செப்டம்பர் 2017 – 14.04.1998 அன்று அருளிய “கற்றதன் பயனே அகத்தியரை பூஜிப்பதுதான்” – குருநாதர் அருளுரை – SEPTEMBER 2017

 

அகத்தியர் துணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

 

ஞானத்திருவடி

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிகை ஹேவிளம்பி புரட்டாசி (செப்டம்பர் – 2017)

முருகப்பெருமானின் கல்கி அவதாரம்

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

 

உள்ளடக்கம்

 

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பின் சிறப்பு

2. சித்தர்கள் போற்றித் தொகுப்பு

3. 14.04.1998 அன்று அருளிய கற்றதன் பயனே அகத்தியரை பூஜிப்பதுதான் – குருநாதர் அருளுரை

4. பாம்பொடு பழகேல் (ஆத்திசூடி) – குருநாதர் அருளுரை

 

ஞானியின் கொள்கையை ஏற்றிட

ஞானமுடன் தருமவழியை தொடர

ஞானியரின் சீடர்களாகி வருக

ஞானபண்டிதனால் அழிவு தடுக்கப்படும்

 

தடுப்பதுடன் இயற்கை பாதுகாப்பும்

தரணியிலே நீர்வளமும் காக்கப்படும்

தடுப்பதுடன் ஆறுமுகனை நம்பி வர

தனிமனித ஒழுக்கம் சமூக பாதுகாப்பும்

 

காப்பாக அண்டை நாடுகளுடன்

கருணைபட நேசக்கரம் வளரும்

ஒப்பு கொண்டு முருகன் தலைமை ஏற்கும்

ஒவ்வொரு நாடும் அமைதி காண்கும்

மகான் கௌசிக மகரிஷி ஆசிநூல்

 அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தைக் கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்பிரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

 மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 40 ஆண்டு காலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் முருகப்பெருமானின் கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்அவர்கள், ஞானிகளின் பாடல்களில், தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.

விரைவில் எதிர்பாருங்கள் அற்புதமான ஞானயுகம் அமைகின்றதை!

அன்புடன் – இரா.மாதவன்.

 

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

பாவபரிகாரமும் சாபவிமோசனமும் பெற்றுத்தரவல்ல அற்புத பாராயண நூல்

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

 ஞானிகள் அத்துணைபேரும் முருகப்பெருமானால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டு மும்மலக் குற்றத்தை வேருடன் அறுத்து வெற்றி கண்டவர்கள். அவர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை. நரை, திரை, மூப்பு இல்லை. சித்தர்கள் அனைவரும் மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றவர்கள். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில் செய்யும் வல்லமையை பெற்றவர்கள். இவர்களின் திருவடிகளை பூஜித்தாலே நாம் செய்த பாவங்களெல்லாம் நீங்கிவிடும். பாவங்களுக்கு காரணமான உயிர்க்கொலை செய்தல், புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூதாடுதல், வரவுக்கு மீறிய செலவு செய்தல் இன்னும்பல தீவினை செயல்களெல்லாம் கீழ்க்கண்ட சித்தர்கள் போற்றித் தொகுப்பை படித்தால் நீங்கிவிடும். பெருமைக்குரிய சித்தர்கள் போற்றித் தொகுப்பை ஒரு தீபம் ஏற்றி வைத்து பயபக்தியுடன் பணிந்து வணங்கி பாராயணம் செய்தால் இல்லறமும் சிறக்கும், வீடுபேறாகிய ஞானமும் கைகூடும்.

 கல்வி கற்கும் மாணவர்கள் தினசரி பாராயணம் செய்தால், கல்வியில் சிறந்த தேர்ச்சியை பெறுவதோடு நல்ல வேலை வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.

ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்ற ஆன்மீகவாதிகளுக்கு இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பானது, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான பாராயண நூலாகும். 

எதை விரும்பி சித்தர்கள் போற்றித் தொகுப்பை பாராயணம் செய்கிறீர்களோ அதை அப்படியே பெற்றுத் தரவல்ல அற்புதமான பாராயண நூல் சித்தர்கள் போற்றித் தொகுப்பாகும். சித்தர்கள் சாதி, மதம், இனம், மொழி, தேசம் கடந்து மனிதகுலத்திற்கு பொதுவானவர்கள். ஆதலினால் சித்தர்கள் போற்றித் தொகுப்பை எல்லா சமயத்தினரும், எல்லா நாட்டினரும், பேதாபேதமின்றி பாராயணம் செய்யலாம். ஆண், பெண், குழந்தைகள், பெரியோர், குடும்பஸ்தன், துறவி, பஞ்சபராரிகள், ஏழை எளியோர் என யாவரும் பாராயணம் செய்யலாம். கணவனை இழந்தவர்களும் தடையின்றி விளக்கேற்றி பாராயணம் செய்யலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை, எந்த சடங்குகளும் இல்லை. 

அற்புதம் வாய்ந்த இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பை பல கோடி பேர் பாராயணம் செய்து எண்ணற்ற பலன்களை அடைந்ததோடு அவர்களது பிரச்சனைகள் தீர்ந்திடவும், வேண்டுகோள்கள் நிறைவேறி மனம் மகிழ்ந்ததும், இவ்வுலகம் கண்ட அற்புத உண்மையாகும். இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பை இன்னும் பலகோடி மக்கள் பாராயணம் செய்து மேன்மை அடைவார்கள் என்பது ஞானிகள் வாக்காகும். 

இதுவரையிலும் ஞானவாழ்வு அடைவதற்கு துணையாக இருந்ததும், இனி அடையப்போகின்றவர்களுக்கும் சித்தர்கள் போற்றித் தொகுப்பு துணையாகும் என்பது சத்திய வாக்காகும்.

துவக்கப்பாடல்

 திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
      திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
      திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
      திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

திருமந்திரம் : திருவடிப்பேறு1598 

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,

சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு

 

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்

தொகுத்து வழங்கிய 

“சித்தர்கள் போற்றித் தொகுப்பு”

 
துவக்கப்பாடல்

 

 

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்

திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்

திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே

திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி

ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி

ஓம் அநுமான் திருவடிகள் போற்றி

ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி

ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி

ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி

ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி           10

ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி

ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி

ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி

ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி

ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி

ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி                 20

ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி

ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி

ஓம் கதம்பமகரிஷிதிருவடிகள் போற்றி

ஓம் கபிலர் திருவடிகள் போற்றி

ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி

ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி

ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி              30

ஓம் கனராமர் திருவடிகள் போற்றி

ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி

ஓம் காசிபர் திருவடிகள் போற்றி

ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி

ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி

ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி

ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி

ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி

ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி                40

ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி

ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி

ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி

ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி

ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி

ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி                    50

ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி

ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி

ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி

ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி

ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி                  60

ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி

ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி

ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி

ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி

ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி

ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி

ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி                     70

ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி

ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி

ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி

ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி

ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி               80

ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் தேரையர் திருவடிகள் போற்றி

ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி

ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி

ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி

ஓம் நாரதர் திருவடிகள் போற்றி

ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி        90
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி      100

ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி

ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி      110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி           120

ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி           131

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி

நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

திருமந்திரம் 3047திருமந்திரம் 3047

                 மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும். மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம். 

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!

ஓங்காரக்குடிலில் நடைபெறும்அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம், பத்மநாபன், சுபாஸ், ராமமூர்த்தி, ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடிநூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள். 

திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,

முருகப்பெருமானின் கல்கி அவதாரம்

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்

தஞ்சை பெரிய கோயிலில் மகான் கருவூர்முனிவர் சன்னிதியில்,

கற்றதன் பயனே அகத்தியரை பூஜிப்பதுதான்

என்ற தலைப்பில் 14.04.1998 அன்று அருளிய

 அருளுரை

 ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

 

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நாங்கள் நிறைய இடங்களில் திருக்குறள் விழாவை நடத்தியிருக்கிறோம். அதைப்பற்றி இங்கே அன்பர் சொன்னார். எத்தனையோ கோடான கோடி நூல்கள், சங்க இலக்கியங்கள் போன்ற நூல்கள், எப்படியெல்லாம் மக்கள் வாழ வேண்டுமென்று வழிகாட்டுகிறது. 

ஆனால் திருமந்திரமோ, அப்பப்பா! நினைக்கும்போதே உடம்பெல்லாம் நடுங்கும். திருக்குறள், திருஅருட்பா, மகான் தாயுமானசுவாமிகள் அருளிய பாடல்கள், திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களை ஞானிகள் அருளியுள்ளார்கள். திருக்குறள் தோன்றி இரண்டாயிரம் வருடத்திற்கு மேலாக ஆகின்றது.

திருமந்திரம் போன்ற நூல்கள் மக்களுக்குச் சொல்லப்பட்ட சாத்திரங்கள். திருஅருட்பா போன்றவை தோத்திரப் பாடல்கள். 

சாத்திரமும், தோத்திரமும் மனித வர்க்கத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால் இந்நூல்களை படித்தவர்களால், பின்பற்ற முடியவில்லை. திருக்குறளை மனப்பாடம் செய்தேன், திருஅருட்பா, திருவாசகம், மகான் தாயுமானசுவாமிகள் அருளிய பாடல்கள், திருமந்திரம் போன்ற நூல்களை படித்தேன். ஆனால் ஏன் என்னால் பின்பற்ற முடியவில்லை? என்றான். மனப்பாடம் செய்வதற்கு மட்டும்தான் பயன்பட்டது. 

திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்கள் ஒரு வழிகாட்டி. நாங்கள் பெரியோர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய அனுபவத்தை மக்களுக்கு சொல்வது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 7. 

என்று முதல் அதிகாரத்திலேயே மிகப்பெரிய விசயத்தை சொல்லியிருப்பார் மகான் திருவள்ளுவர்.

 

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

திருக்குறள் – கடவுள் வாழ்த்து – குறள் எண் 2. 

நீ என்ன படித்து என்ன பயன்?” என்று மகான் திருவள்ளுவர் கேட்கிறார்.

நற்றாள் – தூய்மையான திருவடி, தூய்மையான அறிவை உடையவர்.கடவுள் யார் என்றால் தூய்மையான அறிவுடையவர். அவர் திருவடியை வணங்கவில்லையென்றால் நீ எதற்கு படித்தாய், அதனால் என்ன பயன்?” என்பார் மகான் திருவள்ளுவப்பெருமான். 

