ஒரு ஜென்மத்தில் ஆசான் அகத்தீசரை பூஜித்து வந்தால் நாம் எடுக்கும் பிறவிகள் தோறும் உற்ற துணையாக இருந்து ஆசான் அகத்தீசர் நம்மைக்காத்து இரட்சிப்பார். எனவே ஆசான் அகத்தீசரை பூஜித்து வருகின்றவர்களுக்கு துன்பங்கள் வரும்பொழுதெல்லாம் அஞ்சேல்! அஞ்சேல்!! என்று அருள் செய்யும் ஆற்றல் ஆசான் அகத்தீசருக்கு உண்டு.
நிறுவனர்- சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
அவர்கள் தலைமையில்
பௌர்ணமி திருவிளக்கு பூஜை
நாள் : 19.05.2008 – திங்கட்கிழமை, காலை 9 மணி அளவில் இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.
அன்புடையீர் வணக்கம்,
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன் அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (அன்னதானம்) வழங்கப்படும்.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள், திருவிளக்கு மட்டும் எடுத்து வரவேண்டும். பூஜைப்பொருட்கள் அனைத்தும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக மண்டபத்தில் வழங்கப்படும். (அனுமதி இலவசம்)
திருக்குறள் – கடவுள் வாழ்த்து அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து எனும் இவ்வதிகாரத்தில் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். அவனின்றி நாம் எதுவும் செய்யமுடியாது என்பதை விளக்குகின்றார். எழுத்தெல்லாம் எவ்வாறு அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அதுபோல் கடவுள் என்பவன் அடிப்படையாக இருக்கின்றான்.
ஆதி என்பதற்கு அடிப்படை என்ற ஒரு பொருள் உண்டு. ஆதி என்பது பெண்மையையும், பகவான் என்பதற்கு ஆண்மையைக் குறிக்கக்கூடியதாகவும் பொருள் கொள்ளலாம். ஆதிபகவன் என்று கூறும் பொழுது பெண்-ஆண், இரவு-பகல், இடகலை – பிங்கலை, தூல – சூட்சமம், உடம்பு – உயிர் என இரண்டு இரண்டாக இருக்கும். எனவே இங்கே அய்யன் திருவள்ளுவர் கூறுவது உலக நடைக்கு ஆதி என்பது அடிப்படை எனப் பொருளாகிறது.
ஒன்றில்லாமல் ஒன்றிருக்க முடியாது. ஒரு பிள்ளை என்றிருந்தால் எப்படி தாய், தந்தை இருக்கின்றார்களோ அதுபோல் இந்த உலகம் இருக்கின்றது என்றால் அதற்குத் தலைவன் என்பவன் ஒருவன் இருக்க வேண்டும்.
கடவுள் முதன்மையான பொருளாக இருப்பவன் என்பதைக் கூறுகின்ற வள்ளுவன் அவனை அறிவதற்கு உபாயத்தையும் விளக்குகின்றார். இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றவர்களாக இருந்தாலும் நாம் ஏன் பிறந்தோம் என்று அறியும் அறிவைப் பெற்றிருக்க வேண்டும். சாகாமல் இருப்பதற்கான கல்வியை அறிந்திருக்க வேண்டும். அத்தகையக் கல்வியை அறிந்த அறிவைதான் தூய்மையான அறிவு என்று சொல்லலாம்.
சாகாத கல்வி என்றால் ஆன்மாவை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஒன்றே சிவம் என்று அறிதல் வேண்டும். ஆன்மா தோன்றி, பல லட்சம் கோடி வருடம் ஆகின்றது. ஆன்மா அழியாதது. ஆன்மா பல உயிரினங்களாக மனிதனாக பல பிறவிகளை எடுத்து அழியாமல் இருக்கும். ஆனால் உடல் அழிந்து போகும். ஆன்மாவிற்குப் பரிணாம வளர்ச்சி கிடையாது. நரை, திரை, மூப்பு, முதுமை கிடையாது. அழிவு கிடையாது. உடம்புக்கு எல்லாமே உண்டு. உடம்பு சக்தி இழந்தால் உயிர் பிரிந்து விடும். அத்தகைய உயிரைப்பற்றி அறிந்து கொள்வதுதான் சாகாக்கல்வி.
ஒரு நாளைக்கு மனிதனுக்கு 21,600 முறை மூச்சுக் காற்று வந்து போகின்றது. இது இயற்கை. வெளியே போன காற்று, திரும்பி வரவில்லை என்றால் பிணம். இந்த உண்மையை அறிந்திருக்க வேண்டும். இதனை அறிந்த அறிவைப் பெற்றவனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவனே ஆன்மாவைப்பற்றி அறிந்தவன். ஆன்ம ஜெயம் பெற்றவன். ஆன்ம ஜெயம் என்றால் ஆன்மாவை வெற்றி கண்டவன். ஆன்மாவை வெற்றி கண்டவன் நிச்சயமாக உடம்பையும் வெற்றி காண்பான். உடம்பும் உயிரும் நம் பிடிக்கு அகப்படா.
இடப்பக்கம் வருகின்ற காற்றையும் வலப்பக்கம் வருகின்ற காற்றையும் ரேசித்து, பூரித்து, கும்பித்து புருவ மத்தியில் செலுத்திவிட்டால் ஆன்மா அப்புருவ மத்தியில் ஒடுங்கிவிடும். ஆன்மா புருவ மத்தியில் ஒடுங்கிவிட்டால், அது திரும்பி வராது. அவ்வாறு வராமல் புருவ மத்தியில் ஒடுக்கியவன் எவனோ அவனே கற்றவன். இப்பயிற்சியை தொடர்ந்து செய்தால் வெற்றிபெறலாம்.
வீரன், கல்வியாளன், எழுத்தாளன், கவிஞன், மருத்துவன் போன்ற எத்தனைப் பட்டங்களைப் பெற்றிருந்தாலும் எல்லோரும் இறுதியில் மரணத்தை தழுவுவார்கள். எவன், மரணத்தை வென்றவனோ அவனே கற்றவன்; அவனே அறிந்தவன்; புரிந்தவன்; உணர்ந்தவன் ஆவான். அவன் திருவடியைப் பற்றிக் கொண்டாலொழிய, மரணத்தை வெல்லும் மார்க்கத்தைக் காண முடியாது. அவன் காமத்தை வென்றவன், தேக பந்தத்தை வென்றவன், மும்மலத்தை வென்றவன், பசியை வென்றவன், நரை, திரை, மூப்பை வென்றவன், அவனே கூர்மையான அறிவு உடையவன், மூலாதாரக் கனலை எழுப்பியவன். அந்தக் கனல் உடம்பிலுள்ள கசடை நீக்கும் தன்மையுள்ளது. அசுத்தமாகிய தேகத்தின் கழிவை ஆசான் துணை கொண்டு நீக்கினோம் என்றால் எண்ணம் தூய்மையானதாகி விடும். அத்தகையவர் திருவடியைப் பற்றிக் கொண்டால், நம் ஊழ்வினையை உடைத்து, பிறவிப்பிணியை அறுத்து, மீண்டும் கருப்பையுள் சேராமல் நம்மைக் காப்பார்கள். அத்தகையவர்களின் திருவடி, காலனை வென்றது; அஞ்சா நெஞ்சம் கொண்டது. இதயத்தில் பக்தி செலுத்தி அவரது திருவடியைச் சரணாகதி அடைதல் வேண்டும்.
