அகத்தியர் துணை நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்
நித்திய செயல்பாடுகள்
“வான்சிறப்பு”
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. விண் இன்று பொய்ப்பின், விரிநீர் வியனுலகத்து உள் நின்று உடற்றும் பசி. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்.
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்) காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம். காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம் காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம் மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம் மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம் மாலை 6.30 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்) ஆசான் அகத்தீசர் வழிபாடு ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்கா தாகி விடின்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். நீர் இன்று அமையாது உலகெனின், யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்
இரா.மாதவன், ஓங்காரக்குடில், 113-நகர் விரிவாக்கம், துறையூர் – 621 010,
திருச்சி மாவட்டம். செல் : 98424 55661
அச்சிட்டோர் : வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
—————————————————
ஞானத்திருவடி – மாத இதழ்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை சர்வதாரி-1 வைகாசி-2
விலை : ரூ.10/சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
- 1. திருக்குறள் – வான்சிறப்பு ……………
- 2. நமது வேதம் திருக்குறள் ………
- 3. மகான் ஆதிசங்கரர் உபதேசம் ……………
- 4. சிவபுராணம்
- 5. திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் …………
- 6. பூஜித்தால் ..
- 7. ஜீவகாருண்ய ம் ……
- 8. பசியின் சகியாமை ………..
- 9. ஓங்காரக்குடில் ஆசான் அனுபவ உரை ………….
- 10. திருவடிச் சிறப்புகள் …
- 11. ஏழைகளுக்கு பசியாற்றிவைத்தால் …………….
- 12. சன்மார்க்க பயிற்சி ….
- 13. மகான் காகபுஜண்ட ர் ஆசி நூல் …………………
- 14. ஓங்காரக்குடில் செயல்பாடுகள் ……….
5 வெளியீடு – ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,
ஓங்காரக்குடில், 113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.
(0) 04327 – 256525, 255184
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.
ஞானத்திருவடி திருக்குறள்
வான்சிறப்பு – அதிகாரம் 2
நிலம், நீர், காற்று, தீ, மழை பொய்த்தால் கடல் ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களைப் சூழ்ந்த இவ்வுலகில் பசி என்னும் பற்றி வள்ளுவர் ஆங்காங்கே நோய் வருத்தி, இவ்வுலகில் உள்ள கூறினாலும், வான் சிறப்பு என்று உயிர்கள் அனைத்தும் துன்பமுறும். மழைநீருக்கு ஓர் அதிகாரத்தை மழைபொய்த்தால் உழவுத்தொழில் ஒதுக்கி அதனின் உயர்வை செய்ய முடியாது. விவசாயி வாழ விளக்குகின்றார். கடவுள் வாழ்த்துக்கு முடியாது. சிலகாலங்களில் மழை அடுத்தபடியாக மழைதான் கடவுள். பொய்த்து, இவ்வுலக மக்களை மழையின்றி இவ்வுலகம் இல்லை எனும் வருத்தும், மழை பெய்து இவ்வுலக உண்மையைக் கூறுகின்றார்.
மக்களை வாழவைக்கும். மக்களின் புல், செடி, கொடி, மரம்
துன்பத்திற்கும், இன்பத்திற்கும் போன்ற நமக்கு உணவாகப்
காரணமாக மழையே உள்ளது. பயன்படுகின்ற தாவரங்கள் மேகத்திலிருந்து
மழை விளை வதற்கு மழை நீர் பெய்யாவிட்டால் புல் முளைக்காது. இன்றியமையாததாக உள்ளது.
புல்லே முளைக்காத வறட்சியில் உணவுப் பொருள்களைச் சமைத்துச்
வேறெந்த உயிரினமும் வாழ சாப்பிடுவதற்கு நீர் தேவைப்படுகிறது.
முடியாது. நீர் இல்லாமல் உயிர் வாழமுடியாது.
மேகம், கடலிலிருந்து நீரை நமக்கு நீர் இன்றியமையாததாக
மேல் கொணர்ந்து
மழை உள்ளது. எல்லா ஜீவராசிகளின்
உண்டாக்கும். அப்போது கடலில் உயிரைக் காக்க மழை நீரே
முத்துப் போன்ற உயர்ந்த அவசியமாக உள்ளது. உணவுப்பொருள் உருவாவதற்கும்
பொருள்களும் உண்டாகும். அதனை உட்கொள்வதற்கும், மழைநீர்
அவ்வாறு மழை பெய்யாமல் இன்றியமையாதது.
இருக்குமானால், கடலுக்கும் காய், கனி உணவுகளினால், பெருமை இருக்காது. உடம்பிற்குக் கிடைக்கக்கூடிய சத்து
மழை பெய்யாது இருந்தால் உதிரமாகவும், சுக்கில சுரோணிதமாகவும் மக்களிடம் வறுமையும், பிணியும் இருக்கும். நீர்தான் பெண்களுக்கு உண்டாகும்.
அதனால் கருமுட்டையாகவும், சுரோணிதமாகவும் தேவதைகளுக்கும், தெய்வங்களுக்கும் இருக்கும். இதே நீர் காமத்திற்குக் செய்கின்ற விழாக்கள், பூஜைகள், காரணமாக உள்ளது.
வழிபாடுகள் தடைபட்டுப் போகும்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு
R.சுரேஷ் – 94434 21935
ஞானிகள் திருஉருவப்படங்கள்
மற்றும் ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு
ந.நடராஜன்,
கொள்கை பரப்பாளர், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர்.
(04327-255784, செல்: 98947 55784
—————————————————
4)
— ஞானத்திருவடி
மழை பொய்த்துப் போனால், இல்லை என்றால், மக்களுக்கு நலிந்த மக்களுக்கும், ஏழைகளுக்கும் முறையான வாழ்க்கை நிலையில்லாமல் பசியாற்ற முடியாது. ஏனைய போய்விடும். பண்புள்ள மக்களாக தர்மத்தையும் செய்ய முடியாது. தர்மம் வாழமுடியாது. சமுதாயத்தில் ஒழுக்கம் தடைபட்டுப் போகும். தன்னை மாறும், சத்தியம் இருக்காது. பொய் இறைநிலைக்கு உயர்த்திக்கொள்ளும் பேசுவார்கள். எல்லா விதமான ஞானியர்கள், தவமும் செய்ய முடியாத கேடுகளும் விளையும். நிலை ஏற்பட்டுவிடும். மழைநீர்
“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம” 3
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -குறள் 226.
குருவருள் வேண்டி கணேஷ் ஹார்ட்வேர்ஸ்
& அலுமினியம்,
No.72A – 100 அடி ரோடு, வடபழனி, சென்னை – 600 026.
Cell: 98400 – 20828.
0 044 – 23651284, 23652568. ‘அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்”
அகத்தீசா என்றால்
அனைத்தும் பெறலாம்
1. அன்பு பொருந்தி வாழ அகத்தீசா என்று கூறுங்கள்..
ஆக்கம் பெற்று வாழ அகத்தீசா என்று கூறுங்கள்.
3. இல்லறம் சிறக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஈகை குணம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
5. உண்மைப்பொருள் அறிய அகத்தீசா என்று கூறுங்கள்.
ஊக்கம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
சுந்தரானந்தர் எலக்ட்ரிகல்ஸ்
–
எண்ணம் சித்திக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஏற்றம் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
9. ஐயம் நீங்கிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஒண்பொருள் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
11. ஓங்காரம் கண்டிட அகத்தீசா என்று கூறுங்கள்.
54- தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி, சென்னை – 600 026.
0 044-24720499, 23721160.
12. ஔடதம் அறிந்திட அகத்தீசா என்று கூறுங்கள்.
—————————————————
5)
– ஞானத்திருவடி
கஞானத்திருவடி
கல்விக்கடல் திருவள்ளுவர்
“நமது வேதம் திருக்குறள்”
* திருக்குறளைப் பார்த்தால் கடவுளைப் பார்த்ததாக அர்த்தம்.
* திருக்குறளைத் தொட்டால் கடவுளின் திருவடிகளைத் தொட்டதாக அர்த்த ம்.
* திருக்குறளைப் படித்தால் கடவுளிடம் தொடர்பு கொண்டதாக அர்த்தம்.
* திருக்குறள் படிப்பதைக் கேட்டால் கடவுளின் பெருமையைக் கேட்டதாக
அர்த்த ம்
* திருக்குறள் பரப்பிரம்ம சொரூபியான சிவபெருமானே இயற்றியதாகும். * திருக்குறளில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் தெளிவாக சொல்லியிருப்பதால் அதனை பார்ப்பதும், தொடுவதும், படிப்பதும், படிக்க கேட்பதும் புண்ணியச் செயல்களாகும்.
* திருக்குறள் தெய்வத்தமிழில் சொல்லப்பட்டிருப்பதால் நமது பிள்ளைகளைத் தமிழை கற்க செய்ய வேண்டும்.
ஸ்ரீ திருக்குறளைக் கற்றால் நமது பிள்ளைகள் கடவுள் தன்மை அடைவார்கள்.
* திருக்குறளைப் போற்றுவோம்! பூஜிப்போம்! வினைகள் நீங்கி வெற்றி பெறுவோம்!!
– ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
* அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்.
– ஒளவையார்
* கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்.
– இடைக்காடர்
—————————————————
6)
– ஞானத்திருவடி
மகான் ஆதிசங்கரர் அருளிய உபதேசங்கள்
* மிகச்சிறந்த ஆபரணம் எது?
நல்லொழுக்கம்.
* நரகத்திற்கு உள்ள ஒரே வாசல் எது? காம ஆசை.
* எவன் மூடன்? விவேகமற்றவன்.
* நம் எதிரிகள் யார்? நம் இந்திரியங்கள். இவற்றை நாம்
வென்றுவிட்டால் இவற்றைப் போன்ற சிறந்த நண்பர்கள் வேறு கிடையாது. * * உலகை வென்றவன் யார்?
எவன் தன் மனதை வென்றவனோ, அவன்.
* எவன் மிகச் சிறந்த வீரன்? எவன் காம பாணத்தினால் பீடிக்கப்படுவதில்லையோ, அவன்.
* மனிதர்களைப் பீடிக்கும் வியாதி என்ன? கவலை.
* எவன் ஏழை?
எவனுடைய ஆசைக்கு அளவில்லையோ, அவன்.
* எவன் பணக்காரன்?
கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைகிறவன்.
* இரவும், பகலும் எதனை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?
வாழ்க்கையின் நிலையாமையை.
* தாமரையிலைத் தண்ணீரைப்போல நிலையற்றது எது?
யௌவனம் (இளமை அழகு) பொருள், ஆயுள்.
* மரணம் சமீபித்ததும் (நெருங்கியதும்) புத்திசாலி என்ன செய்ய வேண்டும்? திரிகரண (மனம், புத்தி, சித்தம்) சுத்தியோடு ஞானிகளை பூஜை செய்ய வேண்டும்.
—————————————————
7)
“சிவபுராணம்”
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! 10
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி!
சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! 15
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்நிறைந்து எல்லையிலாதானே! நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் 30
—————————————————
8)
* ஞானத்திருவடி
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் !
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா!
பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞ் ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே! 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே! 45
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா! உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேனார் அமுதே ! சிவபுரனே!
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
—————————————————
9)
பேராது நின்ற பெருங் கருணைப் பேராறே!
ஆரா அமுதே! அளவில்லாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே! 70
அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே! துன்னிருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் 75
நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே!
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம்காவலனே! காண்பரிய பேரொளியே!
ஆற்றின்ப வெள்ளமே! அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என்சிந்தனையுள்
ஊற்றான உண்ணாரமுதே! உடையானே!
வேற்று விகாரவிடக் குடம்பினுட் கிடப்ப
ஆற்றேன்! எம் ஐயா! அரனே! ஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! 90
அல்லற் பிறவி அறுப்பானே! ஓ என்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து
சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்
—————————————————
10)
திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம்
சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.
திருமந்திரம் – 1440.
கடவுள் இன்பத்தை ஒருவர் அறிந்து அனுபவிக்கிறார். அவர் அடைந்த கடவுள் இன்பத்தை நாம் அடைய வேண்டும் என்றால், எவர் கடவுள் நிலை அடைந்து பேரின்பத்தை பெற்றாரோ அவரது திருவடி பூஜையே முக்திக்கு வித்தாக அமையும். அவர் அடைந்த கடவுள் இன்பத்தை நூலாக தருவார். அதனை படித்துவிட்டு அதனோடு நின்றுவிடக் கூடாது. முக்த்திக்கு வித்தாகிய அவர் திருவடியை பூஜித்து ஆசி பெற்றால்தான் நாமும் கடவுள் இன்பத்தை அடைந்து மகிழலாம்.
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. திருமந்திரம் – 1581.
நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் மகான் மாணிக்கவாசகரே சிவபெருமான் ஆவார். அவரே சிவனும், எங்கும் நீக்கமற நின்று அருளும் இறைவனும் ஆவார். மேலும் அவரே பரப்பிரம்மமாகவும் இருக்கிறார் என்பது மகான் நந்தீசர் வாக்கு.
***************************************
ஞானியர்கள் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச்
செய்த ஓங்காரக்குடிலாசான், பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் அருளிய
உபதேசம்
அணுவில் அணுவைக்கண்டு அணுவில் அணுகியவர் ஆவார் மகான் மாணிக்கவாசகர். அவர் அருளியதுதான் திருவாசகமாகும். அதைப்படித்து உணர்வதற்குரிய பக்குவம் ஒருசிலருக்கு இல்லை. அந்த அளவிற்கு புண்ணிய பலமும் அருள் பலமும் ஒருசிலருக்கு இல்லை . மகான் மாணிக்கவாசகர் திருவடியைப் பூஜித்தால் புண்ணியபலமும் அருள் பலமும் பெறலாம்.
மகான் மாணிக்கவாசகர் முதுபெரும் ஞானியும் இறைவனும் ஆவார். தூலதேகம், சூட்சமதேகம், பிரணவதேகத்தை அறிந்தவர் ஆவார். அதனை
—————————————————
11)
ஞானத்திருவடி
அறிவதற்கு இடகலையையும் பிங்கலையையும் சுழிமுனையையும் அறிந்திருக்க வேண்டும். இதனை அறிந்தால்தான் தூலதேகம் சூட்சமதேகம
[ ம கா ன் மாணிக்கவாசகரிடம் நாயினும் கடையேனாகிய அதிகாலை என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அருள் செய்ய வேண்டும் எழுந்து, என்றும் பிறவிப்பிணிக்கு, மருந்தாகிய உமது திருவடியைப் பூஜித்து ஆசிபெற
நீரே எனக்கு அருள்செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள
வேண்டும். ] . பிரணவதேகத்தை அறிய முடியும். இதனை அறிவதற்கு வேதங்கள் ஆகமங்கள் சாஸ்திரங்களைப் படித்தாலும் நம்மால் அறியமுடியாது.