என்னைப் பார்த்தா கேட்டீர்கள்?” என்றான்.

உன்னைப் பார்த்து மட்டுமா? உலகத்தைப் பார்த்தும் கேட்கிறேன்என்பார்.

எங்களுடைய கருத்துகளை, நாங்கள்தான் அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் பின்பற்றுவது என்பது சின்ன விசயமல்ல. நாங்கள் எழுதிய பாடலை நீங்கள் படிக்கலாம், மனப்பாடம் செய்யலாம், அதைப் பற்றி பேசலாம். ஆனால் பின்பற்ற முடியுமா?” என்று கேட்டார். 

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். இப்பேர்ப்பட்ட திருவாசகத்தை படிக்க வேண்டும். அப்படி படித்தும் ஏன் மனம் உருகவில்லை? என்று கேட்டான். திருவாசகத்தைப் படித்தவுடன் மனம் உருகினால் இந்த இரண்டாயிரம் வருடத்தில், இந்நேரம் எத்தனையோ பேர் ஞானிகளாகியிருப்பார்கள். அதேசமயம் திருக்குறளைப் படிக்கிறான். திருக்குறளைப் படித்தவுடன் பின்பற்றினால், இந்நேரம் மிகப்பெரிய மேதையாக இருப்பான். 

ஆனால் இவ்வளவும் படித்து பின்பற்ற முடியவில்லை. ஞானிகள் அருளிய நூல்களை படித்திருக்கிறோம். ஆசான் திருமூலர் எழுதிய அந்தரங்கம் 8000 மந்திரம் இருக்கிறது. அதில் உள்ள கருத்துகள் யோகிகளுக்கு மட்டும்தான் புரியும். திருமந்திரம் 3000த்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் 8000 மந்திரம் சுத்தமாக ஞானத்தைப் பற்றி மட்டுமே பேசுவதாகும்.இவ்வளவு நூல்கள் இருக்கிறது, ஆனால் என்னால் படிக்க முடியவில்லையேஎன்றான். 

ஆசான் மாணிக்கவாசகர் தன்னுடைய அனுபவத்தை, சிவத்தைப் பற்றிய இன்பத்தை அப்படியே அந்த நூலில் வைத்திருக்கிறார்.

அப்பேர்ப்பட்ட நூலை படிக்கிறேன் என்பான்.நீ அதைப் படித்து எதற்காவது?” என்பார்.

படித்து எதற்காகும் என்று கேட்டவுடனேயே, தடுமாற்றம் வந்தது. என்ன காரணம்?

 

சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல்

முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்

அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்

சுத்தச் சிவமாவ ரேசுத்த சைவரே.

திருமந்திரம் – கடுஞ்சுத்த சைவம் – கவி எண் 1440.

          தன்னுடைய கடவுள் இன்பத்தை, சிவத்தின் பெருமையை, கடவுளின் பெருமையை ஆசான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் அப்படியே பாடல்களாக வைத்திருக்கிறார்.

சுத்தச் சிவனுரை – உரை என்று சொல்லாமல், சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல் என்றார்.

அதற்காக திருவாசகம் படிக்கக் கூடாது என்பதல்ல. திருவாசகத்தைப் படிக்கலாம்.

 

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்

ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை

நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற்

றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

திருமந்திரம் – சற்புத்திர மார்க்கம் – கவி எண் 1496.

 

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் என்றார். மனம் ஒரு நிலைப்பட திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களை பத்து நிமிடம் படிக்க வேண்டும்.

ஆசான் மாணிக்கவாசகரிடம், “நீர் பெற்ற அந்த பெரும்பேற்றை அடியேன் பெற்றுக் கொள்ள வேண்டும். நாங்களெல்லாம் நாயினும் கடையேன் ஐயா! நீங்களெல்லாம் முற்றுப்பெற்ற முனிவர்கள். உமது ஆற்றலை என்னால் அளந்து பார்க்க முடியாது. முதுபெரும் தலைவனாகிய நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்என்று கேட்க வேண்டும். ஆசான் மாணிக்கவாசகர் திருவடியைப் பற்று என்றார். 

தோய்தல் – கலத்தல், சார்தல், ஒன்று படுதல், இணைதல்.

சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல் – சிவத்தின் பெருமையைச் சொல்லக்கூடிய திருவாசகத்தைப் படிக்கலாம். ஆனால் அதிலேயே கிடந்து, காலத்தை வீணாக்காதே என்று சொல்கிறோம். 

திருவாசகத்தை எழுதியவர், எமனை வென்ற ஆசான். அவர் எவனையும் வெல்வார். எமனை வென்ற ஆசான் மாணிக்கவாசகருடைய திருவடியை உருகி தியானம் செய்தாலன்றி, உன்னுடைய கல்வி பயன்படாது என்றார். 

அவன் தான் வாலறிவன் என்றார். திருவாசகம் சொன்ன ஆசான் மாணிக்கவாசகரை வணங்கினால், ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம். இல்லையென்றால் அறியாமை நீங்காது, தெளிவான அறிவு வராது. நீ என்னதான் படித்தாலும் தெளிவான அறிவு வராது. 

திருவாசகத்தைப் பற்றி சொற்பொழிவு செய்யலாம். ஆனால் திருவாசகத்தை அருளிய ஆசான் மாணிக்கவாசகர் திருவடியைப் பற்றாவிட்டால் அறியாமை நீங்காது. சொற்பொழிவு செய்வதற்கு இரண்டாயிரம் ரூபாய் தருவதாக பேசி அழைத்து வந்திருப்பார்கள். ஆனால் முன்னூறு ரூபாய் குறைவாக இருக்கும், கொடுத்தால், அவன் வாங்க மாட்டான். அப்படிப்பட்டது அவனுடைய அறிவு. 

திருவாசகத்தைப் படித்து, ஆசான் மாணிக்கவாசகருடைய ஆசியைப் பெற்றுக்கொள். அது உனக்கு நன்மை தரும்.

அந்த காலம் வேறு, இந்த காலம் வேறுஎன்பான். அதனுடைய மர்மம் எங்களுக்குத் தெரியும். 

எந்த காலத்திலும் வாசி வசப்பட்டவன் தான் ஞானியாக முடியும். மூச்சுக்காற்று வசப்பட்டால், அது தேகபந்தம் அல்லது பாசத்தை நீக்கும். தொன்றுதொட்டு தாய் தந்தையால் எடுத்த காம தேகத்தை, வாசி வசப்பட்ட மக்கள்தான் நீக்குவார்கள். அவர்கள்தான் ஞானிகள். அவர்கள் தேகபந்தம், பந்தபாசம் அல்லது தேகபாசம் நீங்கிய மக்கள். அவர்களை வணங்க வேண்டுமென்று சொல்வார். 

அப்படிப்பட்ட ஞானிகளை பூஜை செய்து, அவர்களது ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய ஆசியில்லாமல் நூலறிவு பயன்படாது என்று திருமந்திரத்தில் ஆசான் திருமூலர் சொல்கிறார்.

ஆசான் திருமூலதேவரை யார் என்று நினைக்கிறீர்? அவர் நடந்தாலே, மலை பொடிபடும். ஆசான் கருவூர் முனிவரும் இது போன்ற வல்லமை உள்ளவர்தான். 

நாங்கள் கைக்கூப்பினால், மரணமிலாப்பெருவாழ்வு பெற்றவரை பார்த்துதான் கைக்கூப்புவோம். இறந்தவனை வணங்க வேண்டிய அவசியமில்லை. ஆசான் திருமூலதேவரும் அதே போன்ற வல்லமை உள்ளவர்தான்.

ஞானிகள் அனைவரையும் சிவபெருமானாக எண்ண வேண்டும் என்கிறார். 

சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல்

முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்

ஞானிகள் அனைவரும் வாழையடி வாழையென வந்தவர்கள். முத்தர் என்று சொல்லப்பட்ட ஞானிகளுடைய திருவடிகளை மனம் உருகி தியானம் செய்தால், அதுவே உனக்கு மோட்சலாபம் தரும் என்றார். ஞானிகளின் நூலில்தான் இந்த மர்மம் இருக்கும். திருமந்திரம், திருக்குறள் போன்ற அரிய நூல்களிலெல்லாம் ஞானிகள் தங்களது அனுபவத்தை எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனுபவத்தை எழுதி வைத்தாலும், தினம் தியானம் செய்தாலன்றி, நூலை படித்து அறிய முடியாது.  

எப்பொழுது பார்த்தாலும் பிரச்சனைகள், மன உளைச்சல் தாங்க முடியவில்லை. இதிலிருந்து விடுபட்டு நாம் முன்னேற ஞானிகளை வணங்கி கேட்க வேண்டும். ஆசான் கருவூர்முனிவர் மிகப்பெரிய வல்லமை உள்ள ஆசான். ஆசான் கருவூர் முனிவரை வணங்கி அவ்வப்போது உள்ள பிரச்சனைகளை கேட்கச் சொல்கிறார்.

 

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 80. 

காயம் என்றால் உடம்பு.

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி – நான் இந்த உடம்போடு பலகோடி காலங்கள் இருந்தேன் என்கிறார்.

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே – மூச்சுக்காற்று, இடகலையும், பின்கலையும் புருவமத்திக்குப் போக முடியாது. இதை இராப்பகல் அற்ற இடத்தே என்றார்.  

மூச்சுக்காற்று வசப்படுதல் வேண்டும். எப்படி வசப்படும்?

மூச்சுக்காற்று வசப்படுவதற்குத்தான் நூல்களை எழுதி வைத்திருக்கிறேன்என்றார். ஆசான் திருமூலர் தனது திருமந்திரத்தில் சொல்வார், 

காட்டுங் குறியும் கடந்தவக் காரணம்

ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்

கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது

ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

திருமந்திரம் – மோன சமாதி – கவி எண் 2937.

காட்டுங் குறியும் கடந்தவக் காரணம் – தன்னுடைய அனுபவத்தை, ஞான அனுபவத்தை நூலில் எழுதி வைத்திருப்பார். அதை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு சொல்லிக் கொண்டு வருகிறேன். இந்த பாடல் முக்கியமானது.

ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் – ஏட்டில் எழுதி வைத்து என்ன பயன்?

கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது, ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே என்றார். 

ஆசான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகமகாரிஷி, ஆசான் கருவூர்முனிவர், ஆசான் இராமலிங்க சுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் தாயுமானசுவாமிகள், மகான் பட்டினத்தார், மகான் அருணகிரிநாதர், ஆசான் சுப்பிரமணியர் போன்ற ஞானிகளை பூஜிக்கவில்லை என்றால், ஒருவன் கற்ற கல்வியாகிய ஏட்டுப்படிப்பு பயன்படாது.

ஞானிகளுடைய அனுபவத்தை நாம் பெற வேண்டும். திருமந்திரத்தை படிப்பது நியாயம்தான்.

திருமந்திரத்தை படிக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது? என்று கேட்டான். 

ஆசான் திருமூலதேவரை அழைத்து, “அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அதற்குரிய அறிவும், பரிபக்குவமும் வேண்டும். இதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்என்று கேட்க வேண்டும். 

இப்போது நாங்கள் பேசுவது உண்மை ஆன்மீகம். எனக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று ஆசான் திருமூலதேவரையோ, ஆசான் கருவூர்முனிவரையோ, ஆசான் அருணகிரிநாதரையோ கேட்கிறோம். இப்படி கேட்டு நூலை தொடுகின்றோம். 

அப்போதுதான் புரியும் அந்த ரகசியம்.

எண்ணிலடங்காத சாத்திரத்தை நான் எழுதி வைத்திருக்கிறேன். நான் மட்டுமல்ல. எத்தனையோ ஞானிகள் குவித்து வைத்திருக்கிறார்கள். உம்மால் அதை நெருங்க முடியாதுஎன்பார். 

கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது – அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று கேட்க வேண்டும்.

ஞானம் எது? வாசி வசப்படுதல். காற்று புருவமத்தியில் ஒடுங்குதல். அப்படி ஒடுங்கிய காற்று என்ன செய்யும்? 

புருவமத்தியில் இருந்து பிடரி வழியாக மயிரிழை போன்ற ஒரு நரம்பு வழியே வந்து, உந்தி கமலத்திற்குக் கீழே குண்டலியில் தங்கும். குண்டலியில் தங்கக் கூடிய காற்றுதான், உடல் மாசை நீக்கி, நாளுக்கு நாள் வெப்பத்தை உண்டாக்கி, மூலக்கனலை தூண்டி, இந்த உடம்பையே அமிழ்தபானமாக மாற்றும். இப்பேர்ப்பட்ட ரகசியத்தையெல்லாம் ஞானிகள் எழுதி வைத்திருப்பார்கள். 

நீங்கள் அனைவரும், உமது கல்வி தரத்தால், உமது கல்வியின் துணையால் ஞானிகளது நூல்களைத் தொடுகிறீர்களே தவிர, எங்கள் திருவடி துணை கொண்டு நூலை தொடவில்லைஎன்கிறார் ஆசான்.

என் திருவடி துணை கொண்டவனை நான் உயர்த்துவேன். அவனை நிலை உயரச் செய்வேன்என்றார். 

கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது

ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

அதர் என்றால் ஆட்டின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது. அது வளர்ப்பவனுக்கும் பயன்படாது, அறுப்பவனுக்கும் பயன்படாது. திருவடி துணையின்றி ஞானிகள் அருளிய பாடல்களை அறிய முடியாது என்பதற்காக இதை சுட்டிக்காட்டுகிறார்.  

தலைவனை பூஜை செய்தோம். நாங்கள் பக்குவியாக என்ன செய்ய வேண்டுமென்று தலைவனை கேட்டோம். நீ என் திருவடியைப் பற்று என்றார். தினமும் தொடர்ந்து ஆசான் கருவூர்முனிவரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான் காலாங்கிநாதரையும், ஆசான் போகமகாரிஷியையும் பூஜை செய்து, “அடியேன் பக்குவம் உள்ளவனாக மாற வேண்டும், ஞானத்திற்குரிய தகுதியையும், உங்களது ஆசியையும் நான் பெற வேண்டும்என்று தலைவனை கேட்டோம். எங்களுக்கு வேறு ஒன்றும் வேண்டாம். உங்களது ஆசியிருந்தால் போதும் என்றேன். 

உங்கள் ஆசியிருந்தால் அறிவு தெளிவடையும். உங்கள் ஆசியிருந்தால் தன்னடக்கம் வரும். உங்கள் ஆசியிருந்தால் வாசி வசப்படும். உங்கள் ஆசியிருந்தால் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்.என்று ஆசானிடம் சொன்னோம். 

மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் தாயுமானசுவாமிகள், மகான் பட்டினத்தார், மகான் அருணகிரிநாதர், ஆசான் நந்தீசர், ஆசான் அகத்தீசர், ஆசான் சுப்பிரமணியர், ஆசான் திருமூலர், மகான் காலாங்கிநாதர், ஆசான் போகமகாரிஷி போன்ற மகான்களை நாங்கள் பூஜை செய்தோம். 

பூஜை செய்து, “எங்களுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், எங்களுக்கு ஞானம் சித்திக்க வேண்டும்என்று நாக்கு தழும்பேறும்படி நாங்கள் கேட்டோம். ஆகையால் இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

ஆசான் எப்போது வாசி நடத்திக் கொடுப்பார் என்பதை நாங்கள் அறிவோம். 

திருவடி துணையின்றி மூச்சை கட்டுபவனெல்லாம் செத்தே போவான். அது மட்டுமல்ல, சுண்ணம், பற்பம் செந்தூரம், காயகல்பம் போன்றவற்றை சாப்பிடுவான். இவையெல்லாம் பரிபாஷையாக நூலில் சொல்லப்பட்டது. பரிபாஷையில் சொல்லப்பட்ட விசயத்தை, ஆசான் துணையில்லாமல் படித்து, இவன் செந்தூரத்தையும், கற்பத்தையும், பற்பத்தையும், மூலிகையையும் சாப்பிட்டால் செத்தே போவான். இந்த ரகசியம் இவனுக்கு தெரியாது. 

பரிபாஷையாக ஞானிகள் தங்களுடைய நூல்களில் சொன்னவற்றை இவன் சாப்பிட்டுவிட்டு தனது உடம்பை பார்த்து, “நான் சாகமாட்டேன்என்பான். கொஞ்சமாக சாப்பிட்டால் படபடவென்று இருக்கும், நாலைந்து வருடம் இருப்பான். அதிகமாக சாப்பிட்டால் வயிறு பெரிதாக வீங்கி விடும். அவன் சாப்பிடாமலேயே வயிறு பெரியதாக ஆகிவிடும், கையும் காலும் வீங்கி சாவான். இவனிடம் சொன்னாலும் கேட்கமாட்டான். 

சாரம் விட்டால் சாரமில்லை விசாரமாச்சு என்பார் மகான் கொங்கண மகரிஷி. இதெல்லாம் பரிபாஷைகள்.இப்படி பரிபாஷையில் சொன்னதை, நீ அறியாமல் ஒன்று கிடக்க ஒன்று செய்து மருந்தை சாப்பிடாதேஎன்றால், “இவர் என் வளர்ச்சியை தடுக்கிறார்என்பான். 

இன்னும் சிலபேர் தங்கம் செய்கிறேன், வாதம் செய்கிறேன் என்பான். அவன் இன்னும் மோசமானவன். வாதம், தங்கம் செய்ய ஆரம்பித்து இருக்கிற பணம் அனைத்தையும் அழித்துவிடுவான். மனைவியின் தாலியையும் வாங்கி, அதை விற்று, அந்த பணத்தையும் அழித்துவிடுவான். கடைசியில் திருவோடு வாங்கக் கூட நாதி இருக்காது. 

நீங்கள் இதைப் பற்றி அறிந்து கொள்வதற்காக உங்களுக்கு சொல்கிறேன். தங்கம் செய்பவன், பஸ்பம், செந்தூரம் சாப்பிடுபவன், திருவடி துணையின்றி தானே மூச்சுக்காற்றை வசப்படுத்த முயற்சிப்பவன், ஸ்தம்பிக்கிறவன் போன்றவனைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டு வருகிறோம். 

அற்பமா மூட ரறியாமல் யோகம்

சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்

கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்

அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.

மகான் சட்டமுனிவர் அருளிய குருசூஸ்திரம் 21 – கவி எண் 17.

 

பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று

காத்தே யடைத்து கனயோகி என்று

சேர்த்தே சீஷரைச் செய்துப தேசம்

கூத்திது வாகுங் கூடாது முத்தியே.

மகான் சட்டமுனிவர் அருளிய குருசூஸ்திரம் 21 – கவி எண் 18.

        அற்பமாம் மூடர் என்று உறுதியிட்டு சொல்கிறார்.

சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்

கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்

அற்பர் செய் யோகம் அழிம்பிது பாரே.

இவன் யோகம் செய்வதற்கு யாரிடமும் கேட்காமல், அவன் விருப்பத்துக்கு செய்வான். நாங்கள் சொன்னால் கேட்கமாட்டான். அவன் கடைசி வரையிலும் ரகசியமாகவே மருந்து உண்பான், யோகம் செய்வான்.  

இந்த லட்சணத்தில், இவனுக்கே ஒன்றும் தெரியாது. இவன் இருநூறு சீடரைச் சேர்த்துக் கொள்வான்.இப்படி மூச்சைக் கட்டு. இப்படி மூச்சை இழுத்து விடுஎன்று அவர்களுக்கு சொல்வான். ஞானவான்கள் அப்படி சொல்லமாட்டார்கள். 

மகான் இராமலிங்கசுவாமிகள், வாசி நடத்தித் தருவாண்டி ஒரு வாசியில் இங்கே வருவாண்டி என்று சொல்கிறார்.

வாசி நடத்தித் தர வேண்டும். ஆசான் சுப்பிரமணியர்தான் ஞானத்திற்கு தலைவன். அவர்தான் வாசி நடத்தித் தரவேண்டும். அவர் ஒரு நொடிப்பொழுதில் வருவார்.

