ஜூன் 2013 – மகான் இராமதேவர் அருளிய முதல் நிலை யோகப்பயிற்சி – குருநாதர் அருளுரை- JUNE 2013

அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை விஜய ஆனி (ஜூன் – 2013) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு —
2. மகான் இராமதேவர் அருளிய முதல் நிலை யோகப்பயிற்சி – குருநாதர் அருளுரை
3. இலவம் பஞ்சில் துயில் (ஆத்திசூடி) – குருநாதர் அருளுரை தொடர்
4. வஞ்சகம் பேசேல் (ஆத்திசூடி) – குருநாதர் அருளுரை தொடர்
மகான் கமலமுனிவர் ஆசிநூல்:-
பொய்க்கா வான் மழை பொழிய
பிரணவக் குடிலில் மழை கருதி
மெய் ஞான வழிபாடு அன்னவிழா
மேலான அரங்கனும் நடத்தி
நடத்தியே வானவர்களை மகிழ்வித்து
நல்மழை வருசிக்க வகை செய்வார்
நடத்தும் இவை விழா தன்னில்
ஞாலமதில் கழனி சார்பு மக்கள்
மக்களோடு அவர்கள் குடியிலுள்ளோரும்
மண்ணுலகில் மக்கள் நலம் கருதி
ஆக்க வல்லவர்கள் அறிஞர்கள்
அன்பர்கள் அடியவர்களும் கலந்து
– மகான் கமலமுனிவர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் – இரா.மாதவன்.
திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் – 94434 21935
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி
நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047
                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும்போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும். சிறப்பறிவுபெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும். மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம்பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும்ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம், பத்மநாபன், சுபாஸ், ராமமூர்த்தி, ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சிஅன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.


ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும், அவர்கள்குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
14.11.2002 அன்று
மகான் இராமதேவர் அருளிய முதல்நிலை யோகப்பயிற்சிக்கு
அருளிய அருளுரை
அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே
வணக்கம். நமக்கு மகான்கள் கருணைகொண்டு வாசியோக நெறியைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இங்குள்ள அன்பர்களும், பெல் அன்பர்களும் யோக நெறியைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினார்கள். எதுவாக இருந்தாலும் இந்தத் துறை கடினமானத் துறை. ஆனால், அதே சமயத்தில் மிக மென்மையானத்துறை.
யோகப்பயிற்சி ஆசான் துணைக்கொண்டுதான் செய்ய வேண்டும். நாமாக பிராணாயாமம், வாசி பயிற்சி செய்தால் நோய்வாய்ப்பட வாய்ப்பிருக்கு. இதற்காக ஆசான் யாகோபு என்று அழைக்கப்படும் ஆசான் இராமதேவரிடம் வாசிப்பயிற்சி, யோகப்பயிற்சி அல்லது யோகநெறி, பிராணாயாமம் எப்படி செய்வது? இதற்கு வயது உண்டா? இல்லறத்தார்கள் செய்யலாமா? இளைஞர்கள் செய்யலாமா? எங்களுக்கு புரியவில்லை என்று ஆசானிடம் கேட்டோம்.
ஆசான் இராமதேவர் என்ற யாகோபு ஏக காலத்தில் எல்லோரும் பின்பற்றக்கூடிய முதல் நிலை வாசி பயிற்சியை தொகுத்து தந்துள்ளார்.
வாசிப்பயிற்சி எல்லோருக்கும் அவசியம். இதை “வாசிப்பழக்கம் அறிய வேண்டும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேண்டும்” என்பார் ஆசான். எனவே வாசிப்பயிற்சி இல்லையென்றால் இந்தத் துறையில் சித்தி பெற முடியாது.
பக்தி இல்லாமல் வாசிப்பயிற்சியில் சித்தி பெற முடியாது. இதை “பாரில் உயர்ந்தது பக்தி” என்பார். பக்தியோடு தான் வாசிப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்போது அன்பர்களிடம் நாம் தொடர்ந்து பக்தி நெறியை பேசி வருகிறோம். வெறும் பக்தி மட்டும் இருந்தால் போதுமா? புண்ணியமும் செய்ய வேண்டும்.
நம்முடைய தொண்டர்கள் நிறைய புண்ணியம் செய்கிறார்கள். எப்படி புண்ணியம் செய்கிறார்கள்? இங்கு நடைபெறுகின்ற அன்னதானத்தில் தொண்டு செய்வதே புண்ணியம் ஆகும். வேறெங்கும் சென்று அன்னதானம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்தாலும் குற்றமில்லை.
பக்தியும் புண்ணியமும் செய்துதான் யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும். யோகத்தை கடைப்பிடிப்பதற்கு ஞானிகள் ஆசி வேண்டும்.
யோகம் என்பது மூச்சுக்காற்று, மூச்சுக்காற்றின் இயக்கம். மூச்சுக்காற்று ஒரு நாழிகைக்கு 360 முறை வந்து போகும் அல்லது 360 சுவாசமாக இருக்கும். நாள் ஒன்றுக்கு 21,600 முறை மூச்சுக்காற்று வந்து போகும். நாம் தூங்கினாலும் வேலை செய்தாலும் இது இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கும்.
ஆக, மூச்சுக்காற்றின் இயக்கம் இயற்கை. அந்த இயக்கத்தை நிறுத்த முடியாது. வேகமாக ஓடும் போதும், வேலை செய்யும்போதும் மூச்சு வேகமாக வாங்கும். பிறகு ஒரு சமமான நிலைக்கு வரும்.
ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள எல்லா உயிர்களுக்கும் காற்று வேண்டும். ஐந்தறிவுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்று வந்து போகும். கால்நடையாக இருந்தாலும் சரி, பறவையாக இருந்தாலும் சரி, ஊர்வனவாக இருந்தாலும் சரி, நீர்வாழ் ஜந்தாக இருந்தாலும் சரி, இவைகளெல்லாம் உயிர்வாழ காற்று அவசியம்.
மூச்சுக்காற்று இயக்கம் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இருந்தாலும் மனிதனுக்கு மட்டும்தான் மூச்சுக்காற்றைப் பற்றி அறியவும், அதை ஸ்தம்பித்து, ரேசித்து, கும்பிக்கவும் முடியும்.
மனிதனுக்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு 21,600 முறை மூச்சுக்காற்று இயக்கம் அல்லது சுவாசம் வந்து போவதாக ஞானிகள் கணக்கு எடுத்திருக்கிறார்கள்.
எனவே, மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்மாவின் இயக்கமாக இருக்கும். ஆன்மாவின் இயக்கமே மனம். ஆக மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்மாவாகவும், மனமாகவும் இருக்கும். மூச்சுக்காற்றின் இயக்கத்தினால் உள்ளே கருவி கரணங்கள் அசையும். அதனால் 96 தத்துவங்களும் இயங்கும்.
