங்கும் மனசாந்தம் உண்டாகும். தனக்குக் கிடைத்தப் பொருளைக் கொண்டு மற்ற உயிர்கள் மகிழும்படிச் செய்வார்கள். மற்ற உயிர்களை மகிழும்படிச் செய்கின்ற அறிவு வந்தாலே, நிச்சயமாக அவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள். ஜென்மத்தைக் கடைத்தேற்றத் தடையாக இருப்பது லோபித்தனமே. மகான் இராமலிங்க சுவாமிகளை சிந்திக்கச் சிந்திக்க பொறாமை, பேராசை, கடும் சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் ஆகிய குணக்கேடுகள் நீங்கிவிடும். இது ஒரே நாளில் அல்லது குறிப்பிட்ட காலத்தில் நீங்காது என்பது எங்களுக்குத் தெரியும். தொடர்ந்து திருவடி துணைக்கொண்டு முயற்சிக்க வேண்டும். நம்மிடமுள்ள மேற்கண்ட குணக்கேடுகள் எல்லாம், பல ஜென்மங்களில் செய்த பாவங்களே ஆகும். சுத்த சன்மார்க்கிகளாகிய ஞானிகள் துணைக் கொண்டுதான் குணக்கேடுகளை வெல்ல வேண்டும். ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகிறவர்கள், முற்றுபெற்ற ஞானிகளின் திருவடியை தினமும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பு : எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பதால், உயிர்கள் நம்மால் மகிழ்ச்சி அடைந்தால், எல்லாம் வல்ல கடவுளும் மகிழ்ச்சி அடைவார். எல்லாம் வல்ல கடவுளின் மகிழ்ச்சியே நாம் வீடுபேறு அடைய துணைபுரியும். இராமலிங்க சுவாமிகளின் திருவடியைப் பூஜிக்க பூஜிக்க குணக்கேடுகள் நீங்குவதோடு மட்டுமல்லாது, செல்வமும் பெருகும், தயை சிந்தையும் உருவாகும்.

– குருநாதர்

அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்பா

சுத்தசன்மார்க்க வேண்டுகோள்

அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம் நானன்பு செயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேல்நிலைமேல் சுத்தசிவ மார்க்கந்

திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண் டுவனே.                   1

 ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அடிமுடிகண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்

 பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்

புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்

எய்யாத அருட்ஜோதி யென்கையுறல் வேண்டும்

இறந்தவுயிர் தமை மீட்டு எழுப்பியிடல் வேண்டும்

 நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும்

நாயகநின் றனைப்பிரியாது உறுதலும் வேண் டுவனே.               2

அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்

அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்

கண்ணார நினையெங்குங் கண்டு உவத்தல் வேண்டும்

காணாத காட்சியெலாங் கண்டுகொளல் வேண்டும்

பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

பரமானந் தப்பெருங்கூத்து ஆடியிடல் வேண்டும்

உண்ணாடி உயிர்களுறும் துயர் தவிர்த்தல் வேண்டும்

உனைப்பிரியாது உறுகின்ற வுறவதுவேண் டுவனே.            3

அத்தாநான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்ஜோ தியைப்பெற்றே யகம்களித்தல் வேண்டும்

செத்தாரை மீட்டும் இங்கே யெழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே யடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுள ராகியுல கியல் நடத்தல் வேண்டும்

எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயு மொன்றாக இனிதுறல்வேண் டுவனே.                     4

அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்ஜோ தியைப்பெற்றே அகமகிழ்தல் வேண்டும்

வரைசேர்எவ் வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும்

 புரைசேருங் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்

உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி யெஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.      5

அடிகேள் நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்

துடிசேர் எவ்உலகமும்எத் தேவரும் எவ் வுயிரும்

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்

படிவானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம்

படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும்

ஒடியாத திருவடிவில் எந்தாயு நானும்

ஒன்றாகி யெஞ்ஞான்றும் ஓங்குதல் வேண் டுவனே.        6

அம்மாநான் வேண்டுதல் கேட் டருள் புரிதல் வேண்டும்

ஆணவம் ஆதியமுழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்

இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே

இயங்கியொரு தீமையும் இல் லாதிருத்தல் வேண்டும்

எம்மா நான் வேண்டுதல் வேண் டாமையறல் வேண்டும்

ஏகசிவ போகம் அனு போகம் உறல் வேண்டும்

தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும் வேண் டுவனே.           7

அச்சாநான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெல்லாம் அறிந்தடைதல் வேண்டும்

எச்சார்பு மாகி உயிர்க் கிதம்புரிதல் வேண்டும்

எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்

இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்ந்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

உச்சாதி யந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண் டுவனே.            8

அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஐந்தொழில் நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்

 செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்

எறியாதுஎன் னெண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

எல்லாஞ்செய் வல்லசித்தே யெனக்களித்தல் வேண்டும்

பிறியாது என் னோடுகலந்து நீயிருத்தல் வேண்டும்

பெருமான்நின் றனைப்பாடி யாடுதல்வேண் டுவனே.            9

அருளாநான் வேண்டுதல் கேட் டருள் புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினம்காமம் அடையாமை வேண்டும்

மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான

மன்றிடத்தே வள்ளலுனை வாழ்த்தியிடல் வேண்டும்

இருளாமை யுறல்வேண்டும் எனையடுத்தார் சுகம்வாய்ந்

திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்

பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும்

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.          10

அமலாநான் வேண்டுதல் கேட் டருள் புரிதல் வேண்டும்

ஆடிநிற்கும் சேவடியைப் பாடி நிற்க வேண்டும்

எமனாதித் தடையென்றும் எய்தாமை வேண்டும்

எல்லாம் செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்

விமலாதி யுடையவொரு திருவடிவில் யானும்

விமலாநீ யும்கலந்தே விளங்குதல் வேண் டுவனே.               11 |

         🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼     

💮அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகள்💮 அருளிய அருட்பாவின் அமுத கலசமான ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் தெய்வீக நூலை யார் படிக்கிறார்களோ அவர் ஞானியாவார் என்பது சாத்தியம். – குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய

இராமலிங்க சுவாமிகள் அருளிய

ஜீவகாருண்யம்

19. பசியை நிவர்த்தி செய்துகொள்ளத்தக்க புவன போக சுதந்திரங்களைப் பெறுதற்குரிய அறிவு இருந்தும், பூர்வ கர்மத்தாலும், அஜாக்கிரதையாலும், அச்சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரங்கொடுத்து அந்தப்பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய, ஜீவகாருண்யம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும்.

ஆகலின், ஜீவகாருண்ய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து, அவ்வீட்டுக் கதவைத்திறந்து கொண்டு, உள்ளே புகுந்து, நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

 புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களிலாடல், புண்ணிய தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ் செய்தல், ஜெபஞ் செய்தல், விரதஞ் செய்தல், யாகஞ் செய்தல், பூஜை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும், இருடிகளும், உணவை நீக்கி, உறக்கத்தை விட்டு, விடயச் சார்புகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி, மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து, எல்லாப் பற்றுக்களையும் துறந்து, பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர் களானால், மோட்சமென்கின்ற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்களென்று உண்மையாக அறியவேண்டும்.