மகான் மாணிக்கவாசகர் திருவடியை தினசரி
காலைக்கடன்களை | முடித்துவிட்டு, சமமான இடத்தில்
வெண்ணிறத் துணியில் அமர்ந்து, நெய் அல்லது
நல்லெண்ணைய் விட்டு திருவிளக்கு ஏற்றி, நறுமணமுள்ள பத்தி வைத்தும், “ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி” என்று காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும்,முடிந்தால் இரவு 12 மணிக்கு 30 நிமிடமும் நாமஜெபமாகிய பூஜை செய்து, மகான் மாணிக்கவாசகரிடம் நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அருள்செய்யவேண்டும் என்றும், பிறவிப்பிணிக்கு மருந்தாகிய ஆசிபெற நீரே எனக்கு உமது திருவடியைப் பூஜித்து அருள்செய்ய வேண்டும் என்றும், உமது திருவருள் துணையில்லாமல் உமது திருவடியைப் பூஜிக்க .
முடியாது. உமது திருவடியைப் பூஜித்து ஆசிபெற நினைக்கிறேன். ஆனால் நான் செய்த பாவங்களோ
உமது திருவடியைப் பூஜிக்கவோ ஆசிபெறவோ தடையாக உள்ளது. நீரே எம்பால் கருணை கொண்டு என் வினைகளையெல்லாம் தீர்த்து உமது திருவடியைப் பூஜிக்கவும் நீரே எமக்கு அருள்செய்ய வேண்டுகிறேன்.
“ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி” என்று சொல்வதற்கே பலகோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். நான் கடுகளவும் புண்ணியம் செய்யவோ அதைப்பற்றி சிந்திக்கவோ அறிவில்லாதவன். இருப்பினும் பேராசைக் காரணமாக உமது திருவடியைப் பூஜித்து ஆசிபெற நினைக்கிறேன். நீர் மனமுவந்து எனக்கு அருள்செய்தாலன்றி உமது நாமத்தைச் சொல்லவோ உமது திருவடியைப் பூஜித்து அருள் பெறவோ முடியாது. இன்று முதல் என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உமது திருவடிக்கே அர்ப்பணம் செய்கிறேன். ஒரு பொருட்டாக மதிக்கத்தகாத என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஏற்று அருள் செய்ய வேண்டுகிறேன்.
உமது திருவடியைப் பூஜித்து கணக்கில் அடங்காப் பாவிகள் பாவங்களை
—————————————————
12)
– ஞானத்திருவடி
நீக்கி தன்னிகரில்லா ஞானப் பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். நானும் பாவி என்பது எனக்கும் தெரியும் உமக்கும் தெரியும். என்னைப்போன்ற பாவிகளுக்கு அருள் செய்வதனால் உமக்கு எந்த நட்டமும் வந்துவிடாது என்பது எனக்கும் தெரியும் உமக்கும் தெரியும். எனவே அடியேன் தினமும் உமது திருவடியைப் பூஜிக்கவும் உமது கருணையால் அருளிய சிவபுராணத்தை நித்தம் நித்தம் பாராயணம் செய்தும், உமது அருளைப்பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகிறேன். உமது பூரண அருளைப் பெறவும் தூலதேகத்தையும் சூட்சமதேகத்தையும், பிரணவதேகத்தையும் அறிந்து உம்மைப்போல் பரப்பிரம்மம் ஆவதற்கு நீரே எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன்.
உமது திருவருள் துணையால்தான் தொடர்ந்து வரும் பிறவியை வெல்லவும், இனி பிறவா மார்க்கத்தை அடையவும் உமது திருவடியே கதி என்று சரணடைகிறேன். அருள் செய்ய வேண்டும் என்று உமது திருவடி பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.
குறிப்பு -1 : மேற்கண்ட வேண்டுகோள்படி அன்பர்களும், தொண்டர்களும் தினமும் வேண்டியும் அவர் அருளைப் பெற்றும் அவரால் அருளப்பட்ட பெருமைக்குரிய சிவபுராணத்தை பயபக்தியுடன் நித்தமும் பாராயணம் செய்தும் வந்தால் எல்லா நலமும் வளமும் பெற்று வீடுபேறு (மோட்சம்) அடைவார்கள் என்பது சாத்தியமாகும்.
குறிப்பு – 2 : பரப்பிரம்ம சொரூபியான மகான் மாணிக்கவாசகரின் அருளைப் பெறவேண்டும் என்றால் உயிர்க்கொலைத் தவிர்த்தும், புலாலை மறுத்தும், முடிந்த அளவிற்கு பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றியும், மேலும் தாய் தந்தை மனைவி மக்கள், உடன்பிறந்தோர், சுற்றத்தார்கள், நண்பர்கள் இவர்களிடம் கனிவுடன் நடந்தும், விருந்தை உபசரித்தும் மகான் மாணிக்கவாசகர் திருவடியை பூஜித்தும் வருவதே பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றதன் பயனாகும்.
குறிப்பு – 3 : பாராயணம் செய்தால் வரும் நன்மைகள் : அருள்மணக்கும் மகான் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை பயபக்தியுடன் பாராயணம் செய்தால் முன் செய்த பாவங்கள் தீரும், பொல்லாத வறுமை தீரும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், பண்புள்ள புத்திரபாக்கியம் தோன்றும், உடல் ஆரோக்கியமும் நீடிய ஆயுளும் உண்டாகும். மேலும் நாம் மேற்கொள்ளும் விவசாயம், தொழில், உத்தியோகம், வியாபாரம் சிறப்பாக நடக்கும். அறியாமை காரணமாக இப்பிறவியில் செய்த பாவங்களும், முன் ஜென்மங்களில் செய்த பாவங்களும் நீங்கி புண்ணியம் பெருகும் மற்றும் நாம் மேற்கொள்ளும் செயல்களில் எது பாவம்? எது புண்ணியம்? என்று அறிகின்ற சிறப்பறிவு உண்டாகும். மேலும் தொடர்ந்து வருகின்ற பிறவிக்கு மும்மலமாகிய பாசம்தான் காரணம் என்பதை அறிந்து மகான் மாணிக்கவாசகர் துணைக்கொண்டு பாசவினையை அறுத்து மீண்டும் பிறவாமைக்குரிய மார்க்கத்தை உண்டுபண்ணும்.
போற்றுவோம் மாணிக்கவாசகர் திருவடியை! பெறுவோம் மரணமில்லாப் பெருவாழ்வை!!
—————————————————
13)
ஞானத்திருவடி
பூஜித்தால் பெருமைக்குரியவரை பூஜிக்க வேண்டும்
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எஃகியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
– மகான் கொங்கண மகரிஷி
மகான் கொங்கண மகரிஷி அருளிய கவியின் சாரம் :
மனிதவர்க்கத்தில் ஒரு சிலர் நெறியுடன் வாழ்ந்தும், பக்தி செலுத்தியும் வருவார்கள். நோக்கம், கடவுளை அடைய வேண்டும் என்பதற்காக. கடவுளை அடைய வேண்டும் என்றால் உண்மை பொருளை அறிந்தவர்களுடைய ஆசி வேண்டும். ஆசி இல்லாமல் நாம் என்ன முயன்றாலும் வீடுபேறு அடைய முடியாது.