இந்த அசைவு கூடினால் காய்ச்சல் இருக்கும். அசைவு கூடவும், குறையவும் கூடாது. அது சமத்துக்கு வர வேண்டும். சில சமயத்தில் நாடிகள் அதிகமாக துடிக்கும். பிறகு சமத்துக்கு வந்து விடும்.
இப்படி மூச்சுக்காற்றின் இயல்பை மனிதன் அறிந்து, அதோடு தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி தொடர்பு கொள்வதற்கு பயிற்சி வேண்டும்.
மூச்சுக்காற்றை இழுத்து ஸ்தம்பித்து பழக வேண்டும். அப்படி பழகினால் இரண்டு பக்கமும் சுவாசம் வந்து போகும். அப்படிப்பட்ட பயிற்சி இருந்தால்தான் இரண்டு பக்கமும் சுவாசம் வருகிறதா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கு மூச்சுக்காற்றோடு பழக வேண்டும். இதை முதல் நிலை பயிற்சி என்று சொல்கிறார்கள்.
மூக்கில் கை வைத்துப் பார்க்கும் போதே சுவாசம் சந்திரகலையில் இயங்குகின்றது அல்லது சூரியகலையில் இயங்குகிறது என்பதை அறியலாம். இது எங்களுக்குத் தெரியும். இந்தத் துறையில் வருகின்ற மக்களுக்கும் தெரியும்.
ஆசான் இராமதேவர் முதல் நிலை வாசிப்பயிற்சி சொல்லும்போது என்ன சொல்கிறார்? காலை பிரம்ம முகூர்த்தமாகிய 4.30 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இது அவசியம். தவறினால் காலை ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடனை முடிக்க வேண்டும். பின்பு அருட்பா , திருவாசகம், போற்றித்தொகுப்பு இவற்றில் எதை இலகுவாக படிக்க முடியுமோ அதை ஒரு பத்து நிமிடம் படிக்கலாம். இந்த பயிற்சிக்கு அடிப்படை சுத்த சைவ உணவாக இரவு நேரத்தில் ஓரளவு சாப்பிடலாம்.
அருட்பா அல்லது போற்றித் தொகுப்பு பத்து நிமிடம் படிக்க வேண்டும். பின்பு மகான் இராமதேவரை அழைக்க வேண்டும். ஆசான் இராமதேவரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும்.
மகான் இராமதேவரிடம் நீரே எனது மூச்சுக்காற்றோடும், ஊனோடும், உணர்ச்சியோடும், உயிரோடும், உணர்வோடும் சார்ந்து இருந்து அருள் செய்ய வேண்டுமென்று கேட்டு அவர் அருளை பெற வேண்டும். ஆசான் இராமதேவரே வாசிப்பயிற்சி அல்லது யோகாப்பியாசம் அல்லது பிராணாயாமம் துறைக்கு ஆசானாக இருக்கிறார்.
ஒரு ஜென்மத்தில் யாகோபாக இருந்து சித்தி பெற்று ஞானத்தை உலக மக்களுக்கு போதித்துள்ளார்கள். சிலர் இவருடைய உபதேசத்தை பெற்று ஞானத்தை அடைய முயற்சி செய்தனர். இப்படி முயற்சி செய்தவர்களில் சிலருக்கு ஞானம் கைவரப்பெறாததினால், இவர்கள் ஞானத்தை அடைவதற்காக மீண்டும் இராமதேவராக அவதாரம் எடுத்து உபதேசம் செய்தார்.
ஆசான் இராமதேவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அடியேனது அகமும், புறமுமாக இருந்து வாசியோடு வாசியாக கலந்து எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுதான் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
யோகப்பயிற்சி செய்கிறவர்கள் அதிகாலையில் குளிக்கக்கூடாது. பிராணாயாமம் அல்லது யோகாப்பியாசம் செய்து விட்டுதான் குளிக்க வேண்டும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் குளிக்க நேர்ந்தால் குளித்து அரைமணி நேரத்திற்கு பிறகுதான் யோகப்பயிற்சி செய்ய வேண்டும்.
யோகப்பயிற்சி பிள்ளைகள் தவழ்ந்து செல்வது போல் மெதுவாக செய்ய வேண்டும். விரைவாக அடைய வேண்டுமென்று ஆர்வம் கொள்ளக்கூடாது. விரைவாக அடைய வேண்டுமென்று நினைத்தால் நோய்வாய்ப்படுவார்கள்.
ஆசான் இராமதேவரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி அழைத்து
பக்தியும் நீயே
பக்திக்குரிய அறிவும் நீயே
பக்திக்குரிய முயற்சியும் நீயே
பக்திக்குரிய சித்தியும் நீயே
இராமதேவா யோகமும் நீயே யோகத்தின் தலைவனும் நீயே
யோகத்தின் முயற்சியும் நீயே
யோகத்திற்குரிய அறிவும் நீயே
யோகத்திற்குரிய பயிற்சியும் நீயே
யோகசித்தியும் நீயே ஞானமும் நீயே
ஞானத்திற்குரிய அறிவும் நீயே
ஞானமுயற்சியும் நீயே
ஞானசித்தியும் நீயே
மோனத்திற்குரிய அறிவும் நீயே
இராமதேவா எல்லாம் உன் திருவருள் கடாட்சம்
என்று எண்ணிதான் செய்கிறேன். நீரே என் அகமும் புறமும் இருந்து என்னை ஏற்று அடியேனுடைய வாசியோடு வாசியாக கலந்து அடியேன் மேற்கொள்ளும் முதல் நிலை வாசிப்பயிற்சிக்கு எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து காலைக்கடனை முடித்து விட்டு வடதிசையை நோக்கி அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும்.
வடதிசையில் காந்த சக்தி இருக்கு . காந்தம் தென் வடக்காக இருக்கும். பிராணாயாமமும் யோகாப்பியாசமும் வடதிசையை நோக்கி செய்யலாம். மனதை ஒருநிலைப்படுத்தும் வல்லமையும் மனதை அசைய விடாமல் ஒருநிலைப்படுத்தும் ஆற்றலும் வடதிசைக்கு உண்டு. வடதிசையை நோக்கி வினாத்தண்டு நிமிர்ந்திருக்குமாறு உட்கார வேண்டும், விரைப்பாக இருக்க வேண்டும், கழுத்தை தூக்கக் கூடாது, உடம்பு வளையவும் கூடாது. பிறகு மூக்குப்பக்கம் வாசியை உள்ளிழுக்க வேண்டும். இடது பக்கம் ஓடுகின்ற காற்றுக்கு சந்திர கலை என்றும், வலது பக்கம் ஓடுகின்ற காற்றுக்கு சூரிய கலை என்றும், இரண்டும் ஒடுங்குகிற இடம்தான் புருவமத்தி. யோகத்திற்கு தலைவன் ஆசான் இராமதேவராக இருந்தாலும், ஆசான் அகத்தீசர், ஆசான் திருமூலதேவர், மகான் காலாங்கிநாதர், மகான் போகர், மகான் கருவூர் முனிவர் போன்ற ஞானிகளையும் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும்.