– அடுத்த இதழில் தொடரும்

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின்

அனுபவ உரை

அடியேன் யோக நிலையையும், ஞான நிலையையும் அறிந்து கொள்ள பல குருமார்களை தேடி அலைந்தேன். ஒவ்வொருவரும் யோகத்தைப் பற்றி சொன்னார்கள். அதில் எனக்கு நன்மை ஏற்படவில்லை. துறையூர் அவல்பட்டறை

தெருவில் சித்த வைத்திய மேதையும், சித்த தத்துவ மேதையுமான பெ.சின்னசாமி சாஸ்திரி அவர்கள் தான் யோக ஞானத்தைப் பற்றியும், ஆசான் அகத்தீசர் ஆசியால்தான் ஞானத்தைப் பெறமுடியும் என்பதையும் அவர் உபதேசத்தால் அறிந்து கொண்டேன். அவர் உபதேசத்தின்படி தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும், முடிந்தால் இரவு நேரங்களிலும் ஆசான் அகத்தீசரை “ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி” என்று நாமஜெபமாகிய பூஜை செய்து வந்தேன்.

35. எல்லோரும் என்னை நல்லவன் என்று சொன்னால்தான் நான்

ஆன்மலாபம் பெறமுடியும் என்பதை என்னால் அறியமுடியவில்லை. நான் எல்லோருக்கும் நல்லவனாக வாழ உன் திருவருள் வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

36.பொருள்பற்று உள்ளவன் அருளைப்பெற முடியாது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே, பொருள்பற்று நீக்கி, உன் திருவடியை பற்றுக்கோடாக பற்றிக்கொள்ள அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

37.வீடுபேறு அடைய அன்பு, தயவு, கருணை, தன்னடக்கம் வேண்டும் என்பதை என்னால் அறிய முடியவில்லை . எனவே, அன்பும், தயவும், கருணையும், தன்னடக்கமும் தந்து எனக்கு அருளவேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

38.நான் வாழ ஆசைப்படுவதுபோல், மற்றவர்களும் வாழ ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு இடையூறாக இருந்தால் தீவினை சூழும் என்பதை என்னால் அறிய முடியவில்லை. எனவே, நான் வாழ்வதுபோல் மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நான் நினைக்க எனக்கு நீ அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கேட்டேன்.

39.எல்லோரும் என்னை கொடும்பாவி கொடும்பாவி என்றால் என்னை அறியாமலேயே நான் நரகத்திற்குப் போவேன் என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நான் பாவி என்று பெயரெடுக்காது இருக்கவும், பணிவுடன் வாழவும் எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

40.நான் உயிர்க்கொலை செய்வதிலும், புலால் உண்பதிலும் நாட்டமாக இருக்கிறேன். இது பொல்லாத நரகத்தில் சேர்க்கும் என்பது எனக்குத் தெரியாது. புலால் உண்ணாமலும், உயிர்க்கொலை செய்யாமலும் இருக்க எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

41.சும்மா இரு என்ற இரகசியம் கோடி பிரம்ம பட்டத்திற்கு ஒப்பான பெருமையுடையது என்று என்னால் அறியமுடியவில்லை. சும்மா இரு என்ற இரகசியத்தை உணர்த்தி எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

42.துரியம் கடந்து சுடர் ஒளியைக் கண்டால், மரணம், பிறப்பு இல்லை என்பதை என்னால் அறியமுடியவில்லை . துரியம் கடந்து சுடர் ஒளி காணவும் எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

43.மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தாக்கால் ஈசனைக் காட்டும் உடம்பு என்பதை என்னால் அறிய முடியவில்லை. எனவே, மாசற்ற கொள்கையை அறிந்து கடைப்பிடிக்கவும், என்னுள் பரம்பொருளைக் காணவும் அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

44.எவ்விடத்திலும் எவ்வுயிரிலும் எங்கும் சிவம் இருப்பதை என்னால் அறியமுடியவில்லை . ஆகவே, எவ்விடத்திலும், எவ்வுயிரிலும், எங்கும் சிவம் இருப்பதை நான் அறிந்து கொள்ள எனக்கு அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

45.உடம்பென்னும் பாசமாகிய சந்திரகலையையும், உயிரென்னும் பசுவாகிய சூரியகலையையும், உயர் சிறப்புடைய பதியாகிய சுழிமுனை பற்றியும் என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே, உடம்பென்னும் பாசமாகிய சந்திரகலையையும், உயிரென்னும் பசுவாகிய சூரியகலையையும், உயர் சிறப்புடைய பதியாகிய சுழிமுனை பற்றியும் அறிந்து கொள்ள எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.

– அடுத்த இதழில் தொடரும்

  ஓங்காரக்குடில் ஆசான் அருளிய

ஏழைகளுக்குப் பசியாற்றிவைத்தால் வரும் நன்மைகள்

சன்மார்க்கம்

82) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தளர்ச்சி வரும்போதெல்லாம்

அதைக்கண்டு தளராது உறுதியுடன் இருக்கும் வல்லமை பெறலாம். 83)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சிறுமை குணம் நீங்கி

பெருமைக்குரிய குணத்தைப் பெறலாம்.

84) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சிற்றறிவு நீங்கி பேரறிவு பெற்று

வாழலாம்.

85) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் வரும் சிலசில பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும் திறன் அன்னதானத்தால்தான் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.

86) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஒருவர் பேசும்பொழுது அதில்உள்ள பயனுள்ள சொற்களை மட்டும் அறிந்து கொள்ளும் அறிவைப் பெறலாம்.

87)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நாம் விரும்புகின்ற அறுசுவை உணவு தடைபடாமல் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

88)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பசித்த நேரத்திற்கு உணவும், அது தடையில்லாமல் ஜீரணமாகும் வாய்ப்பையும் பெறலாம்.

89)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் கடவுளால் கொடுக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை ஆடம்பரத்திற்காகத் தயாரித்து அதை கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களுக்குக் கொடுத்து புண்ணியத்தைப் பெறாமல் வீணாக்குவதால் சர்க்கரை நோய் வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

90) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நமது பேச்சால் அல்லது செயலால் பிறர் மனம் புண்படுவதை அறிந்து கொள்ளலாம்.

91)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது ஆயுள் குறைவிற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

92) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணும்படி பொய் செய்திகளை பரப்புவது பாவமும் தேச துரோகமும் என்று அறிந்துகொள்ளலாம்.

93) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால், தான் தப்பித்துக் கொள்வதற்காக மற்றவர்கள் மேல் பழி சுமத்துவது நரகத்திற்கு இடம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

94) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தவறு செய்யாத மனைவியை தவறு செய்ததாக எண்ணி அவளை சொல்லாலும் செயலாலும் சித்திரவதை செய்பவன், பன்றி நாயாகப் பிறப்பான் என்பதை அறிந்துகொள்ளலாம்.

95)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நல்லோர்கள் பெரியோர்கள் மேற்கொள்ளும் அறப்பணிகளை இகழ்தலும், இடையூறும் செய்தால் கொடிய நோய்களுக்கு ஆட்படுவதோடு, விஷ ஜந்துக்களாகப் பிறப்பான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

96)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் உணவுப்பொருளை ஒரு பகுதியை சாப்பிட்டுவிட்டு ஒரு பகுதியை வைத்துவிட்டு போவது கௌரவம் என்று நினைக்கிறார்கள். அந்த உணவுப்பொருள்கள் எல்லா ஜீவர்களுக்கும் பொதுவாக கடவுள் படைத்ததாகும். தன் பொருள் வளத்தின் காரணமாக உணவுப்பொருள்களை வாங்கி ஆடம்பரத்திற்கு தயார் செய்து வீண் செய்வது பொருளாதாரத்தையும் பாதிக்கும்; உணவுப்பொருளை படைத்த கடவுளும் வருந்துவார். எனவே, தனக்கு தேவையான உணவுப் பொருளை சாப்பிட்டு மற்ற உணவுப் பொருளை வீணாக்கக்கூடாது என்று நினைப்பதே கடவுளுக்கு நாம் காட்டும் நன்றியாகும். மேலும், இறையருள் பெறுவதற்கு தகுதியுள்ளவரும் ஆவார் என்பதையும் அறியலாம்.