மூச்சுக்காற்றை இப்படியெல்லாம் கட்டினால், முன்னரே ஞானியாகி இருப்பானே? நீ சொல்வதைப் பார்த்தால் ரொம்ப லகுவாக இருக்கிறதேஎன்பான். 

இவன் விருப்பத்துக்கு மூச்சைக் கட்டுவான். வெகுபேர் அவனுடன் சேர்வான்.அப்பப்பா! எப்படி மூச்சைக் கட்டினார்!என்பான். அப்படியே அந்தரத்தில் எழுந்திருப்பான். சிலபேர் அப்படியே காற்றில் எழுந்திருப்பான். கடைசியில் அவனும் இவனும் செத்துப்போவான். 

இதுபோன்ற ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.இதெல்லாம் நியாயமில்லை. நாங்கள் சொல்கிறபடி செய்கிறாயா? நீ முன்னேற வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? நாங்கள் ஒரு வார்த்தை சொல்கிறோம். எங்களிடம் கேள்என்றார் ஆசான்.

ஆசான் எங்களுக்கு வாசி நடத்திக் கொடுத்திருக்கிறார். 26.04.1979 அன்றுதான் எங்களுக்கு வாசி நடத்திக் கொடுத்திருக்கிறார் 

நாங்கள் அந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்கிறோம். ஆசான் திருமூலதேவரையும், ஆசான் அகத்தீசரையும், ஆசான் நந்தீசரையும் பூஜை செய்ததால், அவர்கள் மனம் இரங்கி எனக்கு வாசி நடத்திக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ஓங்கார ரீங்காரத்தில் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் முன்னேற வேண்டுமென்று நாங்கள் சொல்கிறோம், ஞானிகளை பூஜை செய்வதன் மூலமாக ஆசி பெற்று, நீங்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றலாம். ஒன்று கிடக்க ஒன்று செய்து செத்துப் போகாதேஎன்று கருணையோடு சொல்கிறோம். 

பிராணாயாமம், யோகாப்பியாசம் செய்தால் அதை செய்வதற்கு முன் உனது சொத்தையெல்லாம் மனைவி மக்களுக்கு எழுதி வைத்து விடு. ஏனென்றால், இன்னும் ஆறு மாதம் ஒரு வருடம்தான் இருப்பாய். யாரிடமாவது கடன் வாங்கிவிட்டு, பிறகு கொடுக்கிறேன் என்று சொல்லாதே, அதற்கு முன்பே செத்துப் போவாய்என்றார். பிராணாயாமம், யோகாப்பியாசம் செய்யாதே. அப்படி செய்தால் உன் மனைவி மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள். 

இவன் ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு, முதுகுத்தண்டாகிய வீணாத்தண்டில் கை வைத்து அப்படியே நகர்த்திக் கொண்டே வந்து, குண்டலி சக்தி உச்சிக்கு வந்து விட்டது என்பான்.

குண்டலியை ஏற்றி விட்டாயே? உனக்கு வாக்குபலிதம் வந்ததா? குண்டலி சக்தி ஏற்றினாயல்லவா? உனக்கு என்ன நன்மை நடந்தது?” என்றான். 

சொல் பலிதம் வந்ததா?

காமத்தை விட்டாயா?

மன அமைதி பெற்றாயா?

செல்வம் பெற்றாயா?

தொட்டது துலங்கியதா?

நீ என்ன முன்னேற்றம் கண்டாய்?

இப்படி கேட்டால், அவனிடம் பதிலில்லை.

நாங்கள் ஆசானை பூஜை செய்தோம். ஆசான் அகத்தீசரை பூஜை செய்ததனால் வாசி வசப்பட்டது. ஐந்து நபர்களுக்கு அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது தினமும் ஐந்தாயிரம் நபர்களுக்கு அன்னதானம் செய்கிறோம். 

எங்களுக்கு தினசரி நல்லபடி பொழுது போக வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்ற வேண்டும். பொது மக்களுக்கு குடிநீர் தர வேண்டும். இதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்என்று ஆசானைக் கேட்கிறோம்.

நாங்கள் இப்படியெல்லாம் ஆசானை பூஜை செய்கிறோம். நினைத்தது நடக்கிறது. 

பொது மக்களுக்கு குடிநீர் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. 1008 திருமணம் என்று அறிவித்தோம். இப்போது 1015 திருமணம் பதிவாகியுள்ளது. இதற்கும் ஆசானைக் கேட்கிறோம். 

ஆசான் சுப்பிரமணியர் தான் உலகத்திற்கு முதுபெரும் தலைவன். அவரை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அப்பப்பா! அவருடைய ஆற்றல் அளவிடமுடியாது.

 

முருகா வெனவோர் தரமோ தடியார்

முடிமே லிணைதா ளருள்வோனே

முனிவோ ரமரோர் முறையோ வெனவே

முதுசூ ருரமேல் விடும்வேலா.

– மகான் அருணகிரிநாதர் – திருப்புகழ் – திருவீழிமிழலை – கவி எண் 857.

 

ஆசான் சுப்பிரமணியரை பூஜை செய்கின்ற மக்களுக்கு வறுமையே இல்லை .
ஆசான் சுப்பிரமணியரை பூஜை செய்கின்ற மக்களுக்கு மரணம் இல்லை .
ஆசான் சுப்பிரமணியரை பூஜை செய்கின்ற மக்களுக்கு தொட்டது துலங்கும்.

   ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு, அவர்களுக்கு யோக நெறியை சொல்லிக் கொடுப்பான்.அன்னதானம் செய்யுங்கள். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றுங்கள்என்று இவன் சொல்லமாட்டான்.தினம் தியானம் செய்யுங்கள்என்று தலைவனையே அறிமுகப்படுத்தமாட்டான். தன்னையே கடவுள் என்று சொல்கிறான். எவ்வளவு பெரிய அபத்தம் அது? நீ உன்னையே கடவுள் என்று சொல்வதற்கு உன்னிடம் நியாயம் இல்லை. 

அப்படி என்ன தகுதி உனக்கு வந்தது? நீ என்ன புண்ணியவானா? இல்லை மரணமிலாப்பெருவாழ்வு பெற்றவனா? காமத்தை வென்றவனா? பொறாமையை நீக்கியவனா? எந்த அளவிற்கு நீ நிலை உயர்ந்திருக்கிறாய்?

தலைவனை அறிமுகப்படுத்தாத சங்கமும், அப்படிப்பட்ட நாடும் அப்படியே கெட்டுப்போகும். அவர்களைப் பார்த்தாலே தோஷம் என்பார்.

ஆசான் அருணகிரிநாதர் தலைவனைப் போற்றுவார். அவர் தனது பாடலில் சொல்வார்,

 

நீலச் சிகண்டி யிலேறும் பிரானெந்த நேரத்திலுங்

கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன் சொன்ன

சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே

காலத்தை வென்றிருப் பார்மரிப் பார்வெறுங் கர்மிகளே.

கந்தரலங்காரம் – கவி எண் 26. 

நீலச் சிகண்டி யிலேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான்என்று ஆசான் சுப்பிரமணியரைப் பற்றி சொல்லி தலைவனை அறிமுகப்படுத்துகிறார்.

நீலச்சிகண்டி – மயில் வாகனம்.அருணகிரிநாதாஎன்று சொல்லி வாய் மூடும் முன்னே, “அஞ்சேல் மகனே!என்று சொல்லும் ஆற்றல் ஆசான் அருணகிரிநாதருக்கு உண்டு.  

தன்னை கடவுள் என்று சொல்லி என்னை பூஜை செய்என்று போலி ஆன்மீகவாதி சொல்வான். யார் ஒத்துக் கொள்வது? யார் கேட்பது? இது ஆன்மீக நாடாக இருந்தால், ஆன்மீகம் கலந்த அரசியல் நடந்து கொண்டிருந்தால், இவன் இவன் இப்படி இப்படி செய்கிறான், இதனால் நாடே கெட்டுப்போகும் என்று சொல்லலாம். 

இல்லறத்தான் அவனிடம் சென்று விபூதி மந்திரிப்பான், தகடு மந்திரிப்பான். இதற்கு பணம் வாங்கி அதைக் கொண்டு குடும்பத்தை நடத்துவான். இப்படி ஊரை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து வட்டிக்குக் கொடுக்கிறான். இப்படியெல்லாம் சமுதாயத்தில் இருக்கிறது. நாங்கள் யாரைப் பார்த்தும் பொறாமைப்படவில்லை. 

தலைவனை அறிமுகப்படுத்துவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் அனுபவத்தைச் சொல்லிக் கொண்டு வருகிறோம். ஆசான் அருணகிரிநாதரை பூஜை செய்தாலும், ஆசான் ஞானபண்டிதனை பூஜை செய்தாலும் ஒன்றுதான். ஏனென்றால், மகான் அருணகிரிநாதர் சொல்வார்,

 

யாமோதிய கல்வியும் எம் மறிவும்

தாமே பெற வேலவர் தந்ததனால்

பூமேல் மயல்போய் அற மெய்ப்புணர்வீர்

நாமே னடவீர் நடவீர் இனியே.

கந்தரனுபூதி – கவி எண் 17. 

தினசரி தியானம் செய்தாலன்றி, திருக்குறளை படித்து அறிய முடியாது. திருக்குறளை, திரு அருட்பாவை, திருப்புகழைப் படிக்கலாம்.

முதலில் தலைவனுடைய ஆசி இருக்க வேண்டும். தலைவன் ஆசியில்லாமல் திருக்குறள், திருஅருட்பா, திருவாசகம், திருப்புகழ் மனதில் பதியாது என்பார். இதையெல்லாம் கடவுளை அறிமுகப்படுத்துவதற்காக சொல்கிறோம். 

நமது சங்கம் ஆசான் கருவூர் முனிவரை, ஆசான் திருமூலதேவரை, ஆசான் மாணிக்கவாசகரை அறிமுகப்படுத்தும். தலைவனை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல, தினமும் தியானம் செய்ய சொல்கிறோம். தினமும் ஐந்தாயிரம் மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறோம். இதுவரை எண்பது லட்சம் மக்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கம்மங்கூழ், நீர்மோர் வழங்கியிருக்கிறோம். தினமும் பன்னிரண்டாயிரம் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கி வருகிறோம். இங்குள்ள எல்லோரும் அன்புள்ள தொண்டர்களாக, நல்ல தொண்டர்களாக இருக்கிறார்கள். 