வீடுபேறு அடைய விரும்புகின்றவர்கள், மகான் கொங்கண மகரிஷி அருளிய கடைக்காண்டம் 500ல் 76ஆம் கவியில் அருளியவாறு, அகத்திய மாரிஷி நமா (ஓம் அகத்தீசாய நம) என்று நாமஜெபம் செய்ய வேண்டும் என்றும், அப்படி நாமஜெபம் செய்து வந்தால் ஆசான் அகத்தீசர் அவர்கள், நமது உணர்வோடும் உணர்ச்சியோடும் நாடி நரம்புகளில் ஊடுருவி, தேகக் கசடை நீக்கி அஷ்டமா சித்தியையும் தருவார். அதுமட்டுமல்ல குளிகை என்று சொல்லப்பட்ட வாசியையும் நடத்தி தருவார். மேலும், மலமாயையும், மனமாயையும் மற்றும் தேகபந்த பாசத்தையும் நீக்கி, நமக்கு அகத்தீசர் காவி உடை தருவார். ஆசான் அகத்தீசர் காவி உடை தந்தால் அதற்கு பிறகு ஆசான் அகத்தீசர் ஆசிபெற்ற எண்ணிலடங்கா ஞானிகள் நமக்கு துணையாக இருந்து அருள் செய்வார்கள்.
எனவே, அகத்தீசர் திருவடியை உருகி தியானம் செய்து வந்தால், யாராலும் அடைய முடியாத மேற்கதி அடையலாம். அகத்தீசரை பூஜை செய்து வருகின்ற மக்களுக்கு எந்த தடைகளும் இருக்க முடியாது. அவர் ராஜயோகம் பெற்ற ஞானி ஆவார். ஆசான் அகத்தீசர், சுப்ரமணியரின் மூலக்கனலில் தோன்றியவராவார்.
எனவே, அகத்தீசரை பூஜை செய்து வருகின்ற அன்பர்களுக்கு ஆயிரத்தெட்டு அண்டத்திலுள்ள தேவர்களெல்லாம் கைகட்டி சேவை செய்வார்கள். ஆகவே, அகத்தீசர் பெருமைக்கு ஈடு இவ்வுலகில் இல்லை. எனவே, ஆசான் அகத்தீசரை பூஜிப்போம் ! எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வோம்!!
—————————————————
14)
அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய
இராமலிங்க சுவாமிகள் அருளிய
ஜீவகாருண்யம்
1. பசியென்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்றபோது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் – ஜீவகாருண்யம்.
2. பசியென்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை
அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே – ஜீவகாருண்யம்.
3. கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய ஜீவதேகங்களென்கின்ற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து
அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே – ஜீவகாருண்யம்.
4. கடவுள் இன்பத்தைப் பெறுகின்ற நிமித்தம் தேகங்களிலிருந்து குடித்தனஞ்
செய்கின்ற ஜீவரது தத்துவக் குடும்ப முழுவதும் பசியினால் நிலைதடுமாறி அழியுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அக்குடும்பம் முழுதும் நிலைபெறச் செய்வதே – ஜீவகாருண்யம்.
5. பசியென்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொல்லத்
தொடங்குந் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே – ஜீவகாருண்யம்.
6. பசியென்கிற விஷம் தலைக்கேறி ஜீவர் மயங்குந் தருணத்தில்
ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கந் தெளியச் செய்வதே – ஜீவகாருண்யம். 7. பசியென்கிற கொடுமையாகிய தேள் வயிற்றிற் புகுந்து கொட்டுகின்றபோது
கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றிக்
கலக்கத்தைத் தீர்ப்பதே – ஜீவகாருண்யம்.
8. ‘நேற்று இராப்பகல் முழுவதும் நம்மை அரைப்பங்கு கொன்றுதின்ற
பசியென்கிற பாவி இன்றும் வருமே? இதற்கென்ன செய்வோம்?’ என்று ஏக்கங் கொள்கின்ற ஏழை ஜீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் – ஜீவகாருண்யம்.
9. ‘வெயிலேறிப் போகின்றதே? இனிப் பசியென்கின்ற வேதனை வந்து சம்பவிக்குமே? இந்த விதிவசத்திற்கு என்ன செய்வது?’ என்று தேனில் விழுந்த ஈயைப் போல, திகைக்கின்ற ஏழை ஜீவர்களுடைய திகைப்பை நீக்குவது தான் – ஜீவகாருண்யம்.
– அடுத்த இதழில் தொடரும்
—————————————————
15)
ஞானத்திருவடி .
அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய
இராமலிங்க சுவாமிகள் அருளிய
பசியின் சகியாமை
வஸ்திரம், இடம், நிலம், பெண், பொருள் முதலானவைகளில்லாமல் துன்பப்படுகின்றவர்கள், அத்துன்பங்களை மனவெழுச்சியால் சகித்துக் கொண்டு உயிர் தரித்து, தங்களாற் செய்யக்கூடிய முயற்சியைச் செய்யக்கூடும்; பசியினால் துன்பம் நேரிட்டபோது மனவெழுச்சியால் அத்துன்பத்தைச் சகித்துக்கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள்.
பசி நேரிட்டபோது, பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்களென்பது சொல்ல வேண்டுவதில்லை.
உலக முழுவதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும், பசி நேரிட்ட போது, தனது அதிகார வுயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் ‘பசி நேரிட்டது, என்ன செய்வது’ என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகிறான்.
பகைவரால் எறியப்பட்டு மார்பிலுருவிய பாணத்தையும் கையால் பிடித்துக்கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும், பசி நேரிட்டபோது, சௌகரியத்தையிழந்து பசிக்கு அஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து ‘இளைப்பு வருமே! சண்டை எப்படிச் செய்வது’ என்று முறையிடுகின்றார்கள்.
இவ்வுலக போகங்களோடு இந்திரபோக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து, முற்றுந்துறந்து, அறிவை அறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும், இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும், முனிவர்களும், தபசிகளும், பசி நேரிட்டபோது, தாங்கள் தங்கள் அனுபவ லட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு (பிச்சை) வருகின்றார்கள்; பலி நேராத போது நிலை கலங்குகின்றார்கள்.
சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அதுகுறித்து உயிர்விடத்தக்க மானிகளும் பசி நேரிட்டபோது சொல்லத் தகாதவரிடத்துஞ் சொல்லி மானங் குலைகின்றார்கள்.
—————————————————–
16)
ஞானத்திருவடி
சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர்களும் பசி வந்தபோது, ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள்.
கல்வி கேள்விகளில் நிரம்பி, அறிதற்கரிய நுட்பங்களையறிந்து, செய்வதற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்க வல்லவர்களும் பசி நேரிட்டபோது, அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள்.
இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும், பசி நேரிட்ட போது புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள்.
‘நாமே பெரியர், நமக்கு மேற் பெரியரில்லை ‘ யென்று இறுமாப்படைகின்ற அகங்காரிகளும், பசி நேரிட்டபோது அகங்காரங் குலைந்து ஆகாரங் கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கின்றார்கள்.
ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது, டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள்.
இவரிவர் இப்படி இப்படியானால், ஒருவகை ஆகாரமுமில்லாத ஏழைகள் பசி நேரிட்டபோது என்ன பாடுபடார்கள்? அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரங் கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷ முண்டாகும்? அந்த சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபங் கிடைக்கும்! இப்படிப்பட்டதென்று சொல்வதற்கும் அருமை என்றறிய வேண்டும். – திருவருட்பா உரைநடை பகுதி
**************************************************
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
பௌர்ணமி திருவிளக்கு பூஜை
நாள் : 19.05.2008 – திங்கட்கிழமை, காலை 9 மணி அளவில்
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன் அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (அன்னதானம்) வழங்கப்படும்.