இப்போதுதான் உங்களது திருவடியை தொடுகிறேன். என் மூச்சுக்காற்று இயக்கமாக தொடுகிறேன். இந்த மூச்சுக்காற்றின் இயக்கத்தினால் பல லட்சம் கோடி பிறவிகளாக பிறந்திருக்கிறேன். பல்வேறு ஜீவனாகவும் இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த மூச்சுக்காற்றை என்னால் கவனிக்க முடியவில்லை. இந்த ஜென்மத்தில் தான் மூச்சுக்காற்றை கவனிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மூச்சுக்காற்றுதான் முக்திக்கு காரணம். மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கிவிட்டால் அதுவே மரணமில்லா பெருவாழ்வை தருமென்ற சிந்தனை அறிவு எனக்கு இல்லை. அதற்குரிய கல்வி எனக்கில்லை. எத்தனையோ ஜென்மங்கள் எடுத்துள்ளேன். இதுவரை எனக்கு அந்த அறிவில்லை. இந்த ஜென்மத்தில் உன் திருவடி கடாட்சத்தால் நான் அறிந்து கொண்டேன்.
மூலத்தில் தோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.
– மகான் ஒளவையார் – வாயுதாரணை – குறள் எண் 1.
நாளொன்றுக்கு 21,600 முறை சுவாசம் வந்து போகும். இதுதான் சாகாக்கால், சாகாக்கல்வி. மூலாதாரத்தில் தோன்றும் காற்று மூலாதாரத்தில் தோன்றி வெளியே செல்லும். தோன்றுகின்ற காற்று வெளிக்காற்றை இழுக்கும். அப்படி வரும்போது பன்னிரு கலை வந்து நான்கு கலை மட்டும்தான் தங்கும். 14,400 சுவாசம் வீணாய் போகும். மூச்சுக்காற்று வலது பக்கம் வந்தாலும் சரி! இடது பக்கம் வந்தாலும் சரி! பன்னிரண்டு கலை அல்லது பன்னிரண்டு பவர் வந்து நான்கு பவர் தங்கிவிட்டு எட்டு பவர் போயிடும். ஆக எட்டுக்கலை வீணாக போயிடும். 14,400 சுவாசம் வீணாக போய்விடும்.
அந்த மூச்சுக்காற்று இயக்கம்தான் உள்கருவி கரணங்கள் இயக்கமாக இருக்கும். உள்கருவி கரண இயக்கம்தான் பசிக்கு காரணம்.
ஆக அந்த மூச்சுக்காற்றின் இயக்கமே பசிக்கு காரணமாயிருக்கும். பசிக்கு உணவு தந்தபின் மூச்சுக்காற்று இயக்கமே ஜீரண சக்திக்கு காரணமாயிருக்கும். ஜீரணம் செய்த உணவிலிருந்து சத்தை பிரித்து 72,000 நாடி நரம்புகளுக்கு முறுக்கேற்றி விடும். அந்த மூச்சுக்காற்றின் இயக்கமே மனம், புத்தி, சித்தம், அகங்காரமாக இருக்கும்.
இந்த மூச்சுக்காற்று இயக்கம்தான் நம்மை பல ஜென்மங்களாக ஆட்டி படைத்தது. மூச்சுக்காற்று நின்று விட்டால் இறந்து போவான்.
உடல் வளர்ச்சிக்கு காரணமாயிருக்கும் மூச்சுக்காற்றுதான் உயிர் வளர்ச்சிக்கும் காரணமாயிருக்கும்.
உயிரும், உடம்பும் இயங்குவதற்கு காரணமான இந்த மூச்சுக்காற்றுதான் ஞானத்திற்கும் காரணமென்று அறியக்கூடிய அறிவு நமக்கில்லை. அதற்கு நமக்கு நல்வினை இல்லை.
இந்த ஜென்மத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த மூச்சுக்காற்றை பற்றி அறிந்து கொண்டோம். அந்த மூச்சுக்காற்றோடு பழகினால் இடகலை, பின்கலை பற்றி அறியலாம்.
புண்ணியவான்கள் தான் ஞானிகளை உருகி தியானம் செய்கிறார்கள். நாயினும் கடையேனாகிய எனக்கு அருள் செய்ய வேண்டும் தாயே. எத்தனையோ பாவிகளெல்லாம் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள். நான் பாவிகளுக்கு எல்லாம் தலைவன். நாயினும் ஈயினும் இழிந்தவன், நான் மிக கேவலமானவன்.
நான் எப்படி கேவலமானேன்? பல ஜென்மங்களில் காமுகனாகவும், பொருள் வெறியனாகவும், ஜாதி வெறியனாகவும், மிகப்பெரிய பழி பாவ உணர்ச்சி உள்ளவனாக இருந்து பாவத்தை சம்பாதித்திருக்கிறேன். அந்த பாவம்தான் எனக்கு உன் திருவடியை பற்ற முடியாமல் போய்விட்டது.
உன் திருவடி என்பதே மூச்சுக்காற்றை தொடுவதாகும், மூச்சுக்காற்றே உன் திருவடி.
உங்கள் திருவடி கடாட்சத்தாலும் உங்கள் அருள் கருணையால் மூச்சுக்காற்றை அறிந்து கொண்டேன். நீங்கள் அத்தனை பேரும் ஞானிகள்.
ஞானிகளாகிய நீங்கள் மூச்சுக்காற்றை பற்றி அறிந்து அதோடு பழகி அதனுடைய இயக்கத்தை அறிந்து புருவமத்தி என்று சொல்லப்பட்ட சொர்க்க வாசல் அல்லது பத்தாம் வாசலில் மூச்சுக்காற்றை செலுத்தி விட்டீர்கள். அந்த காற்று அங்கேயே தங்கிவிட்டது. அப்படி தங்கியதால் உடம்பிலிருக்கின்ற கசடுகள் நீங்கி விட்டது.
உடம்பிலுள்ள கசடுகள் நீங்கியதால் உங்கள் தேகம் ஒளி உடம்பாக மாறிவிட்டது. நாங்களும் அதை அடைய விரும்புகிறோம். நீங்களெல்லாம் உலக மக்கள் எல்லோரும் முன்னேற வேண்டும், ஒளி உடம்பை பெற வேண்டுமென்று விரும்புகிறீர்கள். ஆனாலும் எங்களது வினைப்பயன் உங்களது திருவடியைப் பற்றியும், நீங்கள் அடைந்த அந்த வாசி அனுபவத்தை , ஆன்மா அனுபவத்தை, பிராணாயாம அனுபவத்தை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்கக்கூடிய அறிவில்லை. இது நாங்கள் செய்த பாவம். இப்போதுதான் உங்களது திருவடி கடாட்சத்தால் அறிந்து கொண்டோம்.
நீங்கள் உங்கள் ஆசான், குருநாதர் திருவடியை பூஜை செய்தும், ஆசானால் வாசி நடத்தப்பட்டு யாகோபு என்ற இராமதேவர் என்ற பெருமைக்குரிய பேறு பெற்றிருக்கிறீர்கள். நான் பிராணாயாமத்திற்கு அல்லது யோகத்திற்கு உங்களையே தலைவனாக, தந்தையாக, ஆசானாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நீரே எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் இராமதேவரை வீழ்ந்து வணங்கி கேட்க வேண்டும்.