முதல் குறளில் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை எடுத்துரைத்த வள்ளுவர், அடுத்த குறளில் கடவுள் எத்தகையவன் என்பதை விளக்கினார். இங்கு, கடவுள் மென்மையானவர் என்பதை விளக்குகின்றார்.
கடவுள் மென்மையானவன், கடந்தவன் கடவுள், பூவில் நறுமணம் உள்ளது போல் கடவுள் உள்ளான், அடியார் உள்ளத் தாமரை மலரில் வீற்றிருக்கக் கூடியவன் கடவுள் என்று எடுத்துக்காட்டு கூறுகின்றார். அவ்வாறெனில், கடவுள் எத்தகைய தன்மையானவன் என்பதை உணர வேண்டும். அன்புடையவன்; மலர் போன்ற இதயத்தில் அவன் வீற்றிருப்பான்.
அவனை அறிய, மலர் எவ்வாறு மென்மையானதாக உள்ளதோ அவ்வாறு சிந்தை மென்மையானதாக இருக்க வேண்டும். புண்ணியம் செய்தாலன்றி, மனதிற்கு மென்மை வராது. பக்தி செலுத்தினாலன்றி, மென்மை வராது. பஞ்சு போன்ற மனமாக இருக்க வேண்டும். இதயத்தில் கனிவு இருக்க வேண்டும். ஜீவகாருண்யம் உள்ள மனம், புலால் விரும்பாத மனம், வஞ்சனை இல்லாத மனம், பொய் பேசாத மனம் இத்தகைய மனம்தான் மலர் போன்ற மனம். அங்குதான் இறைவன் தங்குவான். மாட்சிமை பொருந்தியவனின் திருவடிகளைப் பற்றியவர்கள் நீடூழி வாழ்வார்கள். எப்போதும் நினைப்பவரது உள்ளத்தில் தங்கியிருப்பவன் தலைவன். அத்தகைய தலைவர்கள் முற்றுபெற்ற ஞானிகளே. கடவுள் தன்மை உடையவர்கள் ஞானிகள். அவர்கள் திருவடிகளைப் பற்றுபவர்கள் நீடூழி வாழ்வார்கள். மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவார்கள்.
கடவுள் ஒன்றை விரும்பவும் மாட்டான். வெறுக்கவும் மாட்டான். கடுகடுப்பாக பேசினால் பகை வரும். பற்று வைத்தால் பாசம் வரும். இரண்டும் இல்லாமல் நடுநிலை வகித்தால் துன்பமில்லாமல் வாழலாம். அறியாமையே பிறவிக்குக் காரணம். தெளிவு உள்ளவன் நிச்சயமாக பிறக்க மாட்டான். காமதேகத்தில் நிச்சயமாக சிறப்பறிவு இருக்க முடியாது. காமதேகம் என்பது இருட்டு. இருளில் இருப்பவனுக்கு, வெளிச்சத்தைப் பற்றித் தெரியாது. இருள் என்பது அறியாமை. நல்வினை, தீவினை இருந்தால் நிச்சயம் பிறவி வந்து விடும். அறியாமையிலிருந்து விடுபட வைராக்கியம் இருக்க வேண்டும். இல்லையென்றால் இருளை வெல்ல முடியாது. பக்தி செலுத்தினால் பசி அறுக்க முடியும். பசி அறுத்தால் சுக்கிலம் ஊறாது. காமம் அற்றுப் போகும். அதற்கு ஒரே உபாயம், திருவருள் துணை வேண்டும். திருவடியை உருகித் தியானிக்க பரிபக்குவம் வேண்டும். அப்போது இருள் என்னும் அறியாமை நீங்கும். இருள் என்பது பசியா? காமமா? பெண் ஆசையா? உயிரா? உடம்பா? இயற்கையா? செயற்கையா? சூரியனா? சந்திரனா? இவ்வாறு புரியாத புதிர் இருள். உள்ளத்தில் எப்போது ஒளி வருகிறதோ அப்போது இருள் நீங்கும். ஒளி என்பது என்னவென்றால், சிறப்பறிவு. சிறப்பறிவு பெற சித்தர்கள் திருவடியைப் பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்கே மனம் ஒடுங்குகின்றதோ அங்கு இருள் இல்லை. தலைவனை அறிந்து திருவடியைப் பூஜை செய்தால் இருவினையும் அற்று அறியாமை நீங்கும்.
பிறவிக்குக் காரணமாக இருப்பவை ஐம்புலன்கள். இந்த உடம்பை வஞ்சிப்பவை இவைகளே, இந்த உடம்பு மெய்யா? பொய்யா? என்பது தெரிய வேண்டும். எழுகின்ற காம உணர்வைப் பொடியாக்க வேண்டும். ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கைகளைக் குறைத்து, ஒழுக்க நெறி நின்று,
கட்டுப்பாட்டுடன் இருந்து, உறுதியாக நின்றவர்கள் அழியாமல் இருப்பார்கள். ஐம்புலன்களை அடக்கினால் மட்டும் போதாது. பொய் எது? மெய் எது? என்று தெரிந்து பொய்யை நீக்க வேண்டும். அவர்களே இறைத் தன்மையில் நிலைத்து நிற்பார்கள். நம்மைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்த நிலையில் உள்ள ஞானியர்களின் திருவடியைப் பற்றிப் பூஜை செய்தால் மனக்கவலை தீரும்.
கருணையே வடிவானவன், அறக்கடலாக விளங்குபவன், உயர் நிலையில் உள்ளவன்; அத்தகையவனின் திருவடியை வணங்காமல் பொருள் இன்பத்தையும் ஏனைய பிறவிக்கடலையும் கடக்க முடியாது. உலகம் பற்றிய சிந்தனைகளே இல்லாதவர்கள், பொறி புலன்களுக்குக் கட்டுப்படாதவர்கள்; பரப்பிரம்மத்தில் ஐக்கியமாகி இருப்பார்கள்; பரப்பிரம்மமாகவும் இருப்பார்கள்; மூச்சுக்காற்று அசைவற்றவர்கள்; மூச்சுக்காற்றுத் தோன்றுகின்ற இடத்தில் ஒடுங்கியவராக இருப்பார்கள்.