இந்த பெளர்ணமி திருவிளக்கு பூஜைக்கு 10 மூட்டை அரிசி அன்னதானத்திற்குக் கொடுத்து பூஜை செய்பவர்கள்
திரு. G.பாலசுப்ரமணியன், கோவை.
திரு. சபாபதி, , யூனிலெக் எண்டர்பிரைசஸ், கோவை.
—————————————–
அடுத்த திருவிளக்கு பூஜை நாள் : 18.06.2008 – புதன்கிழமை
—————————————–
—————————————————
17)
ஞானத்திருவடி
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின்
அனுபவ உரை
அடியேன் யோக நிலையையும், ஞான நிலையையும் அறிந்துகொள்ள பல குருமார்களை தேடி அலைந்தேன். ஒவ்வொருவரும் யோகத்தைப் பற்றி சொன்னார்கள். அதில் எனக்கு நன்மை ஏற்படவில்லை. துறையூர் அவல்பட்டறை தெருவில் சித்த வைத்திய மேதையும், சித்த
தத்துவ மேதையுமான பெ.சின்னசாமி சாஸ்திரி அவர்கள் தான் யோக ஞானத்தைப் பற்றியும், ஆசான் அகத்தீசர் ஆசியால்தான் ஞானத்தைப் பெறமுடியும் என்பதையும் அவர் உபதேசத்தால் அறிந்து கொண்டேன். அவர் உபதேசத்தின்படி தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும், முடிந்தால் இரவு நேரங்களிலும் ஆசான் அகத்தீசரை “ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி” என்று நாமஜெபமாகிய பூஜை செய்து வந்தேன்.
1) நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரை வேண்டிக்கொண்டேன்.
2) பொறிப்புலன் என்னும் பேய்கள் என்னைப் பிடித்து ஆட்டும் பொழுது ஆசான் அகத்தீசரை அழைத்து இவர்களது சீற்றத்தை அடக்கி அருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.
3) பொல்லாத காமப்பேய் என்னைப் பிடித்து வஞ்சிக்கின்றது. அதனை வெல்லும் வல்லமை எனக்கு இல்லை. அதனை வெல்லுவதற்கு நீ அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கேட்டுக்கொண்டேன்.
4) பொல்லாத காம தேகமே அறியாமையை உண்டுபண்ணுகிறது. அதனை வெல்லும் வல்லமையை எனக்கு தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன். 5) பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் உன் திருவடியை உருகி தியானிக்க முடியாமல் செய்கின்றது. அதனை வெல்லும் வல்லமை வேண்டும் என்று வேண்டிக் கேட்டேன்.
—————————————————
18)
– ஞானத்திருவடி
6) நீரே எனது இடது கலையாகிய சந்திர கலையையும், பிங்கலையாகிய
சூரிய கலையையும் சார்ந்திருந்து ரேசித்து, பூரித்து, கும்பித்து புருவ மத்தியில் ஸ்தம்பிக்கவேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
7) அடிக்கடி உன் திருவடியை உருகி தியானிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். பல பிரச்சினைகள் என்னைத் தாக்கி தியானிக்க முடியாமல் செய்கிறது. எனவே, பிரச்சினைகளை தீர்த்து உமது திருவடியை பூஜிக்க அருள் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கேட்டேன்.
8) உனது பெருமையை அறிந்து உமது திருவடியை பூஜிப்பது என்பது எளிதான காரியமல்ல என்பதை அறிந்துகொண்டேன். உன் பெருமையை உணரவும், உன் திருவடியை உருகி தியானிக்கவும், உன் திருவருள் வேண்டுமென்று வேண்டிக்கேட்டேன்.
9) உன் திருவருளால் அன்றி, உன் திருவருளை பெற முடியாது என்பதை அறிந்து உன் திருவருள் துணை கொண்டே உன் திருவருளை
பெறவேண்டுமென்று வேண்டிக் கேட்டேன்.
10) நீரே எனக்கு தாய் போன்று இருந்து மும்மலக் கொடுமைகளை வெல்ல
வேண்டும் என வேண்டிக்கேட்டேன்.
11) அநித்தியத்தை நித்தியம் என்று மயங்குகின்ற மயக்கத்தை நீக்கவும், உன்
திருவருள் வேண்டுமென்று வேண்டிக்கேட்டேன்.
12) தூலமாகிய புற உடம்பு பற்றியும், சூட்சமமாகிய அக உடம்பு பற்றியும் என் அறிவுக்குத் தோன்றவில்லை. எனவே, எனக்கு உணர்த்திட அருள் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கேட்டேன்.
13) காரண தேகம், காரிய தேகம், காரண-காரிய தேகத்தை என் அறிவால் அறிந்து கொள்ள முடியாது. எனவே, எனக்கு உணர்த்தவேண்டுமென்று
வேண்டிக்கேட்டேன்.
14) தூலதேகத்தின் துணை கொண்டுதான் சூட்சம தேகத்தை ஆக்கம் பெற
முடியும் என்பதை என்னால் உணரமுடியவில்லை . ஆகவே, என் அகமும்,
புறமும் இருந்து உணர்த்த வேண்டும் என்று வேண்டிக்கேட்டேன்.
15) இடகலையையும், பிங்கலையையும், சுழிமுனையில் சேர்த்தால் அதுவே
சமாதி நிலை என்பதை என்னால் அறிய முடியாது. எனவே, எனக்கு நீ உணர்த்த வேண்டுமென்று வேண்டிக்கேட்டேன்.
16) ”சும்மாயிரு” என்ற ரகசியம் என் அறிவுக்கு தோன்றவில்லை . எனவே, சும்மாயிரு என்ற ரகசியத்தை எனக்கு உணர்த்தவேண்டும் என்று ஆசான் அகத்தீசரை திருவடி பணிந்து வேண்டிக்கேட்டேன். – தொடரும்.
—————————————————
19)
ஞானத்திருவடி
திக்கெல்லாம் புகழ்வாய்ந்த திருமூலதேவர் அருளிய
திருவடிச் சிறப்புகள்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடி பேறு : 1598
திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும் – திருவடி ஞானம் சிவமயமாக ஆக்கும். திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் – திருவடி ஞானம் சிவலோகத்தில் சேர்க்கும். திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும் – திருவடி ஞானம் சீவனைச் சிறைப்படுத்தியிருந்த மலத்தினின்றும் நீக்கும். திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே – திருவடி ஞானமே அணிமாதி சித்திகளையும், முத்திப் பேற்றினையும் அளிக்கும்.
திருவடி ஞானம் – வியாபக அறிவு. திருவடி தீட்சையால் உண்டாகும் பயன் கூறியவாறு.
ஓங்காரக்குடில் ஆசான் குருநாதர் : மகான் திருமூலர் திருவடியே நம்மைச் சிவமாக்குவிக்கும். அதுவே சிவலோகம் சேர்க்கும். அதுவே சிறைமலம் மீட்கும். அதுவே உறுதியான சித்தியையும் முத்தியையும் தரும்.