ஆக மூச்சுக்காற்று லயம் அல்லது அனுபவத்தை அறியாமல் ஒன்றும் செய்ய முடியாது. புண்ணியவான்களுக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். புண்ணியம் செய்யாத மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. திருவருள் துணையால்தான் முடியும். இந்த துறையில் ஞானிகள் ஒருவனுக்கு வாசி நடத்தி தருகிறார்கள் அல்லது அருள் செய்கிறார்கள் என்றால், அவன் ஞானிகளுக்கும் இந்த துறையில் வருகின்ற மக்களுக்கும் தொண்டு செய்திருப்பான்.
ஞானிகளை தினந்தினம் வணங்கி முடிந்தளவுக்கு அன்னதானம் செய்தால் இந்த வாய்ப்பை பெறலாம். இந்த வாய்ப்பை பெற்றவர்கள் தான் மரணமில்லா பெருவாழ்வை பெற்றவர்கள்.
மூலத்தில் தோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.
– மகான் ஒளவையார் – வாயுதாரணை – குறள் எண் 1.
எட்டுக்கலை வீணாகப் போகும். இதனால் மீண்டும் மீண்டும் பிறக்கிறான். ஞானிகள் என்ன செய்கிறார்கள்? மூச்சுக்காற்றோடு மென்மையாகப் பழகுவார்கள். மலர் போன்று மென்மையாக பழகுவார்கள். கடினமாகப் பழகினால் நமக்கு நோய் வந்துவிடும். மலரினும் மெல்லிது காமம் என்பார்கள். இது யோக தத்துவம். காமத்தை யோக தத்துவமாக ஞானிகள் வைத்திருப்பார்கள். அதோடு மென்மையாக பழக வேண்டும்.
ஆக யோகத்தை மேற்கொள்பவர்கள் சைவத்தை மேற்கொள்ள வேண்டும். அறத்தை மேற்கொள்ள வேண்டும். தன்னுடைய மனைவியை புரிந்து, அவள் மனம் நோகாமல் நடந்து கொள்வது அறமே! புலால் உண்ணாது இருப்பது அறம். தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தருவதும் அறமே!
மனைவியினுடைய மனம் நோகாமல் நடப்பது அறம்.
நமக்கு கல்வி தந்து இந்த அளவிற்கு வாழ்வு தந்து நம்மை பெற்று வளர்த்த தாய் தந்தையரிடம் அன்பு காட்ட வேண்டுமென்று நினைப்பதும், செய்வதும் அறம்.
பொருள் ஈட்டும் போது நெறிக்குட்பட்டு சேர்க்க வேண்டுமென்று எண்ணுவதும், அறத்திற்குட்பட்டு பொருள் சேர்ப்பதும் அறம்.
பேசும்போதும், பிறர் மகிழும்படி பேசுவதும் அறம், இனிமையாக பேசுவதும் அறம். பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியானவற்றை செய்வது அறம். புலால் உண்ணாதிருப்பது அறம். பொய் சொல்லாதிருப்பது அறம். நெறிக்குட்பட்டு பொருள் ஈட்டுவது அறம்.
அப்படி ஈட்டிய பொருளை ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்று எண்ணுவதும் அறம்.
அறம் இல்லையென்றால் அங்கே பொருளில்லை. பொருள் என்பது உண்மை பொருள் இல்லை என்று பொருள்படும். செய்கையிலே நீதி இருக்க வேண்டும். பேச்சிலே பிறர் மனம் புண்படப் பேசினால், ஐயோ பாவி! என்னை இப்படி பேசிவிட்டான் என்று சொல்வான். பிறர் மனம் புண்படும்படி பேசினால் அது அறமல்லாத செயல்.
நல்லவர், ரொம்ப இனிமையாக பேசுகிறார். பெரிய மனசு . அவர் பேச்சே, யாரேனும் மனம் அல்லற்பட்டு வரும்போது, வருபவர்களின் மனம் மகிழும்படி பேசுவார். அதுவே அறம்.
செய்கையிலே நீதி இருக்க வேண்டும். சிந்தையிலே நீதி இருக்க வேண்டும். நீதி என்பதற்கு அறம் என்று பொருள்.
மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளுமென்பார். மனம் தூய மனதாக இருக்க வேண்டும். தூய மனதுக்கு அறம் என்று பொருள். மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும். மனம் தீயதை எண்ணும். நாக்கு தீைைமயை பேசும்.
உடம்பு காமவிகாரத்தில் இருக்கும். மனம் கெட்டால் வாக்கு கெடும். வாக்கு கெட்டால் உடல் கெடும். அப்ப காயம் என்பது உடம்பால் வருகின்ற கேடுகள். சிந்தனையால் வருகின்ற கேடுகள், பேச்சால் வருகின்ற கேடுகள் ஆகும்.
“மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும்.
மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா”
மனம் வாக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் சிந்தனையும் சொல்லும் செயலும் நேர்மையாக இருக்கும்.
அந்த தூய்மைதான் அறமாக விளைகிறது , அறமாக மிளிர்கிறது, தெளிவாக இருக்கிறது. ஆசானிடம் கேட்டு அறத்தைப் பற்றி நன்கு அறிய வேண்டும். இது முதல் படி. இதை ஆசான் வள்ளுவர் தனது திருக்குறளில் சொல்லியுள்ளார். முப்பத்தெட்டு அதிகாரங்கள் அறத்துப்பால், எழுபது அதிகாரங்கள் பொருள்பால், இருபத்தைந்து அதிகாரங்கள் காமத்துப்பால். இதிலேயே வீடுபேறு இருக்கிறது. அறம், பொருள், இன்பம் இதற்குள் வீடுபேறாகிய இரகசியம் இருக்கிறது.
அறத்தைப் பற்றி ஒருவன் அறியாமல் வெறும் வாசிப்பயிற்சியை மட்டும் மேற்கொண்டால் அது ஜீவனற்ற ஆன்மீகமாக போகும். அப்ப ஜீவனுள்ள ஆன்மீகம் ஒவ்வொரு செயலிலும் வஞ்சனையில்லாது இருக்க வேண்டும். ஒரு சொல்லாக இருந்தாலும் சரி! அது பிறரை பாதிக்கக் கூடாது. ஒரு செயலும் பிறரை பாதிக்கக் கூடாது. சொல்லும் செயலும் அறமாக இருந்தால் அந்த இடத்தில் அறம் இருக்கும். இல்லையென்றால் பாடுபட வேண்டும், குற்றமில்லை. எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆக குணக்கேடு இருந்தால் கடவுளாக முடியாதோ என்றெண்ண வேண்டாம், இருக்கலாம். குணக்கேட்டுடன் தான் ஆரம்பத்தில் ஞானிகள் இருந்திருக்கிறார்கள். திருவருள் துணை கொண்டு அந்த குணக்கேட்டை மாற்றியிருக்கிறார்கள்.
