2008 ஜூன் ஞானத்திருவடி | நீத்தார் பெருமை திருக்குறள் அதிகாரம் 3 விளக்கவுரை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை சர்வதாரி – 1 ஆனி – 3

விலை : ரூ.10/

நிறுவனர்,

சிவராஜயோகி, பரமானந்த
சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்

1. திருக்குறள் – நீத்தார் பெருமை…….                         
2. புண்ணிய செயல்களின் விபரம்-தொடர்                  
3. மனுமுறை கண்ட வாசகம்………                            
4. ஆசையும் நம்பிக்கையும்………
5. ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால்-தொடர்……..            
6. மகான் அகத்தியர் ஆசிநூல்-V.T.பரணீதரன்………..               
7. ஓங்காரக்குடில் ஆசான் அனுபவ உரை-தொடர்….             
8. தெய்வமணி மாலை………….                                  
9. ஜீவகாருண்யம்-தொடர்……..                                  
10. உண்மை ஆன்மீகம்……..                                      
11. சன்மார்க்கப் பயிற்சி………                                  
12. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள்…………..

வெளியீடு   ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை, ஓங்காரக்குடில்,

 113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.(04327 – 256525, 255184

 “நீத்தார் பெருமை”

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து 
வேண்டும் பனுவல் துணிவு.     	               21

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.    	               22

இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.   		       23

உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் 
வரன் என்னும் வைப்பிற்குஓர் வித்து.                  24

ஐந்து அவித்தான் ஆற்றல், அகல்விசும்பு னார்கோமான் 
இந்திரனே சாலும் கரி.   		               25

செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் 
செயற்கரிய செய்கலா தார்.   	                       26

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு.                        27

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும்.                           28

குணமென்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி 
கணமேயும் காத்தல் அரிது.                           29

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் 
செந்தண்மை பூண்டொழுக லான்.                     30
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
         ஞானத்திருவடி என்னும் நூலில் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்தப் புத்தகம் ஞான வாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்தப் புத்தகம் வீட்டில் இருந்தால் நவக்கோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமண்யரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும். மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 32 ஆண்டுக்காலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாகப் பார்த்து அவர்களுக்கு வரும் துன்பத் துயரங்களிலிருந்து விடுவித்து ஞானியர்களின் திருவடித்தான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லிக் கொடுத்து அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். ஆகவே இந்தப்புத்தகத்தை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி படிக்கவேண்டும்.
அன்புடன் 
இரா.மாதவன் 

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகளின் அருளுரை

திருக்குறள்

நீத்தார் பெருமை – அதிகாரம் 3

நீத்தார் பெருமை என்றால், எல்லாவற்றையும் துறந்த சித்தர்களின் சிறப்பைக் கூறுவதே ஆகும். நீத்தார் என்றால் எல்லாவற்றையும் துறப்பது. காமத்தை அறுத்து தேகத்தை மாற்றிக்கொள்வது. நெருப்பு நீத்துப் போனால் சாம்பல் மட்டுமே மிஞ்சும். நெருப்பு இருக்காது. அதுபோல் உண்மைப் பொருள் அறிந்து  காமத்தை வெல்ல வேண்டும் எனில் தலைவனின் ஆசி இருக்க வேண்டும். என்பது வைராக்கியத்தின் அடிப்படையிலும் முன் செய்த  நல்வினையாலும் வருவது. வைராக்கியம் திருவருள் துணை மனிதனின் குணங்களை இல்லாமல் வராது.

எல்லாம் வல்ல இயற்கை  வெவ்வேறு உருவங்களாக உள்ளன.  ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு  குணம் உண்டு. இயற்கையின் இயல்புகளைப் புரிந்திருக்க வேண்டும். மனிதனின் இயல்புகளைப் புரிந்திருக்க வேண்டும்.

முன்னதாகவே வந்ததா? அதாவது மனிதனின் இயல்பு இவ்வாறாக மனிதனின் இயல்பை என்ன? மும்மலம் வந்ததின் காரணம் ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது என்ன? ஆணவம், காமம், மாயை ஏன் மனிதன் தோன்றினானோ வந்தது? பரிணாம வளர்ச்சி ஏன் அப்பொழுதே, குணக்கேடுகள்  வந்தது? ஏன் காமம் வந்தது? ஏன்  பசி வந்தது? துறவு ஏன் மேற்கொள்ள வேண்டும்?

மனிதனுக்கு குணக்கேடுகள் இருக்கும் வரை அவனால் துறவு மேற்கொள்ள முடியாது. மனிதனின் குணங்களை ஆராய்ந்து பார்த்து இந்த குணக்கேடுகள் எப்படி  வந்தன? இயற்கையாக வந்ததா? செயற்கையாக வந்ததா? ஏன் காமம். வந்தது? ஏன் பசி வந்தது? ஏன் சாக வேண்டும்? இத்தகைய உண்மையை அறிந்தவனே துறவு மேற்கொள்ள. முடியும். மனிதனின் குணங்களை ஆராய்ந்து பார்த்து இந்த குணக்கேடுகள் எப்படி வந்தன?  இயற்கையாக வந்ததா? செயற்கையாக வந்ததா? இதுதான்  பிறப்புக்கு காரணமாக உள்ளதா? இப்போது வந்ததா? அல்லது பல  இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வந்ததா?  இவ்வாறாக மனிதனின் இயல்பை ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது மனிதன் தோன்றினானோ அப்பொழுதே, குணக்கேடுகள் இருந்துள்ளன. அப்பொழுதே குணப்பண்புகளும் இருந்துள்ளன. ஞானிகள் தவமுயற்சியால், கூறுவதும், சான்றோர் தொடர்பால் குணக்கேட்டை நீக்கியுள்ளார்கள்.காமம் நீங்காமல் குணக்கேடு நீங்காது. தலைவன் மீது பக்தி செலுத்தி யோகாப்பியாசம் அறிந்து, மூச்சுக்காற்றின் இயல்பறிந்து,மூலாதாரக்கனலை எழுப்பினால் ” காமம் அற்றுப் போகும்.

அப்போது குணப்பண்பு உண்டாகும். காமம் அற்றுப்போனால் தேகம் நீத்துப் போகும். உணர்ச்சியற்றுப் போகும். பசியற்றுப் போகும். கபம் அற்றுப் போகும். நம் எதிரியான எமன் வீழ்ந்து போவான். அப்படியானால் எமன் நமக்கு உடம்பா? உயிரா? உணர்ச்சியா?இயற்கையா? செயற்கையா?

இயற்கை ஓர் இயக்கத்தை உண்டாக்கியது. எல்லா ஜீவராசிகளும்  வாழ்கின்றன. பின்பு அழிந்து  போகின்றன. ஞானிகள் தங்களுடைய அழிவை நிறுத்தி  மரணத்தை வென்றார்கள். அத்தகையவர்களின் பெருமையே நீத்தார் பெருமை.

          உண்மைப்பொருள் அறிந்து, கட்டுப்பாடுகளை உருவாக்கி . உடல் கூ றினை அறிந்து ,  இயல்பறிந்து அதன் வகை தொகை அறிந்து, துறவு மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கூறுகின்ற உண்மைப் பொருளை துணிவுடன்  கூறுவதும், பெருமையைப் புகழ்ந்து எழுதுவதுமே நூலிற்குப் பெருமை. அதுவே நூலாகும்.

Leave a Reply

Your email address will not be published.

Lucky Wisdom Persons

  • Visits Today: 470
  • Total Visits: 270240
  • Total Visitors: 1
  • Total Countries: 171

Watch colorized old Tamil movie
Secrets of Lord Kartikeya semen retention முருகன் ரகசியம் விந்துவை பற்றி சித்தர்