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
திருமந்திரம் : உபதேசம் : 138
தேரில் திருவடியே சிவமாவது – ஆராயின் ஒளியான திருவடியே சிவமாம், சிந்திக்கில் திருவடியே சிவலோகம் – எண்ணிப்பார்க்கின் அவ்வொளியே சிவன் உறைகின்ற உலகம் , அது செப்பில் திருவடியே செல்கதி – அதனைச் சொல்லப்புகின் அவ்வொளியே அவனை அடைவதற்குரிய நெறியாகும், உள் தெளிவார்க்கு திருவடியே தஞ்சம் – அகநோக்குடையார்க்கு ஒளியே புகலிடமாகும்.
அடி – திருவருள், ஒளி. “ஒளியின் உருவம் அறியில் ஒளியே” என்ற மகான் திருமூலர் வாக்கைக் காண்க.
திருவடியே சிவலோகத்துக்குச் செல்லும் நெறியாகவும், சிவமாகவும், புகலிடமாகவும் உள்ளது.
——————————————————
20)
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் குருநாதர் : ஆன்மா மும்மலமாகிய இரும்புக் கோட்டையில் சிறைப்பட்டுள்ளது. ஆன்மா விடுபட வேண்டும் என்றால் நினைப்பதற்கு முன்னாகி நிற்கும் அய்யன் திருமூலதேவன் ஆசி இருக்கவேண்டும். இல்லையென்றால் உடம்பாகிய இரும்புக்கோட்டையை விடுத்து ஆன்மாவை விடுவிக்க முடியாது.
ஜென்மத்தைக் கடைத்தேற்ற உபாயம் (வழி) எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது மகான் திருமூலர் திருவடியே ஆகும். மேலும் சிந்தித்துத் தெளிவடைந்தால் அவர் திருவடியே சிவலோகம் என்பதை அறியச்செய்யும். அதுவே மேல் நிலை அடைவதற்கு உற்ற துணையாக அமையும். மேலும் அத்திருவடியே தவத்தை மேற்கொள்ளும்போது வரும் இடையூறுகளுக்கு அஞ்சேல்! என்று அருளும் அற்புதத் திருவடியாகும். அதுவே மகான் திருமூலர் திருவடியாகும். அவர் திருவடியைப் போற்றி வணங்குபவர் புண்ணியர் ஆவார்.
முக்காலமும் உணர்ந்த முனிவர், திருமூலதேவர். நமக்கு எக்காலமும் இருந்து அருள் செய்யக்கூடியவரும், திருமூலதேவர். அவரைப் போற்றிப்பாருங்கள் உண்மைத் தெரியும்.
திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே.
திருமந்திரம் : திருவடிபேறு : 1597
திருவடி வைத்து என் சிரத்து – என்னுடைய சிரசின் மீது திருவடியைச் சூட்டி. அருள் நோக்கி – அருளால் பார்த்து. பெருவடிவைத் தந்த பேர் நந்தி தன்னை – எங்குமாயிருக்கும் பெரிய வடிவினைத் தந்த பெரிய பெருமானை. குரு வடிவிற் கண்ட கோனை – குரு வடிவில் வந்த தலைவனை. எம் கோவை – எம்முடைய அரசனை. கருவழி ஆற்றிடக் கண்டுகொண்டேனே – பிறவி உண்டாகும் வழி உலர்ந்து போகக் கண்டுகொண்டேன்.
திருவடி வைத்தல் – சங்கற்பத்தால் திருவருட் சத்தியைப் பதித்தல். அருள் நோக்கல் – குருவின் சத்தியைச் சீடனிடம் பார்வையால் பதித்தல். பரிசமும் நோக்கமும் ஞானதீட்சையாகும். ஆற்றுதல் – உலர்த்தல், நீக்குதல். குருநாதன் அருளிய ஞான தீட்சையைக் கூறியவாறு.
ஓங்காரக்குடில் ஆசான் குருநாதர் : ஆசான் திருமூலதேவரை பூஜித்தால் நம் அகமும் புறமும் சார்ந்திருந்து இடகலையையும் பிங்கலையையும் இயங்கச்செய்து சுழிமுனையில் ஒடுங்கச் செய்வார். அதுவே காயசித்தியை உண்டுபண்ணும். மேலும் பிறவியை ஒழிக்கும் மார்க்கமுமாகும். ஆகவே பக்தியே சித்தியையும் முக்தியையும் தரும்.
—————————————————
21)
– ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய
ஏழைகளுக்குப் பசியாற்றிவைத்தால் வரும் நன்மைகள்
சன்மார்க்கம்
1) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பொறாமை பேராசையை அறிந்து வெல்லலாம்.
2) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் கோபத்தாலும் வன்சொற்களாலும் வரும் தீமைகளை நீக்கிக்கொள்ளலாம்.
3) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பண்புடன் வாழும் வாய்ப்பைப் பெறலாம். 4) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மன்னிக்கும் மனப்பான்மையைப் பெறலாம்.
5) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தகுதியுள்ள நட்பை அறிந்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
6) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் தகாத நட்பை அறிந்து அதனை நீக்கிக்கொள்ளலாம்.
7) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் எத்தொழில் செய்தால் இலாபம் வரும் என்று உணரலாம்.
8) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஜாதி மத துவேசம் இல்லாது வாழலாம். 9) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பகையை உருவாக்காது நட்பைப் பெருக்கி பண்புடன் வாழலாம்.
10) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் விட்டுக்கொடுத்து வாழும் பண்பைப் பெறலாம்.
11) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் புலால், மது, சூது ஆகிய தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம்.
12) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நண்பன் யார்? பகைவன் யார்? என்பதை அறிந்துகொள்ளலாம்.
13) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் காயசித்திக்கான உணவுமுறையை அறியலாம் மற்றும் மூலிகை கற்பங்களையும் அறியலாம்.
14) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அறுசுவை நாட்டத்தை ஒழிக்கலாம்.
—————————————————
22)
15) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வீண் ஆடம்பர செலவு செய்வதில்
நாட்டம் இல்லாமல் இருக்கலாம்.
16) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வருவாய்க்கு உட்பட்டு செலவு செய்யும் சிறப்பறிவைப் பெறலாம்.
17) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வீண் ஆரவாரச் செலவுகளால் கடன் சுமை வரும் என்பதை அறியலாம்.
18) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் கடன் வாங்காத சூழ்நிலை இயல்பாகவே அமையும் என்பதை அறியலாம்.
19) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் செல்வம் பெற்று வறுமையில்லா வாழ்வு பெறலாம்.
20) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் விருந்தை உபசரிக்கும் பண்பை பெறலாம்.
21) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பிறரின் வஞ்சக மனதை
புரிந்துகொள்ளலாம்.
22) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அளந்து உண்ணும் அறிவைப்
பெறலாம்.
23) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அளந்து பேசவேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
24) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பொய் பேசாது வாழும் ஆற்றலைப் பெறலாம்.
25) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பகைவர்களால் இடையூறு வராத ஆற்றல் பெறலாம்.
26) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பசியின் கொடுமையை அறியலாம். 27) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரவேண்டும் என்ற எண்ணத்தைப் பெறலாம்.
28) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வாங்கும் ஊதியத்திற்கு ஏற்ற உழைப்பைத் தரவேண்டும் என்ற எண்ணம் பெறலாம்.
29) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் கடமை செய்யாது சம்பளம்
பெறுவது நீதி இல்லை என்று அறியலாம்.
30) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் பொது சொத்தே கடவுள் சொத்து என்று அறியலாம்.