குணக்கேடு என்ற அழுக்கை திருவடி என்று சொல்லப்பட்ட தடாகத்தில் கழுவியெடுக்க வேண்டும். குணக்கேட்டை கழுவி எடுக்க வேண்டிய முறை என்ன என்றால், “இராமதேவா என் தாயே தயவுடைய தெய்வமே! இந்த பாவியின் மீது கருணை காட்டு” என்று கேட்க வேண்டும். எத்தனையோ பாவிகள் ஐயா! உன் ஆசி பெற்றிருக்கிறார்கள். நாயினும் கடையேனாகிய எனக்கும் உன் திருவருள் கடாட்சம் வேண்டும். என்பால் கருணைகொண்டு என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும் தாயே! என்று ஆசானை பணிந்து வேண்டினால், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், பொறாமை, பேராசை, சினம், வன் சொற்கள் என்று சொல்லப்பட்ட அழுக்கு கழுவப்படுகிறது.
வேறு கல்வியின் துணை கொண்டு இதை செய்ய முடியுமோ? கல்வியும் வேண்டும், இல்லையென்றால் தெரிய வேண்டும். இதெல்லாம் அழுக்காறு என்று தெரிய வேண்டும். அழுக்காறு என்றால் பொறமை. அவா என்றால் பேராசை. இதெல்லாம் புரிந்து கொள்வதற்கு கல்வி வேண்டும்.
பக்தி, உருகி தியானித்தல் மூலம் குணக்கேடுகளை கழுவி எடுத்தால் அங்கே அறம் தங்கி விடும். சினம் மிகுதியாக வருகிறது. பாவத்தின் சின்னம். ஐயனே இராமதேவா! நான் சினம் இல்லாது இருக்க நினைக்கிறேன். என்ன பாவம் செய்தேனோ? தாயே!
மற்ற ஜீவராசிகளுக்கு இடையூறு வந்தால் சினம் கொள்ளும். பாம்பை மிதித்தால் தீண்டினால் சினம் வரும். மாட்டை அடித்தால் கோபம் வரும். ஆனால் இந்த பாவிக்கு ஒருவன் கடுமையாக பார்த்தாலே எனக்கு கோபம் வரும். இனம் புரியாத ஒரு குணக்கேடு. பிறவிக்கு காரணமானது சினம்.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
– திருக்குறள் – வெகுளாமை – குறள் எண் 306.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
– திருக்குறள் – வெகுளாமை – குறள் எண் 305.
சினம் என்ற பாவி, பல ஜென்மங்களாக மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க காரணமாக இருக்கிறது. பிறவிக்கு காரணம் சினம். அந்த கொடிய பாவிதான் என்னை வஞ்சிக்கிறது. காமவிகாரம், பேராசை என்னை வஞ்சிக்கிறது. அதுவும் பிறவி எடுக்க காரணமாய் இருக்கிறது. எனவே அந்த பாவியும் என்னை விட்டு ஒழிய வேண்டும்.
நீரோ எதைக்கண்டும் பொறாமைப்பட மாட்டீர். என்னுடைய புல்லறிவோ அல்லது நான் செய்த பாவம் என்னை ஆட்டிப்படைக்கிறது. பொறாமை, பேராசை, சினம், வன்சொற்கள் ஆகிய இந்த நான்கு குணக்கேடுகளும் மனித வர்க்கம் தோன்றும் போதே இருக்கிறது. இது இடையில் வந்ததல்ல. இடையில் வந்தால் இடையில் தான் போக வேண்டும். இந்த நான்கு குணங்களும் மனித வர்க்கத்தை ஆட்டிப் படைக்கின்றன.
மனிதனை மீண்டும் மீண்டும் நரகத்தில் தள்ளுவதும் இந்த நான்கு குணக்கேடுகள் தான். இது மனிதவர்க்கம் தோன்றும்போதே இருக்கிறது. மற்றைய ஜீவராசிகளுக்கு இந்த குணக்கேடுகள் இல்லை. அழுக்காறு, அவா, வெகுளி, மற்ற ஜீவராசிகளுக்கு இருக்க முடியாது. அவைகளெல்லாம் ஐந்தறிவுள்ள ஜீவராசிகள்.
ஆறறிவுள்ள மனித இனத்திற்கு, பொறாமை இருக்கும், பேராசை இருக்கும், சினம் இருக்கும், வன்சொற்கள் இருக்கும். இந்த குணக்கேடுகளை நீக்குவதற்கு எனக்கு வல்லமையில்லை. சினம் என்ற பாவி எனக்கு தொடர்ந்து பிறவியை உண்டாக்குகிறான். பேராசை என்று சொல்லப்பட்ட பாவி எனக்கு பிறவியை உண்டாக்குகிறான். பொறாமை என்று சொல்லப்பட்ட பாவியும் எனக்கு மீண்டும் பிறவியை உண்டாக்குகிறான்.
பிறர் மனம் புண்பட பேசி அப்படி பேசுவதால் பிறர் மனம் அல்லல்படுவதாலும் எனக்கு பிறவி வருகிறது. இந்த நான்கும் நான் மீண்டும் பிறப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் ஞானிகளாகிய நீங்கள் இத்தனை குணக்கேட்டோடு இருந்திருக்கிறீர்கள்.
”ஐயனே நீர் மட்டும் எப்படி ஐயா இந்த குணக்கேடுகளை நீக்கும் வாய்ப்பை பெற்றீர்” என்று ஆசான் இராமதேவரிடம் கேட்டபோது,
“எனது ஆசான் திருவருள் கடாட்சத்தால் குணக்கேடுகளை வெல்லும் வாய்ப்பை பெற்றேன். பொல்லாத பொருள் வெறி நீங்கியது, பொல்லாத காமவிகாரத்தை வென்றேன், பொறாமை அற்றது, பிறர் மனம் புண்படப் பேச வேண்டிய அவசியமில்லை, இவையெல்லாம் எனது ஆசான் திருவருள் கடாட்சத்தால் கிடைத்தது” என்றார் ஆசான் இராமதேவர்.
இந்த நான்கு குணக்கேடுகளும் அழுக்கு. இந்த குணக்கேடுகள் மனித வர்க்கம் தோன்றும் போதே இருந்திருக்கிறது. இது இயற்கையான ஒன்று. இது செயற்கையல்ல. செயற்கையாக இருந்தால் அது மனித வர்க்கத்தை விட்டு போயிருக்க வேண்டும். எனவே இந்த குணக்கேடுகள் இயற்கை.
இந்த உலகத்தில் பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும் மனித வர்க்கம் தோன்றினால் இந்த குணக்கேடு இருக்கத்தான் செய்யும். இந்த குணக்கேடுகள் நீங்கினால் அவன் கடவுள் தன்மை அடைகிறான். அப்படி நீங்காவிட்டால் நரகத்திற்கு போகிறான். நீக்குவதற்கு என்ன உபாயம்? பக்தி என்ற சுத்த ஜலத்தால் கழுவினாலன்றி இந்த குணக்கேடுகள் நீங்காது. இந்த குணக்கேடுகளை வெல்வதற்கு என்ன உபாயம்?
