Gnananthiruvadi May-2017 Books Tamil Spirituality pooja books in tamil tamil spiritual books pdf best spiritual books in tamil


Read as 3D Flip book

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

அகத்தியர் துணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிகை

ஹேவிளம்பி வைகாசி (மே – 2017)

விலை : ரூ.10/-) முருகப்பெருமானின் கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பின் சிறப்பு
2. சித்தர்கள் போற்றித் தொகுப்பு
3. மகான் ராமதேவர் ஆசி நூல்
4. 21.06.1998 அன்று அருளிய குருநாதரின் அருளுரை
தமிழைக் கற்றால் ஞானம் வரும்
5. சித்ரா பௌர்ணமி பூஜை —
6. வைகாசி மாத பௌர்ணமி பூஜை
7. அன்பர்களின் அனுபவங்கள்..
8. ஆத்திசூடி – குருநாதர் அருளுரை தொடர்
9. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள்….

ஓங்காரக்குடில் ஆசான்
முருகப்பெருமானின் கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம் தினசரி காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணி ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை, ஓங்காரக்குடில், துறையூர்.

ஞானத்திருவடி ஞானதிருவடி சித்தர்கள் நூல்

– ஞானத்திருவடி

சேவையாக உலகம் எங்கும்

செயல்முறைகள் திடமும் ஆகும்

அவணியெங்கும் அரங்கன் சொன்ன

ஆற்றல்மிக்க உபதேசம் பரவ பரவ

பரவவே பரவெளியில் முருகன்

பளிச்சிடும் ஞான ஒளி தோன்றும்

துறவிகள் சுத்த ஞான வழி

தூயவாழ்வு சேவை வாழ்வு கொண்ட

கொண்டவர்க்கு சோதி நிலைபட்டு

குடிகொள்ளும் அவரவர் தச வாசலில்

உண்டான இந்தவித நிகழ்வு பின்

ஒரு கோடி ஞானிகள் உலகம் தனில்

-மகான் ராமதேவர் ஆசி நூல்

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தைக் கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்பிரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 40 ஆண்டு காலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் முருகப்பெருமானின் கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில், தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.

விரைவில் எதிர்பாருங்கள் அற்புதமான “ஞானயுகம்” அமைகின்றதை!

அன்புடன் – இரா.மாதவன்.

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

பாவபரிகாரமும் சாபவிமோசனமும் பெற்றுத்தரவல்ல அற்புத பாராயண நூல்

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

             ஞானிகள் அத்துணைபேரும் முருகப்பெருமானால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டு மும்மலக் குற்றத்தை வேருடன் அறுத்து வெற்றி கண்டவர்கள். அவர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை. நரை, திரை, மூப்பு இல்லை. சித்தர்கள் அனைவரும் மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றவர்கள். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில் செய்யும் வல்லமையை பெற்றவர்கள். இவர்களின் திருவடிகளை பூஜித்தாலே நாம் செய்த பாவங்களெல்லாம் நீங்கிவிடும். பாவங்களுக்கு காரணமான உயிர்க்கொலை செய்தல், புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூதாடுதல், வரவுக்கு மீறிய செலவு செய்தல் இன்னும்பல தீவினை செயல்களெல்லாம் கீழ்க்கண்ட சித்தர்கள் போற்றித் தொகுப்பை படித்தால் நீங்கிவிடும். பெருமைக்குரிய சித்தர்கள் போற்றித் தொகுப்பை ஒரு தீபம் ஏற்றி வைத்து பயபக்தியுடன் பணிந்து வணங்கி பாராயணம் செய்தால் இல்லறமும் சிறக்கும், வீடுபேறாகிய ஞானமும் கைகூடும்.

            கல்வி கற்கும் மாணவர்கள் தினசரி பாராயணம் செய்தால், கல்வியில் சிறந்த தேர்ச்சியை பெறுவதோடு நல்ல வேலை வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.

            ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்ற ஆன்மீகவாதிகளுக்கு இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பானது, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான பாராயண நூலாகும்.

            எதை விரும்பி சித்தர்கள் போற்றித் தொகுப்பை பாராயணம் செய்கிறீர்களோ அதை அப்படியே பெற்றுத் தரவல்ல அற்புதமான பாராயண நூல் சித்தர்கள் போற்றித் தொகுப்பாகும். சித்தர்கள் சாதி, மதம், இனம், மொழி, தேசம் கடந்து மனிதகுலத்திற்கு பொதுவானவர்கள். ஆதலினால் சித்தர்கள் போற்றித் தொகுப்பை எல்லா சமயத்தினரும், எல்லா நாட்டினரும், பேதாபேதமின்றி பாராயணம் செய்யலாம். ஆண், பெண், சிறார், பெரியோர், குடும்பஸ்தன், துறவி, பஞ்சபராரிகள், ஏழை எளியோர் என யாவரும் பாராயணம் செய்யலாம். கணவனை இழந்தவர்களும் தடையின்றி விளக்கேற்றி பாராயணம் செய்யலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை, எந்த சடங்குகளும் இல்லை.

            அற்புதம் வாய்ந்த இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பை பல கோடி பேர் பாராயணம் செய்து எண்ணற்ற பலன்களை அடைந்ததோடு அவர்களது பிரச்சனைகள் தீர்ந்திடவும், வேண்டுகோள்கள் நிறைவேறி மனம் மகிழ்ந்ததும், இவ்வுலகம் கண்ட அற்புத உண்மையாகும். இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பை இன்னும் பலகோடி மக்கள் பாராயணம் செய்து மேன்மை அடைவார்கள் என்பது ஞானிகள் வாக்காகும்.

            இதுவரையிலும் ஞானவாழ்வு அடைவதற்கு துணையாக இருந்ததும், இனி அடையப்போகின்றவர்களுக்கும் சித்தர்கள் போற்றித் தொகுப்பு துணையாகும் என்பது சத்திய வாக்காகும்.

            திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்

            திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று
உலகறியச் செய்யும் வள்ளல்,
முருகப்பெருமானின் கல்கி அவதாரம்

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி 121
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி
நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
_____________________________
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Lucky Wisdom Persons

  • Visits Today: 456
  • Total Visits: 270015
  • Total Visitors: 1
  • Total Countries: 171

Watch colorized old Tamil movie
Secrets of Lord Kartikeya semen retention முருகன் ரகசியம் விந்துவை பற்றி சித்தர்