97)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வன் புலியிடமிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் வஞ்சகர்களிடமிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாது. புண்ணியம் செய்தால் வஞ்சகர்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். வஞ்சகர்களை நல்லவர்கள் என்றும், நல்லவர்களை வஞ்சகர்கள் என்று எண்ணுகின்ற அறியாமை நீங்க வேண்டுமென்றால் அன்னதானத்தாலும், ஆசான் அகத்தீசரின் திருவடி பூஜையாலும்தான் முடியும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

98)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வாத, பித்த, சிலேத்துமம் எனும் முத்தோசத்தையும் அறியலாம்.

– அடுத்த இதழில் தொடரும்

ஞானத்திருவடி ஞானத்திருவடி எனும் மாத நூலின் சிறப்புகளை

மகான் பதஞ்சலியார் தன் சுவடிமூலம் அருளிய அருள்வாக்கு

மகான் பதஞ்சலியார் ஆசிகாண்டம்

ஞான ஒளி கொண்டதொரு அரங்கா போற்றி

ஞானவழி தந்தருளும் அரசா போற்றி

ஞானஜோதி ஆகிவரும் தேசிகா போற்றி

ஞானம் தரும் நின் திருவடிகள் போற்றி போற்றி                       1

 போற்றியே பதஞ்சலி முனிவர்யானே

புகலவந்தேன் ஆசியதை இன்று நாளில்

பார்சிறக்க ஞான நூல் வெளியிட்டாயே

 பலமக்கள் சிறப்புகாண ஞானிகள் மொழியை                 2.

மொழியதனை வெளிவிட்டாய் நூலின் வழியே

மெய்ஞானம் சொல்லும் நூல் ஞானத்திருவடி நூல்

 தெளிவுதரும் மக்களுக்கு அருளும் தரும்

தெய்வீக வாழ்வுதரும் உண்மை சொன்னேன்                   3.

சொன்னேனே பதஞ்சலி என் ஆசியுண்டு

சித்தர்கள் நூல் ஞானத்திருவடி நூல்

நன்மைதரும் நூல் இல்லிலே இருக்க

நாட்டுகிறேன் குடும்பத்தில் அமைதி ஓங்கும்              4

ஓங்கியே செல்வங்கள் செழித்தோங்குமையா

உலகத்தில் அறியாமையை அகற்றி வைத்து

ஓங்கவைக்கும் ஞானத்தை உலகத்தோர்க்கே

உண்மைதரும் நூலிதனை தொடுபவர்க்கும்                 5.

தொடுபவர்க்கும் பொருள் தந்து பெறுபவர்க்கும்

தரணியிலே பதஞ்சலி என் ஆசியும் உண்டு

தொடுபவர்கள் புண்ணியர்கள் ஆவாரையா

தவசிகளின் நூல் இதனை வாங்கி ஈவோர்க்கு                 6.

 )

ஈவோர்க்கு இன்பங்கள் கூடும் கூடும்

இறையாசி ஞானிகளின் ஆசியினாலே

அவணியிலே பாக்கியங்கள் பெற்று வாழ்வார்

அருளோடு பரிபூரண ஆயுள் கூடும்                              7

கூடிவரும் நன்மைபல ஞானிகள் ஆசி

குவலயத்தில் பதஞ்சலி என் ஆசியினாலே

நாடி வரும் ஞானசித்தி ஆசியுமுண்டு

நலம் தரும் நூல் வளம் தரும் ஞானம் தரும் நூல்

ஞானம்தரும் மாணாக்கர்கள் படித்திட கல்வியும்தரும்

ஞானம் பெற்று சகல சௌபாக்கியம் பெற்று

ஞானமுடன் சிறந்து வாழ்வார் ஆசியுமுண்டு

ஞானியான் வழங்கினேன் ஆசி நூல் இப்பாகம் முற்றே                  9.

– சுபம் –

 குறிப்பு : ஞானத்திருவடி என்னும் நூல் குரு நூலாகும். இந்நூலை மாணவர்கள் படித்தால் கல்வியில் தேர்ச்சியும் வேலைவாய்ப்பும் அமையும் என்பது மகான் பதஞ்சலி முனிவர் வாக்கு.

22.07.2008

சுவடி ஆசான் V.T.பரணீதரன்,

 மகான் அகத்தியர் நாடிஜோதிடர், செந்தண்ணீ ர்புரம், திருச்சி. 18 சித்தர்களில் ஒருவரான மகான் பதஞ்சலி முனிவர், மிகப்பெரிய ஞானி ஆவார். ஞானத்திருவடி எனும் நூலை தொட்டாலும், படித்தாலும், மற்றவர்களுக்கு வாங்கிக்கொடுத்தாலும் பல நன்மைகள் அடைவார்கள் என்பது மகான் பதஞ்சலி முனிவர் வாக்கு.

மகான் பதஞ்சலி முனிவரால் பல பேர்கள் ஞானியாகி உள்ளார்கள். ஓம் பதஞ்சலி தேவா என்று அழைக்கும் முன் அஞ்சேல் என்று ஆசி வழங்கும் வல்லவர் ஆவார் மகான் பதஞ்சலி முனிவர். ஓம் பதஞ்சலி தேவா என்று காலை 10 முறையும், மாலை 10 முறையும் சொன்னால் யாராலும் அறியமுடியாத ஞான ரகசியத்தை நாம் அறிந்துகொள்ளலாம். மேலும் வறுமையில்லா வாழ்வும், உடல் ஆரோக்கியமும் பெற்று நீடு வாழ்வார்கள். இவர் நாமத்தை சொல்லச்சொல்ல எதைப்பற்றியும் கவலையில்லா வாழ்வு தருவார். குடும்பத்தில் அமைதியும், பண்புள்ள புத்திர பாக்கியமும் அமையும். ஞானத்திற்குரிய அறிவும் பெறலாம். எனவே, ஓம் பதஞ்சலி தேவாய நம என்று நாமஜெபம் செய்வோம். எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

மகான் பதஞ்சலி முனிவர் ஞானத்திருவடி என்னும் நூலிற்கு ஆசி வழங்கியதால், அந்நூலை தொடுபவர்கள், படிப்பவர்கள், மற்றவர்களுக்கு வாங்கிக்கொடுப்பவர்கள் எல்லா நலமும், வளமும் பெறுவார்கள் என்பது உண்மை .

 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின்

அருள் உரை

(மகான் பட்டினத்தார் பாடல்கள் )

நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப்

பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல்

போர்க்குளெம் தூதன் பிடித்திழுக்கு மப்போது

ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.

– மகான் பட்டினத்தார் – நெஞ்சொடு புலம்பல் கவி எண் 17.