சில சங்கம் இருக்கும். அதில் பல அங்கம் இருக்கும். எங்கு பார்த்தாலும் வஞ்சனை. ஆனால் நமது சங்கம் அப்படிப்பட்டது இல்லை.

ஆசான் நீடு வாழ வேண்டும். தானும் வாழ வேண்டும்என்பார்கள்.

இந்த தொண்டர் கூட்டம் எப்போது வந்தது? இதையெல்லாம் முன்பே ஆசான் சுப்பிரமணியர் அனுப்பி வைத்து விட்டார். இதை கந்தரலங்காரத்தில் ஆசான் அருணகிரிநாதர் சொல்வார், 

இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்

கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா கிரௌஞ்ச வெற்பை

அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை

விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.

கந்தரலங்காரம் – கவி எண் 100.

 

மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும்; இனம்தூயார்க்கு

இல்லைநன்று ஆகா வினை.

திருக்குறள் – சிற்றினம் சேராமை – குறள் எண் 456. 

அன்பால் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டிய வா – மனம் தூய்மையிருந்தால் நிச்சயம் நல்ல நட்பு கிடைக்கும் என்றார். தூய மனதை ஆசான் ஞானபண்டிதனும், ஆசான் அருணகிரிநாதரும், ஆசான் கருவூர்முனிவரும் கொடுத்திருக்கிறார்கள். இந்த நல்ல மனது, ஆசான் கொடுத்த பிச்சை. 

நல்ல பண்புள்ள தொண்டர்களை, தூய்மையான தொண்டர்களை தலைவன் அனுப்பியிருக்கிறார். அதனால்தான் நாங்கள் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிக்க முடிந்தது. 

தொண்டர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சங்கத்தில் இருக்கிறார்கள். இருபத்து நான்கு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் சங்கத்தில் ஒன்றாக ஒற்றுமையாக உள்ளார்கள்.

ஒரே லட்சியம். அனைவரும் சாதி, மதம் கடந்து எல்லோரும் ஒரு தாய் மக்களாக இருக்கிறார்கள்.

ஒரு தாய் என்றால் அவர் யார்? என்றான். 

ஞானிகள் தான் தாயாக இருக்கிறார்கள். ஆசான் மஸ்தான் சாகிபு, மகான் பீர்முகமது, ஆசான் புஜண்டமகரிஷி, மகான் திருமூலதேவர் போன்ற ஞானிகள் தாயாக இருந்து அருள் செய்கிறார்கள். இவர்களெல்லாம் மிகப்பெரிய வல்லமையுள்ளவர்கள். இவர்களை சாதாரணமானவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. 

பாயுமீ ராறுகலை பாயாது பக்குவம்

பண்ணிவைப் பதுச மாதி

பழவினை யிறக்கவுஞ் சுழுமுனை

திறக்கவும் பழகிவரு வதுச மாதி.

மகான் மஸ்தான் சாகிபு – கவி எண் 1. 

மகான் மஸ்தான், மகான் பீர்முகமது, மகான் யாகோபு இவர்களெல்லாம் மிகப்பெரிய ஞானிகள். எல்லோரும் கடவுள். அத்தனை பேரும், மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவர்கள். 

அங்கே மத துவேசம் இருந்தாலே, கடவுள் அங்கே இல்லை என்று அர்த்தம். அதே சமயத்தில் பொருளாதாரத்தைக் கண்டு மயங்குகின்ற மனம் இருந்தால் அங்கே தூய தொண்டர்கள் இருக்க மாட்டான்.நாம் இவ்வளவு தூரம் பாடுபடுகிறோம். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் போடுகிறாராம்என்பான். 

பல கோடி செல்வம் வந்தது எங்களிடம். வந்த பொருள் அனைத்தையும் அறப்பணிக்கு செலவு செய்தோம். இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆசானிடம்அரிசி மூட்டை தீர்ந்து போய்விட்டது?” என்று கேட்போம்.அதற்கென்ன நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்என்பார் ஆசான். 

ஆசான் ஞானபண்டிதனைநீரே பெரியோன், நீரே சக்கரவர்த்தி, நீரே ஞானத்தலைவன், என்னை ஏற்றுக் கொண்டு, எனக்கும், இந்த தொண்டர்களுக்கும் ஆசி தந்து, நாங்கள் மக்களுக்கு அன்னதானம் செய்ய நீர்தான் அருள் செய்ய வேண்டும்என்று கேட்டோம். பொருளையும் தந்து, அருளையும் தந்து, அன்பர் கூட்டத்தையும் தந்திருக்கிறார். 

இவ்வளவு சாதி, மதத்தை கடந்து நாங்கள் தொண்டு செய்கிறோம். இதற்கு என்ன துணை? என்று கேட்டான். ஒன்றே ஒன்று ஞானபண்டிதன் சுப்பிரமணியர் திருவடிதான் துணை. 

நாங்கள் தஞ்சையில் பத்தாண்டுகளுக்கு முன்னே, ஆசான் கருவூர் முனிவருக்கு பூஜை செய்திருக்கிறோம். பௌர்ணமி பூஜைக்கு முப்பது அன்பர்கள் தொடர்ந்து வந்து தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அறப்பணிகள் செய்கிறார்கள். நாங்கள் ஓங்காரக்குடிலில் இருந்து கொண்டே, தடையில்லாமல் அவை நடக்க வேண்டுமென்று கேட்டோம். 

பங்குனி உத்திரத்தன்று, அன்னதானம் செய்தோம். துறையூரில் சில கோவில்களில் அன்னதானம் செய்தார்கள். அங்கே அன்னதானம் செய்வதற்கு தேவையான குடிநீர் கொடுத்தோம். அன்று சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த எல்லா தண்ணீர் பந்தலுக்கும், நமது குடில் தண்ணீர் வண்டியில், குடிநீர் கொடுத்தோம். 

எங்கெல்லாம் அறப்பணி நடக்கின்றதோ, எங்கெல்லாம் உண்மை வழிபாடு நடக்கின்றதோ, அதை சிவத்தொண்டாக எண்ணி நாங்கள் உதவி செய்வோம். 

தானமும் தவமும் தான் செய்வாராகில்

வானவர்நாடு வழி திறந்திடுமே.

மகான் ஔவையார்.

கடவுளை அடைய விரும்புகிறாயா? தினமும் தியானம் செய்ய வேண்டும். உன் ஆன்மாவிற்கு ஆக்கத்தை நீ தேடிக்கொள்ள வேண்டும். தானமும் தவமும் தான் செய்ய வேண்டும் என்றார். எங்கெல்லாம் பசியாற்றுகிறார்களோ, எங்கெல்லாம் ஞானிகளை வணங்கி, உருகி தியானம் செய்கிறார்களோ அங்கே ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். 

பத்து பன்னிரண்டு வயதில் பெண் குழந்தை அம்மை கண்டு இறந்து போகும். பெரும் கோடீஸ்வரன் குடும்பமாக இருக்கும். இறந்த அந்த குழந்தையை பதிவு செய்வார்கள். அதற்குப்பிறகு பல தலைமுறை சென்றபின், அதை கோவிலாக கட்டி, கும்பாபிஷேகம் செய்வான். 

செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு

முத்திதான் இல்லையடி – குதம்பாய்

முத்திதான் இல்லையடி.

மகான் குதம்பைச்சித்தர் பாடல்கள் – கவி எண் 3. 

நாங்கள் செத்துப் பிறக்கின்றவனைக் கும்பிட மாட்டோம். எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒருவரை பார்க்கின்றபோதே இனம் தெரியும்.

அவன் யாரென்று தெரியவரும். இவன் பெரிய மனிதன். சாதாரண ஆளாக இருந்தால் இதை சொல்லியிருக்க முடியாது. பெரிய மனிதன் தான் இதை சொல்வான் என்பதையெல்லாம் நாங்கள் அறிவோம். 

போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தவர்களை, அம்மை கண்டு இறந்தவர்களை, ஒருவரால் தண்டிக்கப்பட்டவர்களை வணங்குவது நமது ஆன்மாவிற்கு ஆக்கத்தை தராது. போர்க்களத்தில் புற முதுகிடாது வீர மரணம் அடைந்தவரை நடுகல் நட்டு, வணக்கம் செய்வார்கள். இவர்களை வணங்கினால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது. இவர்களை நாங்கள் வணங்க மாட்டோம். நாம் அதை குறை சொல்ல விரும்பவில்லை. 

நீங்களெல்லாம் ஆசான் அகத்தீசரை பூஜை செய்தும், ஞானிகளை வணங்கியும், உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.

திருமந்திரம் ஒரு உயர்ந்த நூல். ஆசான் திருமூலதேவர் வழிகாட்டுவார். சாதாரணமாக இந்த நூலை அறிய முடியாது.

 

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

திருமந்திரம் – சரீர சித்தி உபாயம் – கவி எண் 724. 

திருமந்திரத்தை தொட்டுப் பார்க்கவே நூறு ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவ்வளவு உயர்ந்த நூல்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் என்பார் மகான் திருமூலர். நன்றாக சாப்பிடுவான், காமம் வரும். காமம் வந்துவிட்டதே என்று பட்டினி போட்டால் சாவான். செத்துப் போய்விடுவோமென்று சாப்பிட்டால் காமம் வந்துவிடும்.

 

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

நீங்கள் தினமும் உண்டு, உடம்பை வளர்க்கின்றீர்கள்? காலையில் நாலு மிருதுவான இட்லி, கெட்டி சட்னி வைத்து சாப்பிடுகிறீர்கள். ஒரு நாள் பூரி மசால், ஒருநாள் பரோட்டா சாப்பிடுகிறீர்கள். இப்படியா உடம்பை வளர்க்க வேண்டும். இப்படியா உடம்பை வளர்ப்பது? அப்படியென்றால் அவர்கள் எதை சொன்னார்கள்?

அது வேறு. அந்த உடம்பு சூட்சும தேகம். சூட்சும தேகத்தை வளர்ப்பவர்கள் ஞானிகள். 