எங்கே மனம் தோன்றியதோ, அங்கே மனம் ஒடுங்கிற்று. மூச்சுக்காற்று அசைவால் மனம் அசையும். மூச்சுக்காற்று அசைவு நின்றுவிட்டால் மனம் அசைவது நின்றுவிடும். அவர்கள் பரப்பிரம்மத்தில் இருப்பார்கள். எப்போதும் பரமானந்தத்தில் இருப்பார்கள். உயர்ந்த குணத்தை உடையவர்களாக இருப்பார்கள். அத்தகைய உயர்ந்தவர்களின் திருவடியை வணங்காவிட்டால் நம் சிரசிற்குப் பயன் இல்லை.
நாம் பல லட்சம் பிறவி எடுத்திருப்போம். போன ஜென்மத்தில் செய்த பாவம் கோபமாகவும், காமமாகவும், சாதி வெறியாகவும், மதவெறியாகவும், பொருள் வெறியாகவும், நோயாகவும் இருக்கும். எனவே, பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாது. நீந்துவதற்கு ஒரே உபாயம், எவன் பிறவிப் பெருங்கடலை வென்றவனோ அவன் திருவடியைப் பற்றி அவன் அருளை அடைய வேண்டும். திருவருள் துணை இல்லாதவன் பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாது.
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே.
திருஅருட்பா – சுத்த சிவநிலை – 41.
ஆசான் நம்மை சீடனாக சேர்த்துக்கொள்வதே புண்ணியம். அதைவிடப் புண்ணியம் மோனநிலையை உணர்த்துவதாகும். அதைவிடப் புண்ணியம் பொறுமையாக இருந்து தவத்தை மேற்கொள்வதாகும்.
சீசனாம் எனத்தேர்ந்தால் மௌனம் சொல்வார்
சிற்றெறும்பு ஊறையிலே கற்குழிந்தாப்போலே
பாசமங்கே வைக்கவைக்கப் பாவமெல்லாம்
பர்வதம்போல் பஞ்சுவைத்து அணுவளவு தீயை
நேசமுடன் வைத்தகதை போலேயாச்சு
நிலைத்து நின்ற குருவுக்கு மனங்கோணலாகா
வேசைமனம் போலாகி அலையாதேநீ
வேதாந்த குருபதத்தை மேவுமேவே.
– மகான் கொங்கண மகரிஷி அருளிய கடைக்காண்டம் . வி . 270
மேற்கண்ட அருட்கவியின் நடுவில் உள்ள 3 வரிகளின் சாரம் :
மகான் கொங்கண மகரிஷி உலக மக்கள் பால் கருணை கொண்டு அருளிய அமுத கவியாகும். இந்த பாடலை யாரெல்லாம் பக்தியுடன் படிக்கிறார்களோ, அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அவர்களை பார்த்தாலே பாவம் தீரும்.
ஞானிகளிடத்தில் பக்தி செலுத்த செலுத்த நாம் பல ஜென்மங்களிலும், இந்தஜென்மத்திலும் செய்த பாவங்களெல்லாம் பெரியமலைபோன்ற பஞ்சில் அணுவளவு தீயை வைத்தது போல், நமது பாவங்களெல்லாம் சாம்பலாகிவிடும். எனவே சலிப்பில்லாமல் பூஜை செய்து வந்தால் இல்லறமும் சிறக்கும், ஞானமும் கைகூடும்.
இந்த பாடலை உலக மக்கள் பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் எரிமலை, நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு, நிலச்சரிவு, கடும்வறட்சி, கொடுமையான வெயில், சூறாவளி, பெரும் வெள்ள சேதம், அதிகமழை, இடி மின்னல், அதிக பனி, விண்கற்கள் விழுதல், கடல் அரிப்பு, கொடிய நோய்கள், தீ பரவுதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் நடைபெறாது. மேற்கண்ட பாடல் புனிதமான வேதமாகும். இதை தொட்டு வணங்குவதே பூஜையாகும்.
சமுதாயத்தில் ஜீவதயவு குறைந்து வருவதால், எங்கு பார்த்தாலும், இயற்கை சீற்றங்கள் அளவு கடந்து நடக்கிறது. ஜீவதயவு இருந்தால் எல்லாம் வல்ல இயற்கை அன்னை சாந்தமடைந்து நல்வாழ்வு தருவாள்.
ஜீவதயவு அல்லது மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் அல்லது ஜீவகாருண்யம் ஆகிய நான்கும் ஒரே பொருளாகும். ஜீவதயவு உண்டாக வேண்டுமென்றால் சாந்தமே வடிவான மகத்துவம் பொருந்திய “அகத்திய முனிவர் “, சிந்தையில் நிலைத்திடும் “ஆசான் நந்தீசர் “, திக்கெல்லாம் புகழ் வாய்ந்த “மகான் திருமூலதேவர்” அருள் கருவுருவாய் வந்த “மகான் கருவூர் முனிவர்”, ஜீவகாருண்ய வள்ளலாகிய “மகான் இராமலிங்க சுவாமிகள்”
ஆகிய ஐந்து மகான்களை
“ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி”,
“ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி”,
“ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி”,
“ஓம் கருவூர் தேவர் திருவடிகள் போற்றி”,
“ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி”
என்று நாமஜெபம் செய்யவேண்டும்.
மேற்கண்ட ஐந்து மகான்களும் ஜீவகாருண்ய தலைவர்கள் ஆவார்கள். அவர்கள் நாமத்தைச் சொல்லி காலையில் பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும் நாமஜெபம் செய்து வந்தால் நமக்கு ஜீவகாருண்ய உணர்வு வரும். ஜீவகாருண்யம் இல்லாதவர்களுக்குத்தான் மூர்க்கத்தனமும், பொல்லாத வறுமையும், கொடிய நோயும், அடிக்கடி விபத்தும் நடக்கும். மேலும் புலால் உண்ணுதல், உயிர் கொலை செய்தல், மது அருந்துதல், சூதாடுதல் போன்ற குணக்கேடுகளும் பற்றிக்கொள்கின்றன.
மேற்கண்ட மகான்களை பூஜை செய்வதால் சிறந்த குணப்பண்பு உண்டாகும்; தன்னையும் அறியலாம்; தலைவனையும் அறியலாம். தலைவனை அறிந்த மக்கள் தான் பேதைமையை உண்டுபண்ணும் மும்மலமாகிய காமதேகத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். காமதேகத்தின் சீற்றத்தை தணித்து கொண்டாலே நாமும் கடவுளாகலாம். மேலும், பொல்லாத வறுமை தீரும், செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், பண்புள்ள புத்திரபாக்கியம் தோன்றும், நோயில்லா வாழ்வும், நீடிய ஆயுளும் உண்டாகும். நம்மிடம் தீயபழக்கவழக்கங்கள் இருந்தாலும், நீங்கிவிடும். தீயநட்பு நீங்கி தகுதியுள்ள நட்பு அமையும். புலால் உண்ணுதல், மது அருந்துதல் போன்ற குணக்கேடுகள் நம்மைவிட்டு நீங்கிவிடும்.