நீர்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே யெண்ணில் :

கிணறு, நூறு அல்லது ஐம்பது அடி ஆழம் இருக்கும். நீர் அழுத்தத்தின் காரணமாக உள்ளிருக்கும் வெப்பம் வெளிப்படும் அந்த வெப்பம் காற்றாக மாறி நீர்க்குமிழியாக வெளியே வரும்; வந்த வினாடிக்குள் எல்லாமே காற்றில் கலந்து விடும். இந்த உடம்பு எந்த நேரத்திலும் நீர்குமிழி போன்று நிலையில்லாதது ஆகும். நீர்க்குமிழி தோன்றும் போதே அழியும் என்பது நிச்சயமே! அதுபோல இந்த உடலும் அழிந்துவிடும் என்பது நிச்சயம். நீர்குமிழிக்கு ஒப்பான இந்த உடம்பை அழியாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆசான் பட்டினத்தார் அவர்கள் ஆசான் அகத்தீசன் ஆசிகொண்டு தவமுயற்சியால் உடம்பை உறுதிப்படுத்திக் கொண்டார். அதாவது உடம்பிலுள்ள மாசுநீக்கி சுத்ததேகி ஆகிவிட்டார். அசுத்தமும் சுத்தமும் உடைய இந்த உடம்பை ஆசான் துணை கொண்டு தவமுயற்சியால் சத்அசத்தாகிய இந்த உடம்பிலுள்ள அசத்தை நீக்கி சத்தை நிலைநிறுத்தி கொண்டார். அதாவது சாத்து என்பது சுத்த சுக்கிலமாகும். சுக்கிலம் சத்தும் அசத்துமாக இருக்கும். அசத்தாகிய சுக்கிலம் நீங்கினால் சுத்த சுக்கிலமாகிய சத்து பலகோடி யுகங்கள் நம்மை வாழ்விக்கும். ஞானிகள் அத்துணைபேருமே சத் – அசத்தை அறிந்தவர்களே ஆவார்கள். சாத்தாகிய சுக்கிலத்தை நிலைப்படுத்திக் கொள்வதே சிறப்பறிவாகும்.

சுக்கிலமென்ற அந்த சத்தே அமிழ்தமாக மாறும். அந்த அமிழ்தத்தை உண்பவர்க்கு என்றும் மரணம் நேராது; நரைதிரை மாறும். இதுபோன்ற இப்பேர்ப்பட்ட வாய்ப்பு மனித தேகத்திற்கு இருந்தாலும் தக்க ஆசானை நாடி இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான சத் மார்க்கம் அதாவது சன்மார்க்கம். ஆசான் பட்டினத்தார் ஆசி இல்லாமல் இதை அறிய முடியாது.

 புத்திதரும் வித்தை தரும் பொல்லாப்பில் லாமல்நெஞ்சே!

சித்திமுத்தி பேரின்பம் சேர்ந்திடலாம்; நித்த நித்தம்

 தானந்த மானதொரு சற்குருவோ டேபழகி

ஆனந்த முண்டிருந்தக் கால்.

– மகான் பட்டினத்தார் ஞானம் 67.

மகான் பட்டினத்தார் திருவடியை பூஜிப்பவர்க்கு சிறப்பறிவு உண்டாகும். வித்தை என்பது பல்வேறு வகையான தொழில்களையும், தொழில் நுட்பத்தையும் புரிந்து செயல்படும் அறிவும் மகான் பட்டினத்தார் ஆசியால் கிடைக்கும். பொல்லாப்பென்பது ஆசான் அருள் பெற்ற மக்களுக்கு எவ்வித தீமையும் அணுகாது. தான் மேற்கொள்ளும் தவவாழ்க்கைக்கு இடையூறு வராது காத்து இரட்சிப்பார். மேலும் ஞானமுக்தியும் சித்தியும் பெறுவார். முக்தி என்பது நிலைமுன் அனுபவம் ஆகும். சித்தி என்பது நிலைசேர்ந்த அனுபவமாகும். தவத்தின் வெற்றி என்பதே ஆறாதாரத்தையும் கடந்து சுழிமுனையை அறிவதாகும். சுழிமுனை திறந்து சோதி காண்பதே நிலைசேர்ந்த அனுபவமாகும். சுழிமுனையை திறந்து ஜோதி கண்டவர்கள் இனி பிறக்கமாட்டார்கள்; நரைதிரை மாறும்; உடம்பு ஒளி உடம்பாகும். இதற்கெல்லாம் மகான் பட்டினத்தார் ஆசி வேண்டும்.

இந்த பாடல் பட்டினத்தார் ஞானம் 100ல் 67வது பாடலாக அமைத்துள்ளார். இதில் குரு அருள் பெற்றால் வரும் நன்மைபற்றி பேசுகிறார்.

தினம் தினமும் ஆசான் மகான் பட்டினத்தாரின் தொடர்பு, அதாவது ”ஓம் மகான் பட்டினத்தார் திருவடிகள் போற்றி” என்று நாமஜெபமாகிய பூஜை செய்துவந்தால் பேரானந்தத்தில் என்றும் திளைத்திருப்பார்கள். சொல்லிப் பாருங்களேன்! “ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி” என்று , வரும் நன்மையை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

மகான் பட்டினத்தார் திருவடியை பூசிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் நீடிய ஆயுளும் உண்டாகும். மேலும் இல்லறமும் சிறக்கும்; செல்வநிலையும் பெருகும்; வறுமையென்ற பேச்சே அவர் வாழ்வில் இருக்காது. அவர் விரும்புகின்ற அனைத்தும் கைகூடும். மகான் பட்டினத்தார் அவர்கள் முக்காலமும் உணர்ந்த முனிவராவார்; ஒளி உடம்பு பெற்றவராவார். அவர் யுகயுகமாக இருந்து அடியவர்களுக்கு அருள் செய்யும் வல்லவராவார். அவர் திருவடியை பூசிப்பவர்கள் மரணமில்லா பெருவாழ்வு பெறுவார்கள். “ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி” என்று தினமும் பூசித்தால் அவர் செய்த பாவங்களெல்லாம் நீங்கி புண்ணியவான் ஆவார். மகான் பட்டினத்தார் கப்பல் வியாபாரம் செய்து ஈட்டிய பொருளையெல்லாம் ஏழைஎளிய மக்களுக்கு வாரிவாரிவழங்கிய வள்ளலாவார். பலகோடிப் பொருள் இருந்தாலும் கொடுக்கும் மனம் இல்லையென்றால் அவர் சாதாரண மனிதனே ஆவாரே

  தவிர, நிலை உயர்ந்தவர் ஆகார். நிலை உயர்ந்தவரெல்லாம், புண்ணியம் செய்தவர்களே ஆவார். பொருள் இருந்தும் புண்ணியம் செய்யாதவர்கள் பொருளிருந்தும் வறியவரே ஆவார். எனவே ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகிறவர்கள், காலம் உள்ள போதே, செல்வமுள்ள போதே அறப்பணிகள் செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ள வேண்டும். ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு குரு அருள் வேண்டும். மகான் பட்டினத்தாரே நமக்கு சற்குருவாக இருந்து அருள் செய்வார்.

போற்றுங்கள்! பட்டினத்தார் திருவடியை! பேரின்பம் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள் !

ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி

வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்

பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக் குள்ளாகித்

 தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை யானேனே!

– மகான் பட்டினத்தார் பாடல், நெஞ்சோடு புலம்பல் 25.