– அடுத்த இதழில் தொடரும்
—————————————————
23)
ஞானத்திருவடி
ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதால் ஏற்படுகின்ற நன்மைகள்
நாம் புண்ணியவான் ஆவதற்கு,
ஆசான் இராமலிங்கசுவாமிகள் அருளிய
அருள் வாக்கு
தங்கள் தங்கள் தரத்திற்கு தக்கபடி பசித்தவர்களுக்கு பசியாற்றுவிப்பதை விரதமாக அனுசரிப்பவர்களுக்கு :
* சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகள் நீங்கி விஷேச
சௌக்கியம் உண்டாகும்.
* நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறக்கும். தீர்க்க ஆயுளை உண்டு பண்ணும் என்பது உண்மை . மேலும் கல்வி அறிவு, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி முதலியவைகள் உண்டாகும்.
* கோடையில் வெயிலும் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலியவைகளால் துன்பம் வராது.
* அம்மை, விஷசுரம், நோய்களை உண்டு பண்ணுகின்ற விஷக்காற்று
முதலியவைகளால் கொடிய நோய் உண்டாகாது.
* ஆற்று வெள்ளத்தாலும், திருடர்களாலும், பகைவர்களாலும் இடையூறு
வராது.
* பொய் வழக்குகளாலும், துஷ்ட தேவதைகளாலும், துன்பம் வராது. நாம்
செய்யும் விவசாயத்தில் நல்ல மகசூல் உண்டாகும்.
* வியாபாரத்தில் லாபமும், உத்தியோகத்தில் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும்.
* நல்ல பண்புள்ள நண்பர்களும், ஒத்தக் கருத்துள்ள உறவினர்களும்,
தகுதியுள்ள வேலையாட்களும் அமைந்து வாழ்க்கையில் அமைதி ஏற்படும்.
* புலி, சிங்கம், கரடி போன்ற கொடிய மிருகங்களாலும், விஷஜந்துக்களாலும்,
மற்றும் சிறுதெய்வங்களாலும் அச்சமில்லா வாழ்வு அமையும்.
* பிறர் பசி தீர்க்கக்கூடிய எண்ணம் உள்ளவர்களுக்கு எத்தகைய விபத்துக்களும், இடையூறுகளும் சத்தியமாக வராது என்பது உண்மையாகும்.
* முன்செய்த தீவினையின் காரணமாக நமக்கு துன்பம் வர நேர்ந்தாலும் அத்துன்பம் நீங்கும்.
———————————————————
24)
ஞானத்திருவடி
– ஞானத்திருவடி
துறையூர்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
அன்னை மருத்துவமனை
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
மற்றும்
திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கத்துடன்
இணைந்து நடத்தும்
(இலவச கண் சிகிச்சை முகாம்)
இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
நாள் : 14.6.2008-சனி (பிரதி மாதம் இரண்டாம் சனி)
நேரம் : காலை 8.30 மணிமுதல் 12.00 மணிவரை
* கண்ணில் சீழ் வடிதல் * தூரப்பார்வை குறைவு * கிட்டப்பார்வை
* சதை வளர்ச்சி * பார்வை மங்கல்
* கண்ணில் நீர் வடிதல் * கண்ணில் நீர் அழுத்தம் – கண்புரை நோய் * தலைவலி
* கண் சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக
பரிசோதனை செய்யப்படும்.
* மருத்துவமனைக்குச் சென்றுவர போக்குவரத்து வசதி, உணவு, இருப்பிடம், ஸ்கேன் பரிசோதனை, மருந்துகள், I.O… லென்சுடன் கூடிய கண்புரை
அறுவை சிகிச்சை ஆகியவை அனைத்தும் இலவசம்.
* அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுநாளே வீட்டிற்கு வந்துவிடலாம். * வயதானவர்கள் தங்களுடன் ஒருவரை முகாம் நடக்கும் இடத்திற்கு
அழைத்து வரவேண்டும்.
*I.O.L. லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
———————————————————
25)
– ஞானத்திருவடி
சன்மார்க்கப் பயிற்சி
ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருள் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகுதல் வேண்டும்.
இரக்கம் ஒன்றினால் மட்டுமே இறைவனை அடைய முடியும். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அவசியம் பின்பற்றி வாழவேண்டும். ஒழுக்கம் இல்லையேல் உண்மை இரக்கம் கைக் கூடாது. எனவே ஒழுக்கத்தை பின்பற்றுவதே உண்மையான வழிபாடாகும்.
தினசரி நாம் இரவில் உறங்குவதற்கு முன்னர் எந்த எந்த ஒழுக்கத்தை பின்பற்றி வந்தோம். எந்த ஒழுக்கத்தை பின்பற்ற இயலவில்லை என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். மறுநாள் அந்த ஒழுக்கத்தை பின்பற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும். முயற்சித் திருவினையாக்கும். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை .
முதலில் சன்மார்க்க ஒழுக்கங்களை இயன்றவரைப் பின்பற்றுதல் வேண்டும். ஒருவாறு பழக்கத்திற்கு வந்த பின்னர் மீண்டும் பலகால் பழகவேண்டும். இவ்வாறு பழகி அனுபவத்திற்கு வந்த பின்னர் தீவிர முயற்சி மேற்கொண்டு இடையறாது எப்போதும் ஒழுக்கத்தில் நிற்க பழகுதல் வேண்டும்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்னும் மகா மந்திரத்தை ஓதிக்கொண்டு இன்றே, இப்பொழுதே சன்மார்க்கப் பயிற்சியை தொடங்குங்கள். பேரானந்தப் பெருவாழ்வை நமக்கு வழங்கப் பெருமானார் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
———————————————————
26)
க ஞானத்திருவடி
ஆண்டு மாதம் தேதி 1 2 3 4 5 6 .
1 கொடிய சொல் செவிபுகாது நிற்றல்
2. நாதம் முதலிய ஸ்தோத்திரங்களை கேட்டல்
3. தயாவண்ணமாகப் பரிசித்தல்
4. குரூரமாகப் பாராதிருத்தல்
5. சுவை விரும்பாதிருத்தல்
6. சுகந்தம் விரும்பாதிருத்தல்
7. இன்சொல்லாடல்
8. பொய் சொல்லாது இருத்தல்
9. கோள் சொல்லாதிருத்தல்
10. புறங் கூறாதிருத்தல்
11. வீண்சொல் பேசாது இருத்தல்
12. ஜீவஹிம்சையைத் தடை செய்தல்
– அடுத்த இதழில் தொடரும்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க கொள்கைகள்
உயிர்க்கொலைத் தவிர்த்தும், புலாலை மறுத்தும், முடிந்த அளவிற்கு பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றியும், மேலும் தாய் தந்தை மனைவி மக்கள், உடன்பிறந்தோர், சுற்றத்தார்கள், நண்பர்கள் இவர்களிடம் கனிவுடன் நடந்தும், ஜாதி, மத, இன, மொழி பேதமில்லாது எல்லோரையும் கடவுளின் பிள்ளைகளாக பாவித்து, அன்பு செலுத்தியும், விருந்தை உபசரித்தும், “ஓம் அகத்தீசாய நம” என்று தினசரி காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும், முடிந்தால் இரவு 12 மணிக்கு 30 நிமிடமும் நாமஜெபமாகிய பூஜை செய்தும், ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்தும் வருவதே ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க கொள்கைகளாகும்.
– ஓங்காரக்குடில் ஆசான் குருநாதர்.