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே – உள்ளுடம்பை வளர்ப்பதற்கு புற உடம்பை நசித்தல் வேண்டும், யோகிகளுக்கு மட்டும் இது தெரியும். ஆசான் திருமூலதேவர், ஆசான் போகமகாரிஷி, ஆசான் காலாங்கிநாதர் ஆசியிருக்க வேண்டும். இல்லையென்றால் அறிய முடியாது.

வெளியே சென்று ஆரவாரம் செய்தால் வேலைக்கு ஆகாது. எவனொருவன் ஆரவாரம் செய்கிறானோ, அவனுக்கும் இந்த துறைக்கும் சம்பந்தமே இல்லை . 

உடம்பை வளர்க்கும் உபாயத்தை அறிய, ரகசியமாக அந்தரங்க பூஜை செய்ய வேண்டும். இப்போது நாம் வளர்க்கின்ற உடம்பெல்லாம் காமதேகம். இந்த உடம்பிற்கு உணவு தந்தால் காமம் வரும், உணவு தராவிட்டால் செத்தே போவான். இது அப்படிப்பட்ட மார்க்கம் அல்ல.

ஆசான் திருமூலதேவர் திருவடிகளை, கண்ணீரால் கழுவ வேண்டும். 

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்

நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை

வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்

ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே.

திருமந்திரம் – பத்தியுடைமை – கவி எண் 2627. 

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல் – கன்று பசுவை அழைப்பது போலும், எனது ஆசானைத் தாயாக எண்ணி, நான் கன்றாக இருந்து அழைத்தேன் என்பார்.

நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை

வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்

ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே. 

இப்பேர்ப்பட்ட ரகசியமெல்லாம் திருமந்திரத்தில், திருக்குறளில் இருந்தும், பக்தி விசுவாசம் இல்லாததால், ஞானிகள் ஆசி இல்லாததனால், ரகசியங்கள் எல்லாம் வெளியாகாமல் இருக்கிறது. திருமந்திரம், திருக்குறள் வீடுதோறும் இருக்க வேண்டும். 

ஞானிகளை வணங்கும் முறையைச் சொல்லியிருக்கிறோம். திருமந்திரத்தில் சாத்திரம் மட்டுமல்ல, தோத்திரமும் இருக்கிறது. திருமந்திரத்தை பாடலாகவும் பாடலாம். அருட்பாடல் கொண்ட திருவாசகமும் தோத்திர நூல். 

உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிவது சாத்திரம். சாத்திரம் என்பது உடம்பிற்கும், உயிருக்கும் உள்ள தொடர்பைப் பற்றியது. ஏன் முதுமை வந்தது? ஏன் பரிணாம வளர்ச்சி வந்தது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? என்பதை சொல்வது சாத்திரம் ஆகும். 

தோத்திரம் என்பது கடவுளை பூஜை செய்வது, கடவுளை போற்றிப் பாடி பூஜை செய்வது. இப்பேர்ப்பட்ட நூல்களெல்லாம் தமிழகத்தில் குவிந்து கிடந்த போதிலும், சரியான பாதை காட்டாததால் மக்கள் வழி தெரியாமல் இருக்கிறார்கள். 

ஏமாற்றி பணம் பறிக்கின்ற, பொருள் வெறியனாக இருப்பவனெல்லாம் குருவா? அவன் உனக்கு அவசியமா என்ன? ஜாதி வெறியனாக இருப்பான், மிகப்பெரிய காமுகனாக இருப்பான். இதுபோன்று இருப்பவனை ஏற்றுக் கொள்ளாதே. அவனையெல்லாம் குப்பை மாதிரி தள்ளு. 

இன்று முதல் ஆசான் திருமூலதேவரை, ஆசான் கருவூர்முனிவரை வணங்கி போற்றி பூஜை செய்ய வேண்டும். அவர்களை சாதாரணமாக நினைக்காதீர்கள். நாங்கள் சுட்டிக்காட்டுகின்ற ஞானிகள் எமனை வென்றவர்கள். ஆசான் கருவூர்முனிவரும், ஆசான் திருமூலதேவரும் எமனை வென்ற மாபெரும் ஞானிகள்.

 

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்

சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்

பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்

தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி ராரே.

திருமந்திரம் – அணைந்தோர் தன்மை – கவி எண் 2968.

 

ஆசான் கருவூர்முனிவர் எமனை வென்றவர்.

ஆசான் கருவூர்முனிவர் தேக பந்தத்தை உடைத்தெறிந்தவர்.

ஆசான் கருவூர்முனிவர் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தவர்.

ஆசான் கருவூர்முனிவர் ஞான உடம்பை வளர்த்தார். தூல தேகத்தின் துணை கொண்டு, சூட்சும தேகத்தினை அணு அணுவாக வளர்த்துக் கொண்டவர் ஆசான் கருவூர்முனிவர். 

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்த ஆசான் கருவூர்முனிவரை பூஜை செய்யலாம், ஆசான் திருமூலரை பூஜை செய்யலாம். இவர்கள் அனைவரும் ஒரே தன்மை உள்ளவர்கள் தான். அத்தனை பேரும் தேகபந்தத்தை நீக்கினவர்கள்தான். 

ஆசான் திருவள்ளுவர் ஞானி. அவரை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய கடவுள், அவர் மிகப்பெரிய கடல், தேகபந்தத்தை நீக்கியவர். அவர் எழுதிய திருக்குறள் அளவிலா பெருமையுடையது. 

புலவன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவான். புலவன் ஒரு கருத்து சொல்வான். பின்னர் அதை மாற்றி வேறு ஒரு கருத்து சொல்வான். ஞானிகள் அப்படி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் முற்றுப்பெற்றவர்கள் அல்லவா? அவர்கள் சொன்னால் அது சொன்னதுதான். அதை மாற்றவோ, மறுபரிசீலனை செய்வதற்கோ, இல்லையென்று சொல்வதற்கோ, ஒருவருக்கும் துணிச்சல் இருக்க முடியாது. திருமந்திரம், திருவாசகம், மகான் தாயுமானசுவாமிகள் அருளிய பாடல்கள், திருஅருட்பா போன்ற ஞானநூல்களெல்லாம் இதுபோன்ற பெருமையுடையதுதான். 

தேகபந்தத்தை நீக்கி தனித்தன்மை பெற்ற, ஜோதி உடம்பைப் பெற்ற ஞானிகள் எழுதிய நூல்களைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுவோம்.

மற்றவனெல்லாம் மூட்டை மூட்டையாக புத்தகங்களை எழுதுவான், அவன் விருப்பத்திற்கு உரை எழுதிக் கொண்டிருப்பான். புத்தகக்கடையில் எங்கு பார்த்தாலும், இருக்கும். ஆனால் ஒன்றுக்கும் ஆகாது. 

திருக்குறள், திருஅருட்பா, திருவாசகம், திருமந்திரம் போன்ற ஞானிகள் அருளிய நூல்கள் மிகுந்த பெருமை வாய்ந்தவை. இந்த நூல்களை தொட்டாலே போதும். திருமந்திரத்தைத் தொடும்போது, ஆசான் திருமூலரை வணங்கி, “நீங்களெல்லாம் பெரியவர்கள் ஐயா! உங்கள் திருவருட்கடாட்சத்தால் எழுதப்பட்ட நூலைத் தொடுவதற்கு எனக்கு பாக்கியம் கிடைத்திருக்கிறது. நான் தங்களால் எழுதப்பட்ட நூலை படிக்கிறேன். இதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்என்று கேட்டால், தப்பிக்கலாம். 

போலி சாமியாரை நம்ப வேண்டாம். என்ன காரணம்? அவனை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவரே சொல்வார்,

 

கணைகொடிது; யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன

வினைபடு பாலால் கொளல்.

திருக்குறள் – கூடா ஒழுக்கம் – குறள் எண் 279. 

கணை கொடிது – அம்பு கூர்மையாக இருக்கும். இவனைப் பார்த்தால், காவியும், கமண்டலமும், புலித்தோல் ஆசனமும், யோகத்தண்டும் வைத்திருப்பான். கணை என்பது அம்பு, கூர்மையாக அழகாக இருக்கும். எனவே நீ பார்க்கும் தோற்றத்தை வைத்து முடிவெடுக்காதே. 

கணைகொடிது; யாழ்கோடு செவ்விது ஆங் கன்ன – அம்பு அழகாக இருக்கும். ஆனால் அது கொலைக் கருவி. யாழ் வளைந்திருக்கும் அது ஒரு இசைக் கருவி. அது நன்மையான, இனிமையான இசையை தரக்கூடியது. 

இதுபோன்ற செயல்கள் உள்ளவனைப் பார்த்துக் கொள். இதுதான் செயல்பாடு என்றார். செவ்விது ஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்என்றார். நீ அவனுடைய செயலைப் பார்த்து முடிவெடுத்துக்கொள். 

தாடி வைத்திருக்கிறான், காவி அணிந்திருக்கிறான் என்று எண்ணி, ஒருவனை சாமியார் என்று முடிவெடுக்காதே. அவன் ஊரை ஏமாற்றுபவனாக இருப்பான். அவன் தொட்டதெல்லாம் துலங்காது. அவன் கையில் விபூதி வாங்கினாலும் உருப்படாது. நீங்களெல்லாம் போலி சாமியாரை நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காக சொல்கிறேன். 

வாய்த்திட்டால் மௌன குரு வாய்க்க வேண்டும் என்று சொல்வார் ஆசான் தாயுமானசுவாமிகள். தாயுமானசுவாமிகளும் மிகப் பெரிய மகான். இதையே ஆசான் திருவள்ளுவரும் சொல்வார்,

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.

திருக்குறள் – துறவு – குறள் எண் 345. 

யோகிகளுக்கு மட்டும்தான் உண்மையானவரை இனம் காண முடியும். ஆளை பார்த்தவுடனே தெரிந்து கொள்வார்கள்.

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

என்பார். இங்கே ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.

என்றார். உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தவர் ஆசான் திருவள்ளுவப் பெருமான். அவரை வெறும் புலவன் என்று எண்ணித் விடாதீர்கள். பெரும் வல்லமையுள்ள ஆசான். கேட்டதெல்லாம் தரக்கூடிய வல்லமை உள்ள ஆசான் திருவள்ளுவப்பெருமான். அவரை பூஜை செய்யலாம். 