இந்த குணக்கேடுகளெல்லாம் இயற்கைதான். அதை யாரும் மறுக்க முடியாது. இந்த இயற்கையான குணக்கேடுகளை, இயற்கையின் துணையோடு இயற்கையை வென்ற ஞானிகளுடைய தயவால் ஆசியால் குணக்கேடுகளை நீக்கிவிட முடியும்.
என்று ஒருவன் குணக்கேடுகளைப் பற்றி அறிந்து நீக்கிக் கொண்டானோ அன்றே அவன் அறத்தை பின்பற்றுகிறான் என்று பொருள். அறமென்பது தருமம். இது முதல் படிக்கட்டு.
குணக்கேடு அற்றிருப்பது அறம். கோபம் என்ற குணக்கேடு முழுவதுமாக நீங்கியிருப்பது ஞானம். இந்த குணக்கேடுகள் மனிதன் இறந்த பின் ஏன் இல்லை ? மனிதன் இறந்தவுடன் குணக்கேடும் இறந்துவிட்டது. அப்படி இறந்தபின் ஏன் இல்லை? இறந்த பின் குணக்கேடு இறந்துவிட்டது. மூச்சுக்காற்று இயக்கத்தால்தான் இந்த உடம்பில் குணக்கேடு இருக்கிறது. மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்ம இயக்கம். ஆன்மா இயங்குகிறது. ஆன்ம இயக்கமே மனம். அந்த இயக்கத்தின் காரணமாக குணக்கேடு இருக்கிறது. மூச்சு நின்று விட்டது. குணக்கேடும் இறந்து விட்டது. ஆனால் பொல்லாத பாவத்தை சேகரித்து ஆன்மாவுக்கு கொடுத்தது. ஆன்மா தனியாக போகவில்லை.
புண்ணியம் செய்தால் ஆன்மா புண்ணிய பலத்தை கொண்டு செல்லும். அந்த குணக்கேடு ஆன்மாவை மாசுபடுத்துகிறது. அதனால் ஆன்மா பாவத்தை சுமக்கிறது.
ஒருவன் இறந்தால் மூச்சுக்காற்று போவது மட்டுமல்ல, இந்த உடம்பு தாங்கி இதுவரை செய்த பாவபுண்ணியங்கள் ஆன்மாவோடு செல்கிறது.
அப்படி சென்ற ஆன்மா என்ன செய்யும்? எந்த அளவுக்கு ஆன்மா பாவ புண்ணியங்கள் செய்திருக்கிறதோ, அதற்குரிய பிறவி எடுக்கும்.
எனவே அறமென்று சொல்லப்பட்ட ஒன்றை கடைப்பிடித்தால் ஆன்மா ஆக்கம் பெறுகிறது.
ஆன்மா ஆக்கம் பெறுவதற்கு புண்ணியமும் அருள் பலமும் வேண்டும். பூஜை செய்கிறான், புண்ணியம் செய்கிறான், முன் செய்த வினையின் காரணமாக பல்வேறு சோதனைகள் இருந்தாலும் புண்ணியத்தாலும், பூஜையாலும் முன் செய்த அந்த வினைகளை உடைத்தெறிந்து ஆன்மா ஆக்கம் பெறுகிறது. ஆன்மா ஆக்கமே அருள் ஆக்கம். ஆன்மா ஆக்கமே அறத்தின் ஆக்கம். ஆன்மா ஆக்கம் பெற்றால் தெளிவடையும். ஆன்மா விளக்கம் பெறும். ஆன்மா ஆக்கமே ஆன்மலாபம். ஆன்ம லாபம் என்பதே அறத்தின் லாபம். அருள் லாபம்.
பல ஜென்மங்களில் பல தேகம் தாங்கி செய்த பாவங்களை இந்த உடம்பு தாங்கி அந்த பாவசுமையை இறக்கிவிட வேண்டும். அந்த பாவச்சுமையை நீக்கிவிட்டால் பாவத்தை நீக்கினால் ஆன்மா தெளிவடையும். முதல் பாவத்தின் காரணமாக இருளடைந்தது ஆன்மா. அந்த இருள் காரணமாக அறிவு மங்கியிருந்தது. அறிவு மங்கியதன் காரணமாக நல்வினை தீவினை தெரியாமல் போய்விட்டது. நல்வினை தீவினை தெரியாத காரணத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தான்.
மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணம் என்ன?
குணக்கேடா? உடம்பா? உயிரா? உலகமா? மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணம் அறியாமையே. இதை,
பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
– திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் 358.
பேதைமை என்பது அறியாமை. அறியாமை வினை காரணமாக வந்ததா? அல்லது உடம்புக்கே உள்ள இயல்பா? மனிதவர்க்கம் தோன்றும் போதே, அறிவும் அறியாமையும் சேர்த்தே வைத்திருக்கிறான். ஒளியையும் இருளையும் சேர்த்தே படைத்திருக்கிறான்.
எல்லாம் வல்ல இயற்கையே மனிதவர்க்கத்தை தோற்றுவிக்கும் போது ஒளியும் இருளும் படைத்திருக்கிறது. இருள் என்பது குணக்கேடு. ஒளி என்பது நற்குணங்கள். இருள் என்பது அறியாமை. ஒளி என்பது சிறப்பறிவு. இரண்டையும் சேர்த்துதான் படைத்திருக்கிறான் கடவுள். ஏன் அப்படி படைத்திருக்கிறான்? இந்த உடலமைப்பே அப்படித்தான் இருக்கிறது.
காமதேகம் நீங்கிவிட்டால் அறியாமை நீங்கி விட்டது. காமதேகம் இருக்கும் வரையில் அறியாமை இருக்கும். காமதேகம் நீங்கிவிட்டது, தெளிந்த அறிவு வந்தது, காமதேகம் நீங்கிவிட்டது குணக்கேடு நீங்கிவிட்டது. காமதேகம் அகன்று விட்டது, நல்ல பண்பு வந்தது. காமதேகம் நீங்கியது தெளிவான அறிவு வந்தது. காமம் என்பது அறியாமை அல்லது பேராசை
காமதேகம் என்பது மும்மலத்தால் ஆனது. மும்மலத்தால் ஆன தேகம் நீங்கினாலன்றி ஒருவன் தெளிவடைய முடியாது. இயற்கை மனிதவர்க்கத்தை தோற்றுவிக்கும்போதே மும்மலம் என்று சொல்லப்பட்ட ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் இவற்றோடுதான் தோற்றுவிக்கிறது. ஆக மனிதவர்க்கத்தை இருளும் ஒளியுமான, அசுத்தமும் சுத்தமுமான குற்றத்துடன்தான் இயற்கை தோற்றுவிக்கிறது.