சாந்தமே வடிவான ஞானியர்களின் அருளை பெற விரும்புகிறவர்கள், நித்தியம் மேற்கண்ட பாடலை பயபக்தியோடு படித்தும், மேற்கண்ட ஐந்து மகான்களின் நாமத்தைச் சொல்லி பூஜை செய்தும் வந்தால் முன் செய்த பாவங்கள் தீரும். சிறப்பறிவு உண்டாகும். மேலும், விவசாயம், வியாபாரம், உத்தியோகம், தொழில், கல்வி ஆகிய அனைத்தும் நல்லபடி நடக்கும்; இல்லறமும் சிறக்கும்; ஞானமும் கைகூடும்; மரணமில்லா பெருவாழ்வும் கைகூடும்.
குறிப்பு : 1. மேற்கண்ட ஞானிகளை எந்த நேரத்தில் நினைத்தாலும் “அஞ்சேல்”, “அஞ்சேல்” என்று அருளும் ஆற்றல் பெற்றவர்கள் ஆவார்கள். இவர்கள் நாமத்தைச் சொல்லி பூஜை செய்கிறவர்களை , கொடிய நோய் உள்ளவர்கள் பார்த்தால் நோய் தீரும்; புண்ணியமும் பெருகும். இந்த நூல் எங்கெல்லாம் உள்ளதோ அங்கு ஞானிகளும் இருப்பார்கள். நம்மை யாரும் வஞ்சிக்க முடியாது. எல்லாம் நன்மையே நடக்கும்.
குறிப்பு : 2. பெண்கள் திருவிளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து இந்த பாடலை பாராயணம் செய்வதோடு, மேற்கண்ட ஐந்து மகான்களின் நாமத்தைச் சொல்லி பூஜை செய்துவந்தால் தகுதி உள்ள கணவன் அமைவான். பண்புள்ள புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற துன்பங்கள் நீங்கும். கல்வி கற்கும் பெண்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த விபத்தும் ஏற்படாது. துன்பம் வந்தபோது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற கோழைத்தனம் இருக்காது. எதையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகள் செய்வதில் நாட்டம் இருக்காது. குடும்ப வருவாய்க்குத்தக்க செலவு செய்ய வேண்டும் என்ற பக்குவம் உண்டாகும். கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு கொள்ளும் பண்பு உண்டாகும். குடும்பத்தலைவனை அனுசரித்தும் மற்றும் மாமன், மாமி, நாத்தனார் இவர்களிடம் கனிவுடனும் நடந்து கொள்ளும் பரிபக்குவம் உண்டாகும். மேலும் வறுமையில்லாத வாழ்வு உண்டாகும். குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நம்மிடம் முரண்பாடு இல்லாது அன்புடன் நடந்து கொள்வார்கள். நாமும் அவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும் சிறப்பறிவு உண்டாகும். உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு அலுவலகத்தில் எவ்வித இடையூறும் வராது.
ஆகவே மேற்கண்ட ஞானிகளை பூஜிப்போம். எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வோம். எல்லாம் வல்ல ஒளவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்ற ஞானிகளைப் போல் ஞானவாழ்வு பெற்று வீடுபேறு அடைவோம்.
குறிப்பு 3. பிறப்பை ஒழிக்க வேண்டும் என்றால், சிறப்பறிவு வேண்டும். அதை புண்ணியத்தினாலும் பக்தியினாலும் அன்றி, வேறுவகையில் பெறமுடியாது. அந்த பக்தியும், முற்றுப்பெற்ற முனிவர்களின் திருவடியைப் பூஜித்தால்தான் வரும். பக்தி செலுத்த செலுத்த புண்ணியம் செய்துகொள்ள வேண்டும் என்ற அறிவும், அதற்கு தேவையான சூழ்நிலையும், மேலும் மேலும் பக்தி செலுத்த வேண்டும் என்ற அறிவும், அதற்குரிய பரிபக்குவமும் உண்டாகும். சிறப்பறிவு துணைக்கொண்டுதான் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியும்.
சரியை, கிரியை, யோக, ஞானத்தின் சாரம்:
சரியை என்பது நெறியுடன் வாழ்வதாகும். அதுவே பக்தி மார்க்கம்.
கிரியை என்பது கடவுள் வழிபாடே ஆகும். சித்தி பெற்ற மகான்கள் தங்கியிருக்கின்ற கோவில்களுக்கு சென்று வழிபடுதல். அதாவது ஸ்ரீரங்கம்மகான் சட்டைநாதர், திருவானைக்காவல் – மகான் மயூரேசர், பழனி-மகான் போக மகாரிஷி அவர்கள் அருட்பார்வையில் உள்ள மற்ற கோவில்களான – திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணி, திருச்செந்தூர் போன்ற திருத்தலங்களுக்கு சென்று ஞானிகளின் அருளைப்பெறலாம்.
யோகம் என்பது தக்க ஆசான் துணைகொண்டு இடகலையையும், பிங்கலையையும், சுழிமுனையையும் தெரிந்துகொள்வதே யோகமாகும்.
ஞானம் என்பது முற்றுபெற்ற முனிவர் துணைகொண்டு அதாவது, ஆசான் அகத்தீசர் ஆசிகொண்டு வாசி வசப்பட்டு அசுத்த தேகம் நீக்கி, சுத்த தேகம் பெறுவதாகும். சுத்ததேகம் எக்காலமும் அழியாதது.
குறிப்பு: குருநாதர் அருளால்தான் இது கைகூடும்.
இதை அறிவதற்கு நாம் தினமும் அதிகாலை எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு வெண்ணிற துணியில் அமர்ந்து “ஓம் அகத்தீசாய நம” என்று காலையில் 30 நிமிடமும் மாலையில் 30 நிமிடமும் முடிந்தால் இரவு 12 மணிக்கு 30 நிமிடமும் நாமஜெபமாகிய பூஜைசெய்தும், உயிர்கொலை தவிர்த்தும், புலாலை மறுத்தும் மேலும் தாய், தந்தை, மனைவி மக்கள், உடன்பிறந்தவர்கள், சுற்றத்தார், நண்பர்கள் இவர்களிடம் அன்புடன் நடந்தும் மேலும் விருந்தை உபசரித்தும், மாதம் இருவருக்கு அல்லது ஒருவருக்கோ அன்னதானம் செய்தும் வந்தால் சரியை, கிரியை, யோகம், ஞானத்தை அறிந்து ஜென்மத்தைக் கடைதேற்றிக்கொள்ளலாம்.
—————————————————
ஆன்மீகவாதிகள் தன்னைக் காத்துக்கொள்ள
மகான் ரோமரிஷி அவர்கள் அருளிய அறிவுரை
மகான் ரோமரிஷி அவர்கள் இயற்றிய பூஜா விதி 7-ல் கவி எண் 2-ல் பாடிய பாடல் :
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே.