———————————————————
27)
ஞானத்திருவடி
மகான் காகபுஜண்டர் அருளிய ஆசி பெருநூல்
1.அரசனே வேந்தனே அவதார ஞானியே
அண்ணலே வள்ளலே அருந்தவசி நீயே
பரமனே பண்டிதனே பரந்தாமன் நீயே
பகலவன் முதலான ஞானியே நவக்கோளும் நீயே
2.தருமனே பிரம்மனே தவஜோதியே
தன்னிகர் இல்லாத சதுர்வேதியே
கருமமாய் எண்ணியே அன்ன சக்தியை
கனல் மூட்டி அகற்றினாய் பசி பிணியை
3.பிணி நீக்கும் ஒளஷதமே பிரகாசமே
பெரும்பேறு கண்டது நின் சுவாசமே
தணிகாசலன்பால் கொண்ட சகவாசமே
தவசி ஆக்கினார் உமை தனிசுகமே
4.சுகமிலா வினையோடு சூழ்பவருக்கு
சுத்தி செய்தாய் நீ அன்னக்கரம் நீட்டி
செகம் எல்லாம் நின்புகழ் சேர்ப்பவருக்கு
சித்தி ஈவாய் அருள்கரம் நீட்டி
5.அருள்கரம் உந்தனுக்கு மால் சக்கரம்
அன்னக்கரமுனக்கு ஈசன் பாசக்கரம்
புகழ்சேர்க்க இணைவது புஜண்டன் கரம்
6.கரம் உயர்த்தி ஆசிபெருநூல் தன்னை
கலியுக அரங்கனுக்கு சமர்ப்பிப்பேன்
வரம்பல பெற்று யுகயுகமாய்
வாழ்ந்திடும் காகபுஜண்டன் தானும்
7.புஜண்டனும் பிரணவ குடில் அன்பர்கட்கும்
புகன்றிடுவேன் பூரண ஆசி பலனை
ராஜன் அரங்கன் வழி நடப்போர்
ராஜயோகம் பெறுவார் ஆசியுண்டு
8.உண்டான நின் உபதேசம் ஏற்று
உன் தொண்டை தொடரும் யாவரும்
கண்டடைவர் வீடுபேறு வாழ்வில்
கலியுக சித்தனே அரங்கா வாழ்க
———————————————————
28)
– ஞானத்திருவடி
9. வாழ்க வாழ்க நின் தொண்டர்களும்
வளம் பெறுவார் சேவையால் அவரவரும்
ஊழ் நீக்கப்படுவார் பல மாந்தர்களும்
உன் அருளாசி கடை தேற்றும் ஆசிஉண்டு
10. உண்டான உந்தனின் குடில் வழி
உதித்துவரும் ஞானத் திருவடி நூல்
கண்டடைய வளர்ச்சிக்கு ஆசியோடு
காகபுஜண்டனும் சூட்சும விளக்கம் அருளுரை
11.உரைகளுடன் ஞானிகளின் எண்ணம்
உயர்வான நிலைபட உலகோர்க்கு
நிறைவான செய்திகள் சிந்தனைகள்
நிகழ்வுகளும் நூல்வழி விளக்கம் ஆசி
12.ஆசி நூலாய் வழங்கிடுவேன் தொடர்ந்து
அரங்கனுக்கு புகழ் சேர்த்து வளமாக்க
ஆசி நூலாய் அவுடதம் உணவு முறை
அளித்திடுவேன் அரங்கருக்கும் அடியவர்க்கும்
13.அடியவர்க்கும் பூரணமாய் விளக்கம்
அகிலமதில் ஏடுவழி உணர்த்திடுவேன்
தேடி நிற்பார் ஞானத்திருவடி நூலை
தொண்டர்களும் அன்பர்களும் வேண்டி நிற்பர்
14.நிற்காது தொடர்ந்திடும் நின் சேவைபோல்
நிலமதனில் நூல் சேவை ஓங்கும்
வற்றாது வளம் அளிக்க ஆசி
வாழ்த்தினேன் சர்வதாரி ஆண்டு ஆசி
15.ஆசி கேட்பார் ஆனந்தப் படுவாரே
அரங்கர் பதம் தொடுவார் உய்வாரே
பேசி நிற்பார் அரங்கர்வழி சேவையை
பேதமிலா யாவருக்கும் சித்தி முக்தி
காகபுஜண்டர் பெருநூல் ஆசி முற்றும் முற்றே.
– சுபம் –
சுவடி ஆசான் – T.ராஜேந்திரன்
திருச்சி.
———————————————————
18
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை செயல்பாடுகள்
மகாமந்திரம் : “சிவயசிவ சிதம்பர இராமலிங்காய பரப்பிரம்மனே நம”
/
IMAM
ஞானத்திருவடி மாதஇதழ் குருநாதர் வெளியிட மலேசியா அன்பர்கள் திரு.முனியாண்டி, திரு.ஆனந்தன் பெற்றுக்கொண்டார்கள்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகளை உருகி தியானிக்க தியானிக்க எல்லா நன்மைகளும் நம்மை நாடிவரும்.
பிரச்சனைகள் தீரவும், தங்களின் பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள், தொழில் / வியாபாரம் தொடங்கிய நாள் மற்றும் பண்டிகை நாட்களிலும் அன்னதானம் செய்ய விரும்புகின்றவர்கள் DD, CHEQUE, M.O., மூலம் உங்க ளின் அருட்கொடையினை வழங்கலாம். DD, CHEQUE, M.0., எடுக்கவேண்டிய முகவரி : SRI AGATHIAR SANMAARGA CHARITABLE TRUST, Payable at Thuraiyur or Trichy தங்கள் நன்கொடைக்கு U/S 80-G பிரிவின்படி
வருமான வரி விலக்கு உண்டு. செக்/டி.டி./ M.O. அனுப்ப வேண்டிய முகவரி : SRI AGATHIAR SANMAARGA CHARITABLE TRUST,
113-Extension, Thuraiyur – 621 010, Trichy Dt., Tamil Nadu, India. Ph : 04327 – 256525, 255184.
சென்னை- திருவொற்றியூர் கிளைச் சங்கம் சார்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை
இலவச குடிநீர்
Homepage : www.agathiar.org e-mail : agathiartrust.in@agathiar.org
———————————————————
நூலஞ்சல்
ஞானத்திருவடி
சன்மார்க்க மாத இதழ் – உண்மைப் பத்திரிக்கை
பெருமான் இவனென்று பேசி யிருக்குந் திருமானிடர் பின்னைத் தேவரு மாவர் வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.
திருமந்திரம். கவி – 303. பெருமைக்குரிய தலைவர் ஆசான் அகத்தீசரை புகழ்ந்து பேசினால் சாதாரண மனிதர்களும் உயர்ந்த மனிதராவர். அது மட்டுமல்லாது ஆசான் அகத்தீசரை பூஜித்தும், தூய மனதோடு புகழ்ந்தும் பேசினால் ஞானியும் ஆவார். ஆசான் அகத்தீசரை புகழ்ந்து பேசுகின்றவர்களுக்கும் அருள் செய்வார். பேச்சை கேட்டு அகத்தீசரை பூஜிப்பவர்களுக்கும் அருள் செய்வார். எனவே, தூய மனதோடு புகழ்ந்து பேசினால் பேசுகின்றவர் ஞானியாவார் என்பது சத்தியம்.
இவ்வுரை உரிய முகவரியில் வழங்கப்படாது இருப்பின் அருள்கூர்ந்து இம்முகவரிக்கு திருப்பி அனுப்பவும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் – 621010. திருச்சி மாவட்டம். கைபேசி: 98424 – 55661
*********************************************************