மகான் பட்டினத்தார் திருவடியை யார் பயபக்தியுடன் பூசிக்கிறார்களோ அவர்களை காத்து இரட்சிப்பதோடு மட்டுமல்லாது அவருக்கு ஞானவாழ்வான , மேலான வாழ்வை தரக்கூடிய வல்லவராவார் மகான் பட்டினத்தார். ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகிறவர்களுக்கு குரு அருள் வேண்டும். குரு அருள் இருந்தால்தான் நிலையில்லாத ஒன்றை நிலையென்று எண்ணி மயங்கமாட்டார்கள். ஆசிபெறாதவர்கள் எல்லாம் அழகிய கூந்தலை உடைய அழகான மனைவியின் மேல் மயக்கத்திற்கு உள்ளாகி வாழ்நாளை வீண் நாளாக ஆக்குகின்றவர்கள் இவர்கள். முதுமை வந்து ஈளையும் இருமலுடன் தனிமைப்பட்டு கேட்பாரற்று கிடப்பார்கள். இவர்கள் தூண்டிலில் அகப்பட்ட கெண்டைமீன் துடிப்பது போல் துடிப்பார்கள்.

அழகு என்பது மாலை வெயிலின் மஞ்சள் நிறம் போன்றதாகும். செல்வமும் நிலையில்லாத ஒன்றாகும். நிலையில்லாத ஒன்றை நிலையென்று எண்ணி மயங்குகின்றவர்கள் எல்லாம் சொல்லவொண்ணா துன்பத்திற்கு ஆட்படுவார்கள். தக்க ஆசான் துணை இருந்தால் இதை முன்னமே உணர்ந்து தம்மை தற்காத்துக் கொள்ளலாம். மகான் பட்டினத்தாரை தினம் பூசிப்பவர்கள் அநித்தியத்தை நித்தியமென்று எண்ணி மயங்கமாட்டார்கள்.

மகான் பட்டினத்தாரை பூசிப்பவர்கள் சிந்தையில், மகான் பட்டினத்தார் தங்கியிருந்து, அவ்வப்போது எப்படி நடந்து கொண்டு ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ளலாம் என்பதை உணர்த்துவார். மகான் பட்டினத்தாரை

  பூசிப்பவர்கள் இல்லறத்திலிருந்தாலும் அவர்களது சிந்தை மகான் பட்டினத்தார் திருவடியையே சிந்தித்து இருக்கும். அதனால் அவர்களுக்கு எந்த துன்பமும் அணுகாது. போற்றுவோம் பட்டினத்தார் திருவடியை! பெறுவோம் பேரின்ப வாழ்வை!

மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந் தன்வாயில்மட்டே

இனமான சுற்றம் மயான மட்டே வழிக் கேது துணை

தினையாம் அளவெள் ளளவா கினுமுன்பு செய்ததவந்

தனையாள் என்றும் பரலோகஞ் சித்திக்கும் சாத்தியமே.

– மகான் பட்டினத்தார் பாடல், பொது 12.

உலகத்தில் விவசாயம், உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகிய நான்குவகையும் சிறப்பாக செய்து பொருளீட்டுவார்கள். பொருளீட்டி நல்வாழ்வு வாழவேண்டுமென்று நினைப்பார்கள். முன் செய்த நல்வினை இருக்கும் வரையில் இவர்கள் விரும்பியதெல்லாம் கைகூடும். மேலும் மகிழ்ச்சியும் அடைவார்கள். ஆனால் இவர்கள் என்று இறந்து போவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. திடீரென அவர்கள் மாரடைப்பினாலோ, விபத்தினாலோ, நோய்வாய்ப்பட்டோ இறந்துவிடுவார்கள். இவர்கள் திறமையாக செய்த தொழில்களும் அதனால் வந்த செல்வத்தினையும் சேர்த்து வைத்திருப்பார்கள். மேலும் புகழுடனும் வாழ்ந்திருப்பார்கள். இவர்கள் இறந்தபின் இவர்களால் பெறப்பட்ட செல்வமும், மனைவியும், பாசமுள்ள பிள்ளைகளும், மற்றமற்ற புகழும் சிறப்புகள் அத்தனையும் தன்வீட்டு வாசலுடன் நின்றுவிடும்.

இவர் இறந்தபின் இவர்களது இனத்தை சேர்ந்தவர்களும் அன்பர்களும், நண்பர்களும் சுடுகாட்டோடு நின்றுவிடுவார்கள். இவர்களுக்கு உற்ற துணையாக இருப்பது முன்ஜென்மத்தில் ஞானிகள் திருவடியைப்பற்றி பூசித்து ஆசிபெற்றிருந்தால் மட்டும், அது துணையாக வரும். இனி எடுக்கும் ஜென்மங்களில் எந்த ஞானியின் திருவடியை பூசித்தாரோ அந்த ஜென்மங்களில் அந்த ஞானி அவ்வப்போது வந்து பாதுகாப்பு தந்தும், சிந்தையில் சார்ந்திருந்தும், தக்க வழிகளை போதிப்பார்கள். எனவே, இவர்கள் செய்த பூஜைதான் வழிவழியாக வந்து உதவி செய்யும். அதனால் தான் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சித்தர்கள் போற்றித் தொகுப்பு என்னும் நூலை வெளியிட்டு உள்ளது. அதில் 131 மகான்களை அறிமுகப்படுத்தி மக்கள் எல்லோரும் நித்தியப்பாராயணம் செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்று வெளியிட்டுள்ளார்கள். அந்த போற்றித் தொகுப்பை நித்திய பாராயணம் செய்து தன் வாழ்நாளில் பல நன்மைகளை அடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

போற்றித்தொகுப்பில் உள்ள 131 மகான்களும் மிகப்பெரிய புண்ணியம் செய்த மகான்களாவர். இவர்கள் நாமத்தை தினம்தினம் சொல்லச்சொல்ல நாம் செய்த பாவங்களெல்லாம் நீங்கிவிடும்; புண்ணியமும் பெருகிவிடும்; மரணமில்லா பெருவாழ்வும் கைகூடும். மனிதனாகப் பிறந்தால் குரு அருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த குரு அருளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் சித்தர்கள் போற்றித் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. போற்றுவோம் ஞானிகள் திருவடியை! பெறுவோம் பேரின்ப வாழ்வை!

தினையாமளவு எள்ளளவாகினும் என்பது – ஒரு கணப்பொழுது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கணப்பொழுதேனும் “ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி” என்று நினைத்து பூசித்தால் நாம் எடுத்த ஜென்மத்திற்கு துணையாக இருப்பதோடு அல்லாது, மேலான ஞானவாழ்வையும் தருவார்கள்.

வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்

போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தால்

ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம் தாம்பொழுது

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே!