மேற்கண்ட பாடலில் காப்பான கருவூரார் போகநாதர் என்றும், கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் என்றும், மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர் என்றும், முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர் என்றும், கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் என்றும், கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் என்றும், வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி (வாசமுனி என்பது தூர்வாசர் ஆகும்) கமலமுனி என்றும் ஆசான் ரோமரிஷி அவர்கள் தம் கவியில் பாடியுள்ளார்கள். இவர்கள் தான் இல்லறம் மற்றும் துறவறத்திற்கு பாதுகாவலர்களாக இருப்பார்கள்.
மாமேரு எனத்திகழும், இந்த 14 ஞானிகள் அடங்கிய இந்த பாடலை தினமும் காலையிலும், மாலையிலும் படித்து பாராயணம் செய்தும், தினமும் பூஜை செய்தும் வந்தால், மனிதவர்க்கம் அடையமுடியாத, அறியமுடியாத, உணர முடியாத ஒன்றை நாம் உணர முடியும்.
மேலும், பொல்லாத வறுமை தீரும், கொடிய நோய் தீரும், தீராத நியாயமான வழக்குகள் தீரும், குடும்பத்தில் அமைதி ஏற்படும். தீய நட்பு நம்மை சார்ந்திருந்தாலும் தானே விலகிவிடும். பண்புள்ள புத்திரபாக்கியம் அமையும், சொந்த வீடு இல்லாதவர்களுக்குச் சொந்த வீடும் அமையும். தீராத கடன் சுமையும் தீரும், செல்வமும் பெருகும், தகுதியுள்ள நட்பும் அமையும், தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாலும், தீய பழக்கங்கள் நீங்கிவிடும். கொடிய பகையும் நீங்கும், மன அமைதி ஏற்படும். எதையும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சிறப்பறிவு உண்டாகும்.
மேலும், ஆன்மா மாசுபடுவதை அறிந்து, மாசை நீக்கிக்கொள்ளவும் அறிவு உண்டாகும். நாம் மேற்கொள்ளும் காரியங்கள் எதுவானாலும் குறிப்பாக உத்தியோகம், தொழில், வியாபாரம், விவசாயம், இன்னும் குடும்பத்தில் சுபகாரியங்கள் எதுவானாலும் தடையில்லாமல் நடக்கும். எதிலும் வெற்றி! எப்போதும் வெற்றி! வெற்றியோ வெற்றி!
குறிப்பு : 1) தவம் என்பதே ஞானிகளின் திருவடியைப் பூஜிப்பதுதான். மற்றதெல்லாம் அவமாகும். ஆகவே, அகத்தீசரைப் பூஜிப்போம்! அருள் பெற்று வாழ்வோம்!
2) மேற்கண்ட ஞானிகள் அத்தனை பேரும் புண்ணியமும், அருந்தவமும் செய்து, மிகப்பெரிய அருளாற்றல் பெற்றுள்ளார்கள். இந்தப் பாடலைப் படித்தாலே சாகாக்காலைப் பற்றியும், சாகாக் கல்வியைப் பற்றியும் அறியலாம்.
ஆன்மா
தினசரி ஞானிகள் திருவடியை தடையில்லாமல் நாம ஜெபமாகிய பூஜை செய்து வந்தால் ஆன்மாவைப் பற்றி அறியலாம்.
ஆன்மா தற்பொழுது மும்மலமாகிய சிறையில் அகப்பட்டுள்ளது. இந்த மும்மலமாகிய சிறையை உடைத்தெறிந்து ஆன்மா விடுதலை பெறவேண்டுமென்றால் ஆன்மா விடுதலை அடைந்த ஞானிகளை உருகி தியானிக்க வேண்டும். உருகி தியானிக்க தியானிக்க பொல்லாத காமதேகத்தை அறிந்து கொள்ள முடியும். இந்த காமதேகத்தின் இயல்பை அறிந்துகொண்ட பின் மெல்லமெல்ல காமதேகத்தை பக்குவப்படுத்தமுடியும். காமதேகம் நீத்தால் சீவன் சிவமாகும். சிவமானவர்கள் என்றும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவார்கள்.
காமதேகத்தின் இயல்பே உண்மையை பொய் என்று எண்ணுவதும், பொய்யை உண்மை என்று எண்ணுவதுமாகிய, பேதைமை இருக்கத்தான் செய்யும். இந்த மும்மலமாகிய பேதைமையை ஆசான் அகத்தீசர் ஆசியால்தான் மாற்றமுடியும். இதை மாற்ற வேண்டுமென்றால் உயிர்கொலை செய்தலை தவிர்த்தும், புலால் உண்ணாமலும், மது அருந்தாமலும் இருக்கவேண்டும். இதை கடைப்பிடிக்க வேண்டுமென்றால் ஜீவகாருண்யத்திற்கு தலைவராகிய இராமலிங்க சுவாமிகளும், தாயுமான சுவாமிகளும், திருஞான சம்மந்தரும், மாணிக்க வாசகரும், மகான் அகத்தீசர் அவர்களின் ஆசியும் இருக்கவேண்டும். ஆசி இல்லாமல் நாமாக நூல் அறிவு கொண்டு முயற்சித்தால் எதுவும் நடக்காது.
மகாமந்திரம்
ஒன்பது கோடி ஞானிகளுக்குத் தலைவரும் கும்பமுனி என்றும், குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூஜித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று என்றும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள்.
நாமும் தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும், முடிந்தால் இரவு 12 மணிக்கு 30 நிமிடமும் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு திருவிளக்கு ஏற்றி, நறுமணமுள்ள பத்தி வைத்து, சமமான இடத்தில் வெண்ணிறத் துணியில் அமர்ந்து “ஓம் அகத்தீசாய நம” என்று நாமஜெபமாகிய பூஜை செய்து வந்தால் நீடிய ஆயுளும், நோயில்லா வாழ்வும் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பண்புள்ள புத்திர பாக்கியம் தோன்றும். மேலும் தொழில், விவசாயம், உத்தியோகம், வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். செல்வமும் பெருகும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்றும், அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – நாம் பிற எவ்வுயிர்க்கும் இடையூறு செய்யாமலும், புலால் உண்ணாமலும் சைவ உணவை மேற்கொள்ள எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – தாய், தந்தை, மனைவி மக்கள், உடன் பிறந்தவர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் இவர்களிடம் அன்போடு நடந்து கொள்ளும் பக்குவத்தை எனக்கு தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – குடி பழக்கம், புலால் உண்ணுகின்ற பழக்கம், சூதாடும் பழக்கம் என்னைத் தொடரா வண்ணம் இருக்க எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படாது இருக்க பக்குவத்தை தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – என்னை யாரும் பேராசைக்காரன் என்று சொல்லாத அளவிற்கு என்னைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – நான் பிறர் மனம் புண்படும்படி பேசாது பிறர் மகிழும்படி பேசும் பழக்கத்தை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – பிறர் எனக்கு இடையூறு செய்த போதிலும் நான் முன் செய்த வினைப்பயனே என்று எண்ணி இடர் செய்தவர்க்கு இடர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றா வண்ணம் இருக்க எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – உண்மை தெரியாது கோபப்படுகின்ற பலகீனம் என்னிடம் இல்லாது இருக்க அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – சந்தேக நோய் நட்பையும் கெடுக்கும், அமைதியையும் கெடுத்து விடும். எனவே, உண்மை தெரியாது சந்தேகப்படுவதால் பெரும்பாவம் வரும் என்பதை எனக்கு உணர்த்தவேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – தினமும் உமது திருவடியை மறவாது பூஜித்து வந்தாலே நீர் எனது அகமும் புறமும் இருந்து எது பாவம்? எது புண்ணியம்? என்பதை உணர்த்துவீர் என்று யான் அறிவேன். ஆகவே, உம்மை மறவாது பூஜித்து ஆசி பெற எனக்கு வரமருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – தொடர்ந்து வரும் பிறவிக்கு காரணம் மனமாயை தான் என்பதை அறிந்து அதை வெல்லவும், வெல்வதற்குரிய வல்லமையும் நீரே எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
நாம் அகத்தீசர் நாமத்தைச் சொல்லி – நான் எடுத்த பிறவிகளோ கணக்கில் அடங்காது, செய்த பாவங்களோ எண்ணிலடங்காது இதிலிருந்து விடுபடவும், இனி பிறவா மார்க்கமாகிய சன்மார்க்கத்தை கடைபிடித்து ஒழுகவும் நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றக் கூடிய இரக்க சிந்தையும், அதற்குரிய வாய்ப்பையும் எனக்கு தந்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்ள வேண்டும். பசியாற்றக் கூடிய எண்ணம் எப்பொழுது எனக்கு வருகிறதோ அன்றே நான் நிலை உயர்வேன் என்பதை உமது அருளால் அறிந்துகொண்டேன்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – கணக்கில் அடங்கா பாவிகள், புண்ணியவானாகிய உமது திருவடியை பூஜித்துதான் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்றுள்ளார்கள். நானும் பாவிதான் என்பது உலகறிந்த உண்மையாகும். இருப்பினும் என்னைப் போன்ற பாவிகளை இரட்சித்து அருள்வது உமது கடனே ஆகும். எனவே, உன்னை நம்பி உமது திருவடியை பூஜிக்கிறேன். என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும் அகத்தீஸ்வரா! என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீசாய நம” என்று சொல்லி – மாதம் இருவருக்கு அன்னதானம் செய்வதையும் விருந்தை உபசரிப்பதையும் ஒரு இலட்சியமாகக் கொண்டு செயல்பட எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
“ஓம் அகத்தீஸ்வரா!” என்று சொன்ன அக்கணமே உமது சீடர்களாகிய ஒன்பது கோடி ஞானிகளும் அருள் செய்வார்கள் என்பதை நானறிவேன். உமது திருவடியை நான் பூஜித்து வருவதால் இனி எக்குறையும் எனக்கு ஏற்படாது என்று பெருமிதத்தோடு இருக்கிறேன். எனவே அஞ்சேல்! அஞ்சேல்! என்று சொல்லி என்னை ஆட்கொள்ள வேண்டுமென்று உமது திருவடி பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்க நின் திருவடி! வெல்க சன்மார்க்கம்!
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எஃயத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
– மகான் கொங்கண மகரிஷி
துறையூர்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
அன்னை மருத்துவமனை
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
மற்றும்
திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கத்துடன்
இணைந்து நடத்தும்
இலவச கண் சிகிச்சை முகாம்)
இடம் : ஓங்காரக்குடில், துறையூர். நாள் : 10.5.2008-சனி (பிரதி மாதம் இரண்டாம் சனி)
நேரம் : காலை 8.30 மணிமுதல் 12.00 மணிவரை கண்ணில் சீழ் வடிதல்தூரப்பார்வை குறைவுகிட்டப்பார்வைசதை வளர்ச்சிபார்வை மங்கல்கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், கண்புரை நோய் தலைவலி கண் சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.
மருத்துவமனைக்குச் சென்றுவர போக்குவரத்து வசதி, உணவு, இருப்பிடம், ஸ்கேன் பரிசோதனை,மருந்துகள், I.O லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சை ஆகியவை அனைத்தும் இலவசம்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுநாளே வீட்டிற்கு வந்துவிடலாம்.வயதானவர்கள் தங்களுடன் ஒருவரை முகாம் நடக்கும் இடத்திற்கு அழைத்து வரவேண்டும்.
I.O.L. லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
—————————————————
உலகத்தில் உயர்ந்தது பக்தியே!
பாரி லுயர்ந்தது பக்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவருமுத்தி
சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பக்தி.
– மகான் கடுவெளிச்சித்தர்.
மேற்கண்ட கடுவெளிச்சித்தர் பாடலின் சாரம் :
உலகத்தில் ஒருசிலர் யோகாப்பியாசமாகிய யோகப்பயிற்சி செய்தால் கடவுளை அடையலாம் என்று எண்ணுவார்கள். ஒரு சிலர் செந்தூரம், சுண்ணம், பஸ்பம், லேகியம் மற்றும் பல்வேறு வகையான மூலிகைகளை சாப்பிட்டால், காயசித்தி பெற்று ஞானம் பெறலாம் என்று நினைப்பார்கள். ஒருசிலர் மட்டும் நவகோடி சித்தர்களுக்கு தலைவரும் குருமுனி பட்டம் பெற்ற அகத்தீசரை உருகி தியானம் செய்தால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும் என்றும், ஆன்மாவைப் பற்றியும், ஆன்மா ஏன் மாசுபட்டது என்பதை அறிந்தும், ஆன்மா மாசு நீங்கினால் ஆன்மஜோதி தோன்றும் என்றும், அதுவே மரணமில்லாப் பெருவாழ்வு கைகூடும் என்றும் அறிந்து ஆசான் அகத்தீசனை தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும், குறைதீர்க்கும் குலதெய்வமாகவும் எண்ணி பூஜிப்பார்கள். இவர்களே பெரும் பேறு பெற்றவர் ஆவார்கள். இவர்கள் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யும் வல்லவர்கள் ஆவார்கள்.
மெய்மொழிகள்
1. பசித்த ஏழைகளுக்கு பசியாற்றும் எண்ணம் வேண்டும் என்று அகத்தீசனை பூஜிப்போம்.
2. பக்தியே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று அறிந்திட அகத்தீசனை பூஜிப்போம்.
3. முக்தி அடைய உடம்பே கருவி என்று அறிந்திட அகத்தீசனை பூஜிப்போம்.
4. மெய்யுள் மெய்யை அறிந்தவன் மெய்யாவான் என்பதை அறிந்திட அகத்தீசனை பூஜிப்போம்.
ஓம் அகத்தியர் துணை
துறையூர் நகரில் தரமான ரெடிமேட் ஷோரூம் குமார் சர்ட்ஸ் & ரெடிமேட்ஸ் சார்ட் சர்ட்டுகள், பூட்கட் பேண்டுகள், ஜீன்ஸ் பேண்ட், T-சர்ட்கள், ரெடிமேட் சர்ட்கள், வேட்டி, லுங்கிகள் மற்றும் சிறுவர்களுக்கான ரெடிமேட் ஆடைகள் அனைத்தும் குறைந்த விலையில் வாங்கிட துறையூரில் குமார் சர்ட்ஸ் & ரெடிமேட்ஸ் 361, எம்.எஸ்.கே. காம்ப்ள க்ஸ், துறையூர்.
——–
ஆசான் திருவருளே பக்குவப்படுத்தும்
தேவரீர் திருவடிக்கு ஆளாகவும்
அட்டமா சித்தி தந்து அருள்புரியவும்
சித்தர்கணம் எல்லாம் எனக்கு அருள் இரங்கவும்
சித்தம் வைத்து அருள் புரியவும்
பாவி அடியேன் செய்த பாவங்களெல்லாம்
பறந்தோட அருள் புரியவும்
பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப்
பண்ணி வைத்து அருள் புரியவும்
நாவிட்டு உரைக்க ஒணாச் சோதி நயனத்தூடு
நடனமிட அருள் புரியவும்
நம்பினேன் ஐயனே நட்டாற்றில் என் கைகள்
நழுவிடாது அருள்புரியவும்
மாவேகமாக மெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே.
– மகான் மஸ்தான் சாகிப் அகத்தியர் சதகம் – 13வது பாடல்
இந்த பாடலை தொடர்ந்து பாராயணம் செய்துவந்தால் முன் செய்த பாவங்கள் நீங்கும். மேலும், அறியாமை நீங்கி சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு உள்ளவர்கள் தான் ஜீவகாருண்யம் பற்றி அறிந்துகொள்ளவும், கடைப்பிடிக்கவும் முடியும். ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்காத மக்கள், என்ன பாடுபட்டாலும் ஆன்மலாபம் பெற முடியாது. எனவே மேற்கண்ட பாடலை பாராயணம் செய்வோம்; ஆசான் அகத்தீசரின் ஆசியைப் பெறுவோம்.
மெய்மொழி
ஒருகோடி தவத்தை ஒரு நொடியில் செய்யலாம். அது எது என்றால் “ஓம் அகத்தீஸ்வரா! நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அருள்புரிய வேண்டும்” என்று அகத்தீசரை வேண்டுவதே , ஒரு கோடி தவம் செய்வதற்கு ஒப்பாகும். இப்படி வேண்டி பூஜிப்பவரே வீடுபேறு அடைவார். ஒருகோடி ஆகம வேதங்களைப் படித்து, அறிந்து அடையமுடியாத ஞானத்தை இந்த ஒரு வேண்டுகோளிலேயே அடையலாம்.
அகத்தியர் துணை
அகத்தியர் மொபைல்ஸ் மஹால் காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம், துறையூர்.
அனைத்து கம்பெனி செல்போன்களும் ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும்.
சிம்கார்டு - ரீசார்ஜ் கார்டு - டாப் அப் கார்டு கிடைக்கும் அனைத்து கம்பெனி செல்போன்களும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும். 9894314622, 9843222484
—————————————————
ஞானத்திருவடி – மாத இதழ்
சந்தா படிவம்
1 வருட சந்தா - ரூ.120/ 3 வருட சந்தா350/
திரு/திருமதி. :
முகவரி
பின்கோடு
போன் (அலுவலகம்) : (வீடு) (செல்)
சந்தா செலுத்தும் முறை.
ரொக்கம் DD வரைவோலை MO-மணியார்டர் காசோலை (Cheque) Rs.50/-Extra
சோலை வரைவோலையை
Sri Agathiyar Sanmaarga Charitable Trust
என்ற பெயரில் எடுக்கவும்.
வரைவோலையை payable at Trichy (or) Thuraiyur என்று எடுக்கவும்.
தேதி : செலுத்துபவர் கையொப்பம்
படிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை
ஞானத்திருவடி - மாத இதழ்
ஓங்காரக்குடில், 113-நகர்விரிவாக்கம், துறையூர் - 621 010. திருச்சி மாவட்டம்.
ஓங்காரக்குடில் அலுவலக உபயோகத்திற்கு மட்டும்
ரசீது எண் : ...தேதி : ............... ரூபாய் : ............. பெறுபவர் : .......................... குறிப்பு : ..................
அகத்தியர் துணை
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின் நித்திய செயல்பாடுகள்
காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு
ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
தியானம் (நாமஜெபம்)
காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.
காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்
மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரம் அன்னதானம்
மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்
மாலை 6.30 அருட்ஜோதி வழிபாடு
தியானம் (நாமஜெபம்) ஆசான் அகத்தீசர் வழிபாடு ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்
ஸ்ரீ அகத்தியர்சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியீடுபவர்
இரா.மாதவன், ஓங்காரக்குடில், 113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம். செல்: 98424 55661
அச்சிட்டோர் : வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.
————-
மகான் அகத்தீசர் ஆசிகாண்டம்
ஞானத்தின் திருவுருவே அரங்கா போற்றி
ஞானிகளின் வழிநடக்கும் அரசா போற்றி
ஞானத்தின் சித்தியே தேசிகா போற்றி
ஞானியே நின் திருவடிகள் போற்றி போற்றி
போற்றியே அகத்தீசர் யான் ஆசிதன்னை
புகலவந்தேன் சுவடிவழி இன்று நாளில்
பார்காக்க தவம் புரியும் அரங்கா வாழ்க
பாருலகில் உலக மக்கள் நலன்கள் காண
காணவே ஞானத்திருவடி என்னும் நூலை
கருணை நீ வெளியிடுவாய் என்று சொல்வேன்
பேணவே ஞானத்திருவடி என்னும் நூல்
புதுயுகத்தை படைத்துவிடும் என்று சொல்வேன்
சொல்வேனே நூல்பெற்றோர் அனைவருக்கும்
சிறப்புடனே புண்ணிய பலங்கள் கூடும்
நல் நூலாம் ஞானத்திருவடி எனும் நூலை
நானிலத்தில் படிப்பவர்கள் ஞானம் பெறுவார்
பெறுவதற்கு வழிகாட்டும் நூலிது என்பேன்
பூவுலகில் திங்கள் தோறும் (மாதந்தோறும்) பெற்று படிப்போர்
அருளோடு புண்ணியங்கள் கோடி அடைவார்
அகத்தீசர் வாக்கு இது சாத்தியம் என்பேன்
என்பேனே ஒவ்வொரு இல்லங்களிலும்
இன்னூல் இருந்திட வினைகளை நீக்கும்
நன்மைதரும் ஞானமதை அளித்திடும் என்பேன்
நூலிருக்கும் இல்லமதனுள் ஞானிகள் வந்து
வந்துமே திருவடியை பதித்து செல்வார்
வளம் கூடும் ஆசிகளை வழங்கிச் செல்வார்
சிந்தையிலே ஞானமதை ஓங்கச் செய்வார்
சித்திதரும் நூல் ஞானத்திருவடி எனும் நூல்
நூல் பெற்று தொண்டர்களும் அகிலமெங்கும் ஈய
நிலமதனில் ஞானிகள் ஆசி அகிலமெங்கும் பரவி
நல்யுகம் ஞானயுகம் ஆகும் உண்மை
நானிலத்தில் அருள் கூடும் அமைதி ஓங்கும்
ஓங்கியே ஆனந்தம் அடைவார் மக்கள்
உயர்வாகும் சகல சௌபாக்கியங்கள்
ஓங்கிவரும் அவரவர்க்கும் பூரண ஆயுள்
உயர்வான பேரின்பம் அடைவார் என்பேன்
அடைவாரே ஞானத்திருவடி எனும் நூல்
அருள் தரும் நூல் ஞானத்திறவுகோல் நூல்
அடைந்திட்ட அனைவருக்கும் ஞானிகள் திருவடி
அடைந்திடும் பாக்கியங்கள் உண்டு என்பேனே
என்பேனே அகிலமாற்றம் தரும் நூலிது
இவ்வுலகில் தெளிவுதரும் நூல் நன்மைதரும் நூல்
உண்மைதரும் நூலிது உயர ஆசியுண்டு
உலக மக்கள் உயர்வுகாண வைக்கும் நூலிது
நூலிதனை அனைவரும் வாங்கி உணர்ந்து
நலம்பெற அகத்தியர் யான் அளித்தேன் ஆசி
நூலிதனால் அகிலமாற்றம் சடுதியில் ஓங்கும்
நன்மைதரும் ஞானத்திருவடி நூல் சிறக்கும் ஆசிதந்தேன் இப்பாகம் முற்றே
– சுபம் –
ஞானத்திருவடி எனும் ஞான நூலை வெளியிடுவதற்கு ஆசான் அகத்தீசரின் ஆசிகாண்டம் கேட்டோம். ஆசான் அகத்தீசரும் மனம் மகிழ்ந்து 23.4.2008 புதனன்று திருச்சி சங்கிலியாண்டபுரம், அகத்தியர் நாடி ஜோதிடர் V.T.பரணீதரன் அவர்கள் ஆசான் அகத்தீசரின் ஆசிகாண்டத்தை வாசித்தருளினார்.
ஞானத்திருவடி நூலில் பல ஞானிகள் பாடல்களுக்கு ஓரளவிற்கு விளக்கம் தந்துள்ளார்கள். இந்த நூலில் முற்றுபெற்ற முனிவர்கள் அருளிய பாடல்கள் இடம்பெற்றுள்ளதால் இந்நூல் எங்கு இருப்பினும் ஞானிகளின் அருள் உண்டாகும்.
எனவே, ஞானத்திருவடி நூலை வீட்டில் உள்ளோர் படித்தால் ஞான வாழ்வும் கைகூடும், இல்லறமும் சிறக்கும். ஞானத்திருவடி நூல் வைத்திருப்பவர் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், பண்புள்ள புத்திர பாக்கியம் தோன்றும். வியாபாரம், உத்தியோகம், தொழிலில் எவ்வித தடைகளும் ஏற்படாது. மேலும், தீராத கடன் சுமை நீங்கி செல்வம் பெருகும். தகுதியுள்ள நட்பு அமையும். குடும்பத்தில் ஞானிகள் இருந்து அருள் செய்வதால், பகைவர்களாலோ, விஷ ஜந்துக்களாலோ, துஷ்ட்ட தேவதைகளாலோ எவ்வித இடையூறும் வராது. ஆகவே, ஞானத்திருவடி நூல் இருக்கும் இடத்தில் தெய்வீக அருள் உண்டாகும்.
எனவே, ஆன்மீகவாதிகள் ஞானத்திருவடி நூலை வாங்கிப் படித்து, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ ஆசான் அகத்தீசர் திருவடிகளை வேண்டுகிறோம்.
குறிப்பு: உண்மை ஆன்மீகம் இதுவா? அதுவா? எனும் ஐயப்பாடு உள்ளவர்களுக்கு, இதுதான் உண்மை ஆன்மலாபம் பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
பக்கம் 18-ன் தொடர்ச்சி
மேற்கண்ட காப்புச் செய்யுளுக்கு உரை எழுதவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு மகான்களையும் புகழ்ந்து எழுத ஆரம்பித்தால் நூல் விரிவடையும் என்ற காரணத்தினால் இச்செய்யுளுக்கு உரை எழுதவில்லை.
குறிப்பு: மகான் ரோமரிஷி அருளிய ”காப்பான கருவூரார் என்ற பாடலில் பதினான்கு முதுபெரும் ஞானிகள் உள்ளார்கள். ஒரு மகானை புகழ்ந்து பேசினால், மற்ற மகான்களைப்பற்றியும் உரை எழுத வேண்டி வரும்.
மகான் ரோமரிஷி அவர்களை “ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி” என்று சொன்ன அக்கணமே பதினான்கு ஞானிகளும் நம்மைச்சூழ்ந்திருந்து அருள் செய்வார்கள்.
மகான் ரோமரிஷி அவர்கள் மிகப்பெரும் ஆற்றல் பெற்ற ஞானி ஆவார். அவரே “காப்பான கருவூரார் என்ற பாடலை பாடியுள்ளார். அவருடைய கருணைதான் இந்தப்பாடல். இப்பாடலை பாராயணம் செய்யவேண்டும் என்று நினைக்கும் பொழுதே நமக்குள்ள துன்பங்களை நீக்கி, நமக்கு பேராற்றல் தந்து நம்மைக் காப்பார்.
திருவிளக்கு பூஜை
உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் 94434 21935
ஞானிகள் திருஉருவப்படங்கள் மற்றும் ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு ந.நடராஜன், கொள்கை பரப்பாளர், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், துறையூர். 04327-255784, செல்: 98947 55784
மகான் அம்பிகானந்தர் டைல்ஸ் & சானிட்டரிவேர்ஸ்
பெருமான் கோவில் தேர் பிரசன்ன மகால், துறையூர்.
Regency JOHNSON Nature this List: Cornware Neucer ASR.ராஜா 98435 68696
S.திருமுகம்98431 58696 லட்சுமி கிரில் டிசைன்ஸ்