இயற்கை தோற்றுவிக்கும் போதே சுத்தத்தையும், அசுத்தத்தையும் சேர்த்துதான் தோற்றுவிக்கிறது.
எல்லாம் வல்ல இயற்கை ஏன் அசுத்தத்தை தோற்றுவிக்க வேண்டும்? சுத்தம் வெளிப்பட வேண்டும். ஏன் இருளையும் ஒளியையும் சேர்த்து தோற்றுவித்தது இயற்கை?
இருள் நீங்காமல் ஒளி தோன்றாது. இருள் நீங்கினால் உள்ளொளி தோன்றும். உள்ளொளி தோன்றுவதற்காக இப்படி இரண்டு இரண்டுமாக சேர்த்து வைத்திருக்கிறான் கடவுள்.
இயற்கை தோற்றுவிக்கும்போதே காமம் என்ற அசுத்தத்தோடு சுத்தத்தையும் சேர்த்துதான் தோற்றுவிக்கிறது. ஏன் அசுத்தத்தை நீக்க வேண்டும்? அசுத்தத்தின் துணையில்லையென்றால் சுத்தம் வெளிப்படாது என்றுதான் இயற்கை அன்னை அப்படி தோற்றுவித்திருக்கிறாள். இயற்கை அன்னை அப்படி தோற்றுவித்ததின் நோக்கம், நெல்லுக்குள் உமி இருப்பதுபோல அசுத்தத்தையும் சுத்தத்தையும் சேர்த்துதான் தோற்றுவித்திருக்கிறாள்.
ஞானிகள் என்ன செய்கிறார்கள்? நல்ல சிந்தையாலும் நற்குணத்தாலும் நல்ல குணப்பண்போடு இடைவிடாது முயற்சித்து அந்த குணக்கேட்டை தருகின்ற நச்சுத்தன்மையை அசுத்தத்தை நீக்கி விடுகிறார்கள். அப்படி நீக்கிவிட்டால் பல கோடி யுகங்கள் வாழும் வாய்ப்பை பெறுகிறார்கள்.
நாம் சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த உடம்பை எடுத்திருக்கிறோம். இதை நாமாக எடுக்கவில்லை. இப்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். இப்படி தோற்றுவிக்கப்பட்ட இயற்கையை புரிந்து செயல்படும் வல்லமை நமக்கு இல்லை. ஏன் நமக்கு இல்லை? ஏன் ஞானிகளுக்கு இருந்தது? ஞானிகள் எல்லோரும் அவரவர்கள் தங்கள் ஆசானை வணங்கி அந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
இப்போதுதான் ஆசானை கேட்கிறோம். நான் சுத்தமும் அசுத்தமும் சேர்ந்த இந்த உடம்பை எடுத்திருக்கிறேன். அதனால்தான் பொறாமை, பேராசை, கோபம், வன்சொற்கள் ஆகிய கொடுமைகள் என்னை பற்றிக் கொடுமை செய்கிறது. இந்த குணக்கேடுகள்தான் நான் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாகிறது.
உன் திருவருள் கடாட்சத்தால் குணக்கேடு நீர்த்துவிட்டால் நான் நீர்த்துப்போவேன். குணக்கேடு அற்றுவிட்டது.
இப்பொழுது உன் திருவடியை வணங்கி கேட்கிறேன். அடியேன் வாசியோடு வாசியாக கலக்க வேண்டும். இப்பொழுது மாசுபட்டிருக்கின்ற நான் மாசற்ற உன் திருவடியைப் பற்றுகிறேன். சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த நான் அசுத்தமும் சுத்தமும் கலந்திருக்கின்ற நான் உன் திருவடியைப் பற்றி உன் திருவருள் கடாட்சத்தால் அசுத்தத்தை நீக்க முயற்சிக்கிறேன். அசுத்தம் என்ற களிம்பை நீக்க வேண்டுமென்றால் ஞானிகளாகிய நீங்கள் அறிந்த மூச்சுக்காற்று இயக்கத்தை நான் அறிந்திட வேண்டும். நீங்கள் அறிந்த மூச்சுக்காற்று இயக்கத்தை நான் அறிந்து அதோடு நான் பழகி உங்கள் ஆசியையும் பெற்று அசுத்த தேகத்தை நீர்த்தால் அன்றி, அப்படி நீர்த்தால்தான் மீண்டும் பிறக்க மாட்டேன். நீர்த்துப் போகாவிட்டால் மீண்டும் இதுவே பிறவிக்கு காரணமாகும்.
உங்கள் திருவடியை வணங்கி கேட்கிறேன். நீங்களே எனக்கு மனமுவந்து அருள் செய்யுங்கள். எனக்கு மட்டுமல்ல அன்பர்கள் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாசி விதி ஒன்றை வகுத்து தந்திருக்கிறீர்கள். உங்கள் திருவடியை நன்றியோடு வணங்குகிறேன் என்று கேட்க வேண்டும்.
வாசியை தொடுங்கள், கட்டாதீர்கள். அப்படி வாசியை தொடும் போதே என்னை நினைக்கிறீர்கள். இராமதேவா யாகோபு ஐயா இன்னும் பல மகான்கள் அத்தனை பேருமே இந்த சுத்தம் அசுத்தமாகிய இருளும் ஒளியுமாகிய அல்லது பாவமும் புண்ணியமுமாகிய இரண்டும் சேர்ந்தே அமைக்கப்பட்ட இந்த உடம்பை அவர்களுடைய ஆசான் துணை கொண்டு அதை நீக்கியிருக்கிறார்கள்.
இப்பொழுது நான் வாசியை தொடுகிறேன். நீங்கள் என்னை சார்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் உங்கள் திருவடியை பூஜை செய்து சுத்தம் அசுத்தம் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் அழிவதற்கும் காரணமாக இந்த ஆன்மா அல்லது மூச்சுக்காற்று இருக்கிறதென்பதை நான் அறிய முடியும். நீங்கள் அறிந்து கொண்டிருக்கிறீர்கள்.
இப்போதுதான் மூச்சுக்காற்றை நான் தொடுகிறேன். என்று நான் மூச்சுக்காற்றை தொடுகிறேனோ, அன்றே உங்கள் திருவடியை தொட்டுவிட்டேன். உங்கள் திருவடியை நான் தொட்டுவிட்டேன். நீங்களோ அசுத்த தேகமாகிய அசுத்தத்தை அல்லது களிம்பை நீக்கி விட்டீர்கள். எப்படி நீக்கினீர்கள்? இந்த மூச்சுக்காற்றோடு பழகி மூச்சுக்காற்றை இரேசித்து, பூரித்து, கும்பித்து புருவ மத்தியில் செலுத்தி விட்டீர்கள். புருவமத்தி என்று சொல்லப்பட்ட பத்தாம் வாசலாகிய சொர்க்க வாசலில் மூச்சுக்காற்றை செலுத்தி விட்டீர்கள். அப்படி செலுத்தியதால் சுத்தமும் அசுத்தமுமான இந்த உடம்பிலுள்ள அசுத்தத்தை நீக்கி விட்டீர்கள். அதனால் இன்று தன்னிகரில்லாத பெருவாழ்வை அடைந்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட வாழ்வை நான் அடைய விரும்புகிறேன்.