– மகான் பட்டினத்தார் பாடல் பொது 11.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் மனிதன் கெடுகின்றான் என்பதை அறிந்த போதும் புண்ணியபலமும் அருள் பலமும் இல்லாததால் வெல்லமுடியவில்லை. ஞானியர் திருவடியை அதாவது மகான் பட்டினத்தார் போன்ற ஞானியர்கள் திருவடியை பூசிப்பதால் அருள்பலமும், மனமுவந்து செய்த அன்னதானத்தால் புண்ணிய பலமும் உள்ளதை உள்ளவாறு உணர்கின்ற அறிவும் வரும். அதாவது நித்தியத்தை நித்தியமென்று உணருகின்ற அறிவும் அநித்தியத்தை அநித்தியமென்று உணர்கின்ற அறிவும் எப்போது ஒருவன் பெறுகின்றானோ அன்றே அவன் உண்மைப்பொருளை அறிந்தவனாவான். அவன் தான் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையை விட்டு ஒழித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான். வேதத்தின் உட்பொருள் எதுவென்றால், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையை ஒழிப்பதுதான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைதான் மனிதவர்க்கத்தை கெடுக்கின்றது. சூரியசந்திர வெளிச்சம்போல் எல்லோருக்கும் இது தெரிந்த போதிலும் இந்த மூவாசையை வெல்ல முடியாது. ஆசான் உபதேசமும், புண்ணிய பலமும் இருந்தால்தான் இந்த மூவாசையை வெல்லலாம்; வென்றவன் வீடுபேறு அடைகிறான். வெல்லாதவன் மீண்டும் பிறவிக்கடலில் அழுந்துவான். தினமும் “ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி” என்று நாமஜெபமாகிய பூஜை செய்தால் வெல்ல முடியாததை வெல்லலாம். என்றும் அவர்களுக்கு மரணபயம் இல்லை. என்றும் வெற்றியே அன்றி தோல்வியே இல்லை.

பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால்

இறவா திருக்க மருந்துண்டு காண் இது வெப்படியோ

அறமார் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்

மறவா திருமன மேஅது காணன் மருந்துனக்கே.

– மகான் பட்டினத்தார் பாடல், திருத்தில்லை 16.

முத்தொழில் செய்யும் வல்லமை உள்ளவர் இறைவன். அதாவது ஆக்கல், காத்தல், அழித்தல் (உயிர்களை தோற்றுவித்தல், வாழ்வித்தல், அழித்தல்) என்ற முத்தொழிலிலும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கும். மகான் பட்டினத்தார் “பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்” என்கிறார். மனிதனுக்கு மட்டுமே பிறவாதிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசான் பட்டினத்தாரையும், தில்லைவாழ் அம்பலவாணரையும் பூசித்தால் பிறவாதிருக்க வரம் பெறலாம். முன்செய்த வினையின் காரணமாக பிறந்து விட்டாலும், இறவாதிருக்க மருந்து ஒன்று உண்டு. அது எதுவென்றால் அறக்கடலாக விளங்குகின்ற தில்லை அம்பலவாணன் திருவடியை மறவாமல் பூசிப்பவர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு கைகூடும்.

இறப்பதும், பிறப்பதும் இறைவன் கையில் உள்ளது. இதை மாற்ற யாராலும் முடியாது. ஆனால் முடியும்! ஆசான் பட்டினத்தார் திருவடியை பூசிப்பவர்கள் இறக்கமாட்டார்கள். அவரது திருவடியை பூசித்தால் இறவாத வரமும் பெறலாம். எல்லாம்வல்ல இறைவன் முத்தொழிலிற்கு அதிபதி அதை மாற்ற வல்லவர்கள் மகான் பட்டினத்தார் போன்ற ஞானிகளே !

முதலில் மனிதன் சிந்தனையாக இருந்தான். அதாவது பெண்ணுடன் கூட நினைக்கும் பொழுதுவரை சிந்தனையாகத்தான் இருந்தான். பிறகு பெண்ணுறவு கொண்டபின் பஞ்சபூத சாரமாகிய சுக்கிலம், அதே பஞ்சபூத சாரமாகிய பெண்பாலிலுள்ள சுரோணிதமும் இரண்டும் சேர்ந்து கருப்பையில் தங்கி பத்துமாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. அந்த சிசு தாயின் மூச்சுக்காற்று இயக்கத்தால் தான் வளர்ச்சிப் பெற்று வருகிறது. பின் குழந்தை பிறந்த உடன், தாயின் சுவாசத்தால் வளர்ந்த குழந்தை தாயின் சுவாசத்தாலே வாழ்ந்து வருகிறது.

நமது உயிர் தாயின் உயிர். அதாவது தாயின் மூச்சுக்காற்று இயக்கத்தால் வந்த மனிதனுக்கு அம்மூச்சுக்காற்று இயக்கமே உயிர்வாழ காரணமாக உள்ளது. எனவே, நமது உயிர் தாயின் உயிர்தான். இந்த உயிரை நிலைப்படுத்திக் கொள்வதற்கு அதே மூச்சுக்காற்றுதான் துணையாக இருக்கும். யோகாப்பியாசம் செய்பவர்கள் அந்த மூச்சுக்காற்றுத் துணைகொண்டு வாசிப்பழக்கம் (வாசிப்பயிற்சி) அறிவார்கள். வாசிப்பழக்கம் (வாசிப்பயிற்சி) அறிந்தவர்கள் ஆசான் துணைகொண்டு இடகலையாகிய சந்திரகலையையும் பின்கலையாகிய சூரியகலையையும் சேர்த்து

ரேசித்து பூரித்து கும்பித்து புருவமத்தியாகிய சுழிமுனையில் ஸ்தம்பித்தால் இனி பிறவாதிருக்கலாம். இந்த செயல் வாசிப்பழக்கம் அறிந்தவர்களுக்குத்தான் கைகூடும். ஆகவே தாயின் உயிராகிய மூச்சுக்காற்றே வீடுபேறு அடையவும் செய்யும். இவையெல்லாம் புண்ணியவானாகிய மகான் பட்டினத்தார் ஆசி இல்லாமல் வாசியும் வசப்படாது; வீடுபேறும் அடையமுடியாது. ஆகவே மகான் பட்டினத்தார் போன்ற ஞானிகளின் குரு அருள் பெற்றுத்தான் செய்ய வேண்டும்.

குரு அருள் இருந்தால்தான் வாசிவசப்படவும், வீடுபேறு அடையவும் முடியும். மூச்சுக்காற்றின் இயக்கத்தை அறிந்தால் இறவாதிருக்கலாம்; அறியாவிட்டால் இறந்து போவர். மூச்சுக்காற்றை அறிந்தவர்கள் மோட்சலாபம் பெறுவார்கள்; அறியாதவர்கள் சுடுகாடு போவர். ஆகவே மகான் பட்டினத்தார் திருவடியைப் போற்றி வீடுபேறு அடைவோம்! வெற்றி பெறுவோம்!!

சிவயோகி ஞானி செறிந்த அத் தேசம்

அவயோகம் இன்றி அறிவோருண் டாகும்

நவயோகங் கைகூடு நல்லியல் காணும்

பவயோகம் இன்றிப் பரலோக மாமே.

– திருமந்திரம் 1882.

சிவயோகி ஞானி செறிந்த அத்தேசம் – சிவயோகியாகிய ஞானி தங்கியுள்ள அப்பிரதேசம். அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் – கெட்ட சேர்க்கையின்றி அறிவுடையோர் உதிக்கக் காரணமாகும். நவயோகம் கைகூடும் நல்லியல் காணும் – புதிய யோகப் பயன்கள் கிட்டி மக்களிடம் நல்ல பண்புகள் விளங்கும். பவயோகம் இன்றிப் பரலோகமாமே – பிறவிக்குக் காரணமாகிய மலச் சேர்க்கையின்றிப் பரலோகம் உண்டாகும்.

சிவஞானி செறிந்த தேசம் பரலோகமாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப்

பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்

மெய்யொன்று சாரச்செவியொன்று கேட்க விரும்புமியான்

செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே!

– மகான் பட்டினத்தார் பாடல், பொது 4.

ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புகின்றவர்கள் பூஜை செய்யும் பொழுது விவசாயம், உத்தியோகம், தொழில், வியாபாரம் இன்னும் பலவற்றில் கருத்தை செலுத்தக்கூடாது. அப்படி செலுத்தினால் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியாது. இறையருளை பெறுவதற்கு மனம் ஒருநிலைப்படவேண்டும். மனம் ஒருநிலைப்பட

வேண்டுமென்றால் முற்றுப்பெற்ற முனிவரும் மகானுமாகிய பட்டினத்தார் திருவடியை தினம் தினம் சலிப்பில்லாமல் பூசித்து ஆசிபெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பூஜையென்ற பெயரில் கையொன்று செய்யவும், விழி ஒன்று நாடவும் கருத்து ஒன்றை எண்ணவும். பொய்யொன்று வஞ்சக நா ஒன்று பேசவும், துர்நாற்றமுள்ள இந்த உடம்பு பிறிதொன்றை நாடவும் செய்யும். செவியானது தேவையற்றவைகளை கேட்கவும் செய்யும். இப்படி உள்ளவர்கள் பூசை செய்வதால் எந்த பலனும் கிட்டாது. எனவே வினை தீர்க்கும் கடவுள் அருளைப்பெற வேண்டுமென்றால் மனம் ஒருநிலைப்பட்டு பூசைசெய்ய வேண்டும்.

குறிப்பு 1 – இப்பாடல் மகான் பட்டினத்தார் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போலிருந்தாலும் இது மற்றவர்களுக்கும் பொருந்தும்.

குறிப்பு 2 – மகான் பட்டினத்தார் ஆசி பெற்றவர்களுக்கு மனம் சொன்னபடி கேட்கும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந் தன்வாயில்மட்டே

இனமான சுற்றம் மயான மட்டே வழிக் கேது துணை

தினையாம் அளவெள் ளளவா கினுமுன்பு செய்ததவந்

தனையாள என்றும் பரலோகஞ் சித்திக்கும் சாத்தியமே.

– மகான் பட்டினத்தார் பாடல், பொது 12.

 அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக

மெத்தியமாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு

கைத்தலைமேல் வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே

பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.

– மகான் பட்டினத்தார் பாடல், பொது 13.

குறிப்பு 1 – பட்டினத்தார் பாடல் – பொது, 12ம் பாட்டைப் போன்றே இருந்தாலும் முன்ஜென்மத்தில் செய்த தவம் தனக்கு துணையாக இருக்கும் என்று பாடல் 12-ல் எழுதினார். இந்த பாட்டில் அதாவது பொது 13ல் பாவ புண்ணியம் தொடரும் என்று கூறுகிறார்.

அத்தம் என்பது செல்வமாகும். தாம் சேர்த்த செல்வமும், புகழான வாழ்வும், தன் வீட்டோடு நின்று விடும். மனைவியும், வீதியோடு நின்று விடுவாள். பிள்ளைகளும் தந்தை இறந்துவிட்டால் மனம் குமுறிகுமுறி அழுவார்கள். அதுவும் சுடுகாட்டோடு நின்றுவிடும். ஆனால் நாம் செய்த பாவபுண்ணியங்கள் மட்டும் நம்மை தொடர்ந்து வரும். மனைவியும், மக்களும், செல்வமும் மற்ற வாழ்வனைத்தும் ஒரு எல்லைக்குட்பட்டதே. நம்மை தொடர்வது நாம் செய்த பாவபுண்ணியமே. எனவே

  இல்லறத்தில் இருந்தாலும் முயன்று புண்ணியம் செய்து கொண்டேயிருக்க வேண்டும். அது இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக இருக்கும். அறிவுடைய இல்லறத்தார்கள் மட்டும்தான் நிலையாமையை உணர்ந்து குரு அருளையும், புண்ணியத்தையும் பெறுவார்கள். இப்பிறப்பில் செய்யக்கூடிய புண்ணியமும் ஞானிகள் திருவடியை பூசித்து பெற்ற அருள்பலமும் அதாவது பட்டினத்தார் போன்ற மகான்களை பூசித்து பெற்ற அருள் பலமும், நாம் எடுக்கும் ஜென்மங்கள் தோறும் துணையாக இருக்கும்.

புண்ணியபலத்தையும், அருள் பலத்தையும் பெறுவதுதான் சிறப்பறிவாகும். தக்க ஆசான் துணையிருந்தால் இதுபோன்ற சிறப்பறிவு நமக்கு வரும். புண்ணியவான் ஆகிய பட்டினத்தார் திருவடியை பூசிப்போம்! புண்ணியம் பெற்று இன்புற்று வாழ்வோம்!

குறிப்பு 1 – மேற்கண்ட பாடல் மனையாளும் மக்களும்… என்ற பட்டினத்தார் பாட்டைப்போன்றே இருந்தாலும் பொது – பாடல் எண் 12ல் முன் ஜென்மத்தில் செய்த தவம் தனக்கு துணையாக வரும் என்று எழுதினார். அத்தமும் வாழ்வும்…. என்ற பாடல் பொது எண் 13ல் அதாவது இந்தப்பாடலில் பாவமும் புண்ணியமும் தொடரும் என்று கூறுகிறார்.

மையாடுகண்ணியு மைந்தரும் வாழ்வும் மனையுஞ்செந்தீ

ஐயாநின் மாயையுருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே

மெய்யாய் இருந்ததுநாட்செல நாட்செல வெட்ட வெறும்

பொய்யாய்ப் பழங்கதை யாய்க்கன வாய்மெல்லப் போனதுவே

– மகான் பட்டினத்தார் பாடல், பொது 52.

சில பெண்கள் இயல்பாகவே அழகாய் இருப்பார்கள். மேலும் கண்களுக்கு மைதீட்டினால் மேலும் அழகு கூடும். கன்னிப்பெண்ணிற்கு திருமணம் ஆனபின் இயல்பான அழகு குறையும். மேலும் நாளுக்கு நாள் அழகு குறையும், புத்திர பாக்கியமும் உண்டாகும், நல்ல வாழ்வும் வாழ்வார்கள். நல்ல வீடும் இருக்கும். மனைவியும், நல்ல மனையும், நல்வாழ்வும், நல்ல புத்திரர்களும் கடவுளால் கொடுக்கப்பட்டதாகும். இவர்களுக்கு முதுமை வந்தபின் பேரப்பிள்ளைகளை தூக்குவதும், கொஞ்சுவதுமாக இருப்பார்கள். இவர்கள் காலம் முடிந்துவிடும். பிறகு மகன், மகள்கள் வாழ்வும் இப்படித்தான் முடியும். யாரும் நிரந்திரமாக வாழ்வது இல்லை. இதெல்லாம் கனவைப்போன்று நிலையில்லாத வாழ்வாக முடியும். இவர்கள் கனவாய் பழங்கதையாய் போகாமல் தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. மகான் பட்டினத்தார் அவர்களை இல்லறத்தில் இருந்து கொண்டே தினமும் மகான் பட்டினத்தாரை பூசித்தால் நமக்கு மரணமில்லா பெருவாழ்வு தருவார்கள். அவர்கள்

திருவடியை, அதாவது மகான் பட்டினத்தார் திருவடியை பூசிக்க பூசிக்க நம்மைப்பற்றி நாமே அதாவது தன்னைப்பற்றி அறியக்கூடிய அறிவு உண்டாகும். நாம் மூச்சுக்காற்று இயக்கத்தால் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். நாளொன்றிற்கு 21,600 முறை சுவாசமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆசான் துணைகொண்டு மூச்சுக்காற்றின் இயல்பை அறிந்து பிராணாயாம பயிற்சியை 10 நிமிடம் (வாசிப்பழக்கம்) மேற்கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து வாசிப்பழக்கம் மேற்கொள்ள வேண்டும். தினம் தினமும் பட்டினத்தார் திருவடியை பூசிக்க பூசிக்க அவர் நம் சிந்தையில் சார்ந்திருந்து மூச்சுக்காற்று இயக்கத்தையும், வாசி வசப்படும் மார்க்கத்தையும் நமக்கு உணர்த்துவார். பிறகு மூச்சுக்காற்று இயக்கத்தில் சார்ந்திருந்து இடகலையாகிய சந்திரகலையையும், பின்கலையாகிய சூரியகலையையும் நன்கு பயிற்சி ஏற்பட்டபின் (முழுமை அடைந்தபின்) ஆசான் பட்டினத்தார் அவர்கள் மூச்சுகாற்றோடு சார்ந்திருந்து வாசியை நடத்தித் தருவார். வாசியை நடத்தித் தருவதோடு மட்டுமல்லாது நம் உடம்பில் மூலாதாரத்தில் தங்கி வாசியோடு கலந்து அசுத்த தேகத்தை சிறிது சிறிதாக மாற்றி கபத்தையும் அறுத்து மெல்லமெல்ல இந்த உடம்பை பொன்னுடம்பாக்கி அதாவது சுத்ததேகி ஆக்குவார். மும்மல கசடும் அற்றுப்போகச் செய்வார். என்றும் பதினாறு வயதுடைய இளைஞனாக வாழலாம்.

மூச்சுக்காற்று இயக்கத்தை அறிந்து இடகலையும், பின்கலையும் சேர்த்து சுழிமுனையாகிய புருவமத்தியில் செலுத்தி தானும் உடலில் தங்கியிருந்து உடல் மாசு, மனமாசையெல்லாம் நீக்கியும் நம்மையும் ஞானியாக்குவார்.

குறிப்பு 1 – மகான் பட்டினத்தார் திருவடியை பூசிக்க பூசிக்க உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அது மாசுபடும் விதத்தைப் பற்றியும் நமக்கு உணர்த்தி, உடல் மாசு நீக்குவதற்குரிய அறிவையும், உயிர்மாசை நீக்குவதற்குரிய அறிவையும் தந்து மும்மலக்குற்றத்தை நீக்கியும் இந்த உடம்பை பொன்னுடம்பாக்கி, என்றும் அழியாத உடம்பை தருவார் ஆசான் பட்டினத்தார் அவர்கள். ஆகவே பக்தியே முக்தியையும், சித்தியையும் தரும்.

குறிப்பு 2 – பிராணாயாமம் என்னும் வாசிப்பயிற்சியை தக்க ஆசானிடம் கேட்டு செய்ய வேண்டும், தக்க ஆசானிடம் கேட்காமல் செய்தால் நோய்வாய்ப்படுவார்கள்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க

32ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் தீட்சை விழா

21.9.2008 ஞாயிற்றுக்கிழமை – ஓங்காரக்குடில், துறையூர்.

 துறையூர்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை

அன்னை மருத்துவமனை

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை

மற்றும்

திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கத்துடன்

இணைந்து நடத்தும்

(இலவச கண் சிகிச்சை முகாம்) 👓

|இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.

நாள் : 09.08.2008, 13.09.2008 சனி (பிரதி மாதம் 2ம் சனி)

நேரம் : காலை 8.30 மணிமுதல் 12.00 மணிவரை

கண்ணில் சீழ் வடிதல், தூரப்பார்வை குறைவு, கிட்டப்பார்வை, சதை வளர்ச்சி, பார்வை மங்கல், கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், கண்புரை நோய், தலைவலி மேலும் I.O.L. லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் – 94434 21935 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿  ஞானிகள் திருஉருவப்படங்கள் மற்றும் ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர். 04327-255784, செல்: 98947 55784 54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,      

“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

குருவருள் வேண்டி

கணேஷ் ஹார்டுவேர்ஸ்

& அலுமினியம்,

No.72A – 100 அடி ரோடு, வடபழனி,

சென்னை – 600 026.

Cell : 98400 – 20828. 0 044 – 23651284, 23652568.

”அன்னதானம் செய்தால்

துன்பங்கள் தீரும்”

சுந்தரானந்தர்

எலக்ட்ரிகல்ஸ்

54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,

சென்னை – 600 026.

 0 044-24720499, 23721160.

மகான் அம்பிகானந்தர்

டைல்ஸ் & சானிட்டரிவேர்ஸ்

பெருமான் போனில் தெரு, பிரசன்ன மஹால்

துறையூர்.

Regency

 DJOHNSON

Parryware

 Neycer

ASR.ராஜா

98435 68696

S.திருமுகம்

98431 58696

லட்சுமி கிரில் டிசைன்ஸ்

தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்

தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்

ஊன் என்ற மந்திரமே உபதேசித்து

உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று

கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி

கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி

நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி

நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.

– மகான் கொங்கண மகரிஷி

குரு அருள் வேண்டி

 – ANU BUILDERSS

Builders & Estates

Plot No.66, 2nd Main Road,

V.G.P. Babu Nagar, Medavakkam,

Chennai – 601 302.

Phone: 2277 0495,

Cell : 94440 70495,

E-mail: anubuilders@yahoo.com

ஞானத்திருவடி – மாத இதழ்

சந்தா படிவம்

11 வருட சந்தா ரூ.120/

3 வருட சந்தா ரூ.350/

திரு/திருமதி. :

முகவரி :

பின்கோடு

போன்: (வீடு)                          – (அலுவலகம்)

(செல்)

சந்தா செலுத்தும் முறை

ரொக்கம்

DD வரைவோலை.

MO-மணியார்டர்

காசோலை (Cheque) Rs.50/-Extra

* காசோலை/வரைவோலையை Sri Agathiar Sanmaarga Charitable Trust

என்ற பெயரில் எடுக்கவும்.

* வரைவோலையை payable at Trichy (or) Thuraiyur என்று எடுக்கவும்.

தேதி :

செலுத்துபவர் கையொப்பம்

படிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

ஞானத்திருவடி – மாத இதழ்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை

ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.

ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்

.ரசீது எண் : –          -தேதி : …………. ரூபாய் : …….

 சந்தாதாரர் முகவரி மாற்றம் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

அகத்தியர் துணை

நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்

அவர்கள் தலைமையில்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்

| நித்திய செயல்பாடுகள்

காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு

ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்

தியானம் (நாமஜெபம்)

காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.

காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்

காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்

மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்

மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்

மாலை 6.30 அருட்ஜோதி வழிபாடு

தியானம் (நாமஜெபம்) ஆசான் அகத்தீசர் வழிபாடு

ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்

குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும்.

செலுத்துபவர் கையொப்பம் படிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர் இரா.மாதவன், ஓங்காரக்குடில், 113-நகர் விரிவாக்கம், துறையூர்-621010, திருச்சி மாவட்டம். செல்: 98424 55661 ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும் அச்சிட்டோர் : வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.    

Leave a Reply

Your email address will not be published.

Lucky Wisdom Persons

 • Visits Today: 459
 • Total Visits: 270221
 • Total Visitors: 1
 • Total Countries: 171

Watch colorized old Tamil movie
Secrets of Lord Kartikeya semen retention முருகன் ரகசியம் விந்துவை பற்றி சித்தர்