நீங்களெல்லாம் இன்று முதல், உலக ஆசானை நாடிப் போக வேண்டவே வேண்டாம். ஆசான் அருணகிரிநாதரையும், ஆசான் இராமலிங்கசுவாமிகளையும், ஆசான் மாணிக்கவாசகரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான் கருவூர் முனிவரையும் பூஜை செய்து, அன்றாடப் பிரச்சனைகளை அவர்களிடம் சொல்ல வேண்டும். ஆன்மா சிறைப்பட்டுக் கிடப்பதை உணர்ந்து, ஆன்மாவின் சிறையை நீக்கி, ஆன்ம ஜோதியை பெற வேண்டும். இதை நான் சொல்லவில்லை. திருமந்திரத்தில் இருக்கிறது

 

இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்

குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்

சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ

டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

திருமந்திரம் – பக்குவன் – கவி எண் 1701. 

திருமந்திரத்தில் இருக்கிறது இந்த ரகசியம்.

இன்னும் மனது செம்மைப்படவில்லை, இன்னும் வறுமை சூழ்ந்துள்ளது, நான் வாங்கும் சம்பளம் என்னுடைய வறுமையான வாழ்க்கைக்கே போதவில்லை. அதேசமயத்தில் நோய் நொடியாக உள்ளதால், மாத்திரைக்கும் மருந்துக்கும் செலவாகிறது. நீங்களெல்லாம் பெரியவர்கள், எதையும் செய்யும் வல்லமை உங்களிடம் இருக்கிறது. நீங்கள்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்என்று கேட்க வேண்டும். 

இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்தி – ஐ வணக்கம் என்றால் ஐந்து புலன்களும் ஒருநிலைப்படுத்தி வணங்கி,

குறையது கூறிக் குணங்கொண்டு போற்ற – தம்மிடம் உள்ள குறையை எல்லாம் ஆசானிடம் கூறி அவரைப் போற்ற வேண்டும்.

சிறையுடல் நீயறக் காட்டி – சிறைப்பட்ட ஆன்மா. ஆன்மா உடம்பு என்று சொல்லப்பட்ட காமதேகத்தில் அகப்பட்டு இருக்கிறது.

சிவத்தோ டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே – தலைவன் என்ன செய்வான், நமக்கு உணர்த்துவான்.

 

களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்து

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 114.

 

திருமந்திரத்தை சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். களிம்பு அறுத்தான் – களிம்பு என்பது உடம்பால், தாய் தந்தையால் எடுத்த காம தேகத்தை அறுத்தல் வேண்டும். 

உடம்பை பட்டினியும் போடக்கூடாது, விகாரமும் குறைய வேண்டும். இதில் எவ்வளவு நுட்பம் இருக்கிறது. தமிழன்தான் இதை கண்டுபிடித்திருக்கிறான் இதற்குத் தலைவன் ஞானபண்டிதன். 

தென்னாடுடைய சிவனே போற்றி என்றார். ஏன் தென்னாட்டில்தான் சிவன் இருப்பானா? வேறு எங்கும் இல்லையா? என்றால் அந்த பெருமை, தகுதி தமிழனுக்குத்தான் உண்டு என்றான். அந்த தன்மை தமிழர்களுக்கு உண்டு. 

இந்த உடம்பையும், உயிரையும் பற்றி ஆராய்ந்து, ஆன்ம ஜெயம் பெற்றவர்கள் ஞானிகள். இப்படிப்பட்ட ரகசியமெல்லாம் இருக்கிறது. நீங்களெல்லாம் ஞானிகளை தினம்தினம் பூஜை செய்து, ஆசான் அகத்தீசரையும், ஆசான் நந்தீசரையும், ஆசான் திருமூலதேவரையும், ஆசான் கருவூர்முனிவரையும் பூஜை செய்து, அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்த்து, ஆன்மா சிறைப்பட்டுக் கிடப்பதை உணர்ந்து, ஆன்மாவின் சிறையை நீக்கி, ஆன்ம ஜோதியைப் பெற வேண்டும். 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.

மகான் தாயுமானவசுவாமிகள் – பராபரக்கண்ணி – கவி எண் 221. 

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று எண்ணுவது சின்ன விசயமல்ல. அவன் கெட வேண்டும், இவன் கெட வேண்டும், அவன் அழிய வேண்டும், இவன் அழிய வேண்டும், பகைவன் எல்லாம் ஒழிய வேண்டும் என்று மனித வர்க்கம் நினைக்கும். 

ஆனால் பெரியோர்கள் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். பெரியோர்கள் எல்லா உயிர்களும் வாழ வேண்டுமென்று நினைப்பார்கள். இது பெரிய வார்த்தை. சாதாரண வார்த்தை என்று எண்ண வேண்டாம். பெரியோர்களுடைய ஆசி இருந்தால்தான் இந்த பரந்த மனம் வரும். இல்லையென்றால் பகையை அழிக்க நினைப்பான்.

நீங்களும், உங்களது பிள்ளைகளும், உங்கள் குடும்பத்தார்களும் நீடு வாழ வேண்டும். உலகமெல்லாம் செழிக்க வேண்டும். எங்களை நீங்கள் வாழ்த்த வேண்டும். 

அவன் சாமிக்கு குடம், குடமாக பாலை ஊற்றவில்லை, ஆனால் ஏழைகளுக்கு பசியாற்றுகிறான். ஏழைப் பிள்ளைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறான். ஐம்பது லிட்டர் பாலை நன்றாகக் காய்ச்சி, சர்க்கரையைப் போட்டு, அங்கிருக்கும் குழந்தைகளுக்குத் தருகிறான். மானம் காக்க பிள்ளைகளுக்கு துணி தருகிறான். முடிந்தவரை கல்விக்குத் தொண்டு செய்கிறான். 

இப்படி மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பதுதான் உண்மையான ஆன்மீகம். மற்றதெல்லாம் ஆன்மீகமல்ல. அதே சமயத்தில் பாலாபிஷேகம், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல் என்று ஏதேதோ செய்கிறான். அதைப் பற்றி அவசியமில்லை. இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

நாங்கள் சமுதாயத்திற்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறோம். நீங்களும் எங்களை வாழ்த்தி, எங்கெல்லாம் அறப்பணி நடக்கிறதோ, எங்கெல்லாம் புண்ணியங்கள், சிவத்தொண்டு நடக்கிறதோ, அங்கே அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். 

ஆங்காங்கே தானதர்மம் நடக்க வேண்டும். உண்மை வழிபாடாகிய ஞானிகளை வணங்குகிற வழிபாடு நடக்க வேண்டும்.

ஆசான் அருணகிரிநாதர், ஞானபண்டிதனாகிய சுப்பிரமணியரைப் பற்றிச் சொல்வார்,

முருகா எனவோர் தரம் ஓதடியார்

முடிமேல் இணைதாள் அருள்வோனே 

ஒரு முறை முருகா என்றால், ஈரேழு பதினான்கு உலகமும் கிடுகிடுவென நடுங்கும் என்றார். அப்பேர்ப்பட்ட தலைவன்தான் ஆசான் சுப்பிரமணியர், ஆசான் அருணகிரிநாதர், ஆசான் அகத்தீசர், ஆசான் கருவூர்முனிவர். 

நீங்களெல்லாம் முடிந்த அளவிற்கு மாதம் இருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.ஓம் சரவண பவ”, “ஓம் கருவூர்தேவாய நம”, “ஓம் திருமூலதேவாய நம”, “ஓம் இராமலிங்கசுவாமியே நம”, “ஓம் மாணிக்கவாசகர் தேவாய நமஎன்று ஞானிகளை தினம் ஐந்து நிமிடம் பூஜை செய்ய வேண்டும். பெரியோர்களுடைய ஆசியை பெற்று, இல்லறத்தையும் நல்லபடி நடத்த வேண்டும். நமக்கு கிடைத்தற்கரிய மானிடப்பிறவி கிடைத்திருக்கிறது.

 

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற் கரிய பிரானடி பேணார்

பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்

பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

திருமந்திரம் – கேடுகண்டு இரங்கல் – கவி எண் 2090. 

ஓம் சரவண பவஎன்று தினமும் சொல்லி பூஜை செய்து ஞானிகளை வணங்கிஅடியேன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும்என்று கேட்க வேண்டும். மாதம் இருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

நாம் வசதி உள்ளவர்களாக இருப்போம். அக்கம்பக்கம் உள்ள ஏழை எளியவன் நம்மிடம் வந்து பொறாமைப்பட்டு வம்பிழுப்பான். அவனை நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால், 

பஞ்சை பனாதி அடியாதே அந்தப்

பாவம் தொலைய முடியாதே

என்றார். ஏழை எளியவர்களிடம் வம்புக்கு போகக்கூடாது.

 

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

திருக்குறள் – அருள் உடைமை – குறள் எண் 250. 

ஏழை எளியவர் நம்மிடம் பகைத்துக் கொண்டால் நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் அவன் தாங்க மாட்டான். அவன் பிள்ளைக் குட்டிக்காரன்.அடப்பாவி! என் பிள்ளையை இப்படி அடித்துவிட்டாயே! நீ உருப்படுவாயா?” என்று சொல்வான். ஏழை எளியவர்களிடம் பகைத்துக் கொள்ளக் கூடாது.

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும், அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் நட்பைப் பெருக்க வேண்டும், மாதாமாதம் அன்னதானம் செய்ய வேண்டும். 

புண்ணியம் பெருகப் பெருக, பகைமை ஒழியும்.

புண்ணியம் பெருகப் பெருக அறிவு தெளிவடையும்.

புண்ணியம் பெருகப்பெருக உடல் ஆரோக்கியம் அடையும்.

புண்ணியம் பெருகப்பெருக நல்ல நட்பு பெருகும்.

ஆகவே, புண்ணியத்தைச் செய்வோம், பூஜை செய்வோம் என்று சொல்லி, நீங்கள் எங்களை வாழ்த்த வேண்டும். நீங்கள் எங்களை மனமார வாழ்த்த வேண்டும். குடிலாசானும், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்களும், ஆசானும் வாழ வேண்டுமென்று நீங்கள் வாழ்த்த வேண்டும். 

ஏன் நாங்கள் வாழ வேண்டும்? என்று கேட்டான். இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை நாங்கள் நல்லபடி செய்ய வேண்டும். உணவு சாப்பிட்டு ஐம்பத்தைந்து நாளாயிற்று. நாங்கள் மூலக்கனலை எழுப்புவதற்காகத்தான், சாப்பிடாமல் இருக்கிறோம். இப்படி இருப்பது மூலக்கனலை எழுப்புவதற்கேயன்றி சாவதற்கு என்று நினைக்கக் கூடாது. 

யாரோ ஒருவன் சாவதற்கு அப்படி இருக்கிறான், நாங்கள் அல்ல. மூலக்கனலை எழுப்புவதற்காகத்தான் நாங்கள் சாப்பிடாமல் இருக்கிறோம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். வெற்றி பெற வேண்டுமென்று நீங்கள் எங்களை மனமார வாழ்த்த வேண்டும். 

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தை 17.09.1976ல் ஆரம்பித்தோம். பல ஆண்டுகளாக இங்கே தொண்டு செய்திருக்கிறோம். ஒரு மாற்றம் கிடைத்தது. மிகப்பெரிய அறப்பணிகள் செய்கிறோம். அதுவும் தலைவனுடைய ஆசிதான். நீங்களெல்லாம் இன்று முதல் சுத்த ஆன்மீகவாதியாக மாற வேண்டும். சுத்த ஆன்மீகவாதி என்றால் குளிப்பதா? என்றால், குளித்து என்னத்திற்கு ஆகும்? 

அழுக்கறத்தி னங்குளித் தழுக்கறாத மாந்தரே

அழுக்கிருந்த தவ்விட மழுக்கிலாத தெவ்விடம்

அழுக்கிருந்த தவ்விடத் தழுக்கறுக்க வல்லிரேல்

அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே.

மகான் சிவவாக்கியர் – கவி எண் 215.

சுத்த ஆன்மீகம் என்பது ஞானிகளின் திருவடிகளைப் பூசித்தல், தினம் தியானம் செய்தல், மாதம் இருவருக்கு அன்னதானம் செய்தல், நமக்குக் கல்வி தந்து, நாமெல்லாம் இந்த அளவு உயர்வதற்குக் காரணமாக இருந்த தாய் தந்தையரிடம் அன்பு காட்டுதல், மனைவியை மதித்தல், அவளுக்குத் தீமை செய்யாதிருத்தல், அனைத்து கடமைகளையும் செவ்வனே செய்தல், விருந்தை உபசரித்தல் போன்றவையே சுத்த ஆன்மீகம். இவைகளே ஜென்மத்தைக் கடைத்தேற்ற துணையாக இருக்கும். 

ஞானிகளை வணங்குவோம். நாம் ஞானியாவோம்.

ஞானிகளை வணங்குவோம் செல்வம் பெறுவோம்.

ஞானிகளை வணங்குவோம் மன அமைதி பெறுவோம்.

ஞானிகளை வணங்குவோம் உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

ஞானிகளை வணங்குவோம் நட்பைப் பெருக்குவோம்.

ஞானிகளை வணங்குவோம் வெற்றி பெறுவோம்.

இது நேரம்வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நீங்கள் வாழ வேண்டும், உலகமெல்லாம் வாழ வேண்டுமென்று சொல்லி வணங்கி முடிக்கிறேன், வணக்கம். 

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம            ஓம் அகத்தீசாய நம

 

அதிமதுர வேலவன் அகிலமதை ஆண்டிட

கதிர்மதியை வெல்வர் களிப்புற்றே!

 

களிப்புற்று இவ்வுலகை கந்தவேலன் ஆண்டிட

செழிப்புற்று விளங்கும் செந்தமிழ் நாடே!

 

பந்தமற்ற வேலவன் பாருலகை ஆண்டிட

வந்திடும் நல்வாழ்வு வளமே.

 

நாட்டுப் பசுக்களோடு காளைகளையும் நன்னயமாய் காத்திடவே

வீடுபேறு இன்பம் உண்டாம் விரைந்தே.

ஆறுமுக அரங்கமகா தேசிகர். 

 

திருச்சி மாவட்டம், துறையூர்,

முருகப்பெருமானின் கல்கி அவதாரம்

தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள்

மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

 78. பாம்பொடு பழகேல்

(தூய மனம் இல்லாதவரோடு பழகாதே) 

மனிதர்களை இருவகையினராக அவர்களது குணத்தின் அடிப்படையில் ஞானிகள் வகுத்துள்ளனர்.

தமக்கு பிறர் செய்திட்ட நன்மைகளை மட்டுமே நினைவில் வைத்து, செய்த நன்மைகளை போற்றி அதற்கு செய்ந்நன்றிக் கடன் செய்தும், அவர்கள் பழகும் காலத்து செய்கின்ற தீமைகளையும், குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு, அவர் செய்த நன்மையை மட்டுமே சிந்தித்து நன்மை செய்தோர்க்கு தீங்கு ஒருபோதும் செய்யாத பண்புடையவர்கள் ஒருவகையினர். 

தமக்கு பிறர் நன்மைகள் செய்திட்டாலும், தீமைகள் செய்திட்டாலும் அவர்கள் செய்த நன்மைகளை மறந்து, அவர் செய்த தீமைகளை மட்டுமே சிந்தித்து வாழ்ந்து, பிறரது குற்றங்களைப் பற்றியே சிந்தித்து, சிறு குற்றம் செய்திட்டாலும், அதற்கு எதிர் செயல் செய்து, அவர்கள் செய்த நன்மைகளை மறந்து தீமை புரிகின்றவர்கள். இவர்கள் தமது செயல்கள் முடியும்வரை நம்மிடம் இனிமையுடன் பழகி, தக்க சந்தர்ப்பத்தில் வஞ்சகமாக செயல்பட்டு, பழிவாங்கி விடுவார்கள். இது ஒருவகையினர். இவர்கள் தன்னுள் விஷத்தை வைத்திருக்கும் பாம்பிற்கு ஒப்பானவர்கள்.

இப்படிப்பட்ட மனிதர்களின் குணங்களை குறித்து மகான் ஔவையார் தமது மூதுரையிலும் குறிப்பிடுகிறார்.

 

கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வரே – விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுபோல மாறுமே

சீரொழுகு சான்றோர் சினம்.

மூதுரை – கவி எண் 23. 

கல்லானது பிளவுபட்டால் மறுபடியும் ஒன்று சேராது. பிளவுபட்டால் பிளவுபட்டதுதான். அதுபோல வஞ்சநெஞ்சம் உடையோர் பிரிந்து போனால் மீண்டும் ஒன்று சேரமாட்டார். அவர் தீமையே புரிவார். தங்கமும் பிளவு பட்டாலும், அது உருகும்போது மீண்டும் ஒன்றாகிவிடும். இது நல்லோரின் தன்மை. சான்றோர்களுக்கு கோபம் வந்தாலும், அவர்கள் பிரிய நேரிட்டாலும் அந்த பிரிவானது அம்பினால் நீரில் உண்டாகிய பிளவு, உடனே மறைந்து ஒன்று சேர்வது போல உடனே சேர்ந்துவிடும். இதுவே நல்லோர் இயல்பு எனக் கூறுகிறார் மகான் ஒளவையார். 

ஒருவனுக்கு நல்ல நட்பு கிடைத்தால்தான் அவன் தனது வாழ்வை செம்மையாக நடத்த முடியும். அதைவிடுத்து விஷத்தை தம்முள் வைத்துள்ள பாம்பை போல குணமுடைய உங்களது நட்பு, நம்மை என்றேனும் ஒருநாள் கொடும் துன்பத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதினாலேயே தீய நட்பு ஆகாது எனக் குறிக்கவே பாம்பொடு பழகேல் எனக் கூறுகிறார். 

சரியாருடன் நட்பு வைத்துக் கொள்வது? தகுதியுள்ள நட்புடையவர்களிடம் நட்பு கொள்ள வேண்டும். எவர் தகுதி உடையவர்? எவர் பொருள் பற்றற்றும், பேதாபேதம் இன்றியும், வெல்வதற்கு அரிய மாயையை வென்றவராய் இருக்கின்றாரோ, அவரது நட்பே சிறந்த நட்பாகும். அவரே சான்றோர், மயக்கம் அற்ற மாமேருக்கள், அப்படிப்பட்ட தவசிகளின், சான்றோர்களின் நட்பு கிடைத்தால் அதுவே ஒருவன் வாழ்வில் பெறுகின்ற அற்புத வாய்ப்பாகும். 

சான்றோரின் நட்பு வாழ்விற்கு உதவுவது மட்டுமல்லாது, அது பழகுபவர்களின் பாவங்களை போக்கி, பண்பாளர்களாக ஆக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றவும் உதவிடக் கூடிய அற்புதமான நட்பாகும். 

சரி அப்படிப்பட்ட நட்பு யாருக்கு அமையும்? எவர் ஒருவர் ஆதி மூல தெய்வமான முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கே இப்படிப்பட்ட தகுதியுள்ள நட்பாகிய சான்றோர்களின் நட்பு கிடைக்கும். 

ஒருவன் ஞானத்தலைவன் முருகப்பெருமானையோ அல்லது முருகப்பெருமானை பின்பற்றி தொடர்ந்திட்ட, அகத்தியர் முதல் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர்களான நவகோடி சித்தரிஷி கணங்களில் எவரேனும் ஒருவரது திருவடியைப் பற்றி பூஜித்தாலே ஒருவனுக்கு நன்மை தீமை விளங்கி, நல்ல நட்பு எது? தீய நட்பு எது? என பிரித்தறியும் அறிவு உண்டாகி சான்றோர்களை இனம் கண்டு அவர்களது நட்பை பெறுவான்.

பாம்பினை ஒத்த கயவர்களோடு பழகக் கூடாது என்பதை குறிக்கவே பாம்பொடு பழகேல் எனக் கூறுகிறார் மகான் ஔவையார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

Lucky Wisdom Persons

  • Visits Today: 454
  • Total Visits: 269999
  • Total Visitors: 1
  • Total Countries: 171

Watch colorized old Tamil movie
Secrets of Lord Kartikeya semen retention முருகன் ரகசியம் விந்துவை பற்றி சித்தர்