நான் வாசியை தொடும்போதே உங்கள் திருவடியை தொடுவதாக நினைக்கிறேன். உங்கள் திருவடியை தவிர வேறு எனக்கு கதியில்லை. நீங்களே என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும். அடிமையை ஏற்று அருள் செய்ய வேண்டும். நான் ஒரு அடிமை. கொத்தடிமையாக இருந்து நான் உங்கள் ஆசி பெற வேண்டும். எனக்கு எந்த சொந்தமும் இருக்கக் கூடாது. எல்லாம் உன் திருவருள் கடாட்சம் என்று எண்ணுகின்ற பக்குவத்தை தர வேண்டும். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு சித்தர்கள் போற்றித் தொகுப்பை அருட்பெருஞ்ஜோதி அகவலையும் படித்து ஆசான் இராமதேவரை வாசியோடு வாசியாக கலக்க வேண்டுமென்று சொல்லி, சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி ஐயனே! என்னையும் ஏற்று அருள் செய்ய வேண்டும். தாயே! உன் திருவருள் கடாட்சத்தால் நான் முன்னேற வேண்டும். மீண்டும் மீண்டும் நான் அறியாமை காரணமாக பிறக்கின்றேன். காமத்தாலும் கோபத்தாலும் வஞ்சனையாலும் மற்றும் பல்வேறு குணக்கேடுகளாலும் மீண்டும் பிறவி வந்து என்னை வாட்டி வதைக்கின்றது. நான் பிறவிக்கு அஞ்சவில்லை. கொடிய புற்று நோய்க்கு ஆட்படுகின்றேன். பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு நான் நரகத்திற்கு செல்கிறேன். நான் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும். சொர்க்க வாசல் என்பது என்ன? புருவமத்தியாகிய சுழிமுனை என்று சொல்லப்பட்ட பத்தாம் வாசல் தான் சொர்க்கவாசல்.
என்று ஒருவனுக்கு சுழிமுனை வாசல் திறக்கிறதோ அன்றே பத்தாம் வாசல் அல்லது சொர்க்க வாசல் திறந்தது என்று பொருள்படும். புருவமத்தி என்ற சுழிமுனைக்குள் மூச்சுக்காற்று உள்ளே சென்றுவிட்டால் சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த உடம்பு நீர்த்து போகும். தீய்ந்து போகக் கூடாது. உடம்பு நீர்த்து போக வேண்டும். அந்த வாய்ப்பை நீரே எனக்கு தர வேண்டுமென்றே உன் திருவடி தாமரையை உன் திருவடியை மானசீகமாக நினைத்து வணங்குகிறேன். அதிகாலை ஐந்து மணிக்கு நான் காலைக்கடன்களை முடித்து விட்டேன். நான் உன்னை மானசீகமாக மனதில் நிறுத்தி வைக்கிறேன்.
நான் கொடிய பாவிதான் என்பதை நானும் அறிவேன், நீயும் அறிவீர். நாயினும் கடையேனாகிய இந்த பாவி, உன்னை மானசீகமாக இப்போது உன் திருவடியை தொடுகிறேன். நீர் இங்கே இருந்து நான் திருவடியை தொடும்போது எனக்கு நீர் அருள் செய்ய வேண்டும். எனக்கு கருணை காட்ட வேண்டும். ஏனென்றால் நீங்களெல்லாம் அறக்கடலாக இருக்கிறீர்கள்.
உங்களிடம் குணக்கேடு இல்லை. பந்த பாசத்தில் அகப்படமாட்டீர்கள். பந்த பாசமற்று பேராற்றல் பெற்று அறக்கடலாக இருக்கிறீர்கள். இப்பேர்ப்பட்ட உங்கள் திருவடிகளை மானசீகமாக தொடுகிறேன். தொடுகின்ற இடம் உங்கள் பாதமாக எண்ணி உங்கள் திருவடி தாமரையாகிய மலரடியை தொடுகிறேன். அப்படி தொடும்போதே உங்கள் வர்க்கமே எனக்குத் தெரியும். உங்கள் வர்க்கமே அறக்கடலாக இருக்கிறீர்கள். உங்கள் வர்க்கத்தை யாரென்று நான் புரிந்து கொண்டேன். யாரெல்லாம் உங்களை அழைக்கின்றார்களோ, அவர்கள் எத்தனை பாவம் செய்திருந்த போதிலும் ஐயனே நான் பாவிதான் ஐயா. எனக்கும் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால், அருள் செய்யக்கூடிய வல்லமையுள்ள கருணையே வடிவானவர்கள். நீங்களெல்லாம் அறக்கடலாக இருக்கிறீர்கள். இதை அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் என்பார். நீங்களெல்லாம் அரூபமாக ஜோதியாக இருக்கிறீர்கள். இந்த உலகத்தில் எந்த மூலையிலிருந்து இராமதேவா இராமலிங்க சுவாமிகளே மாணிக்கவாசக சுவாமிகளே தாயுமான சுவாமிகளே திருஞானசம்பந்தர் ஐயா என்று அழைத்தால் நீங்கள் வருவீர்கள்.
இப்பொழுது நான் இராமதேவா என்று அழைக்கும் முன்னே ஒன்பது கோடி ஞானிகளும் யாரடா அவன் ஆசான் இராமதேவரை அழைப்பது யார்? என்று கேட்கக்கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. நீங்கள் எல்லோரும் அத்தகைய வல்லமை பெற்ற ஆசான். மானசீகமாக உங்கள் திருவடியை தொடுகிறேன். ஏன் தொடுகிறேன் என்றால், வாசியை தொடப்போகிறேன். பல லட்சம் கோடி பிறவிகள் எடுத்தும் இதுவரை வாசியை கவனிக்கவில்லை. எனக்கு அதைப்பற்றி தெரியவும் இல்லை. இன்று அந்த ஆன்மாதான் மூச்சுக்காற்று இயக்கம் மூச்சுக்காற்று இயக்கம்தான் ஆன்மா என்று அறிந்து கொண்டேன். இப்படி அறிந்து கொண்டு அதை தொடுகிறேன். உன் திருவடியை நான் தொடுகிறேன். உன் திருவடியை தொடுகிறேன். நான் முதல் நிலை வாசியை தொடுகிறேன்.
இன்று முதல் என்னை கொத்தடிமையாக ஏற்று பல ஜென்மங்களில் நான் செய்த பாவத்தைப் போக்கி உன் நிலையை அடைய விரும்புகிறேன். நீர் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும். வணங்கி திருமூலர், யாகோபு, இராமலிங்க சுவாமிகள் இவர்களையெல்லாம் அழைக்க வேண்டும். இவர்களெல்லாம் ஒன்றுதான். இவர்களெல்லாம் வேறு வேறென்று நினைக்கக் கூடாது. ஒன்றென நினைத்தால்தான் முன்னேற முடியும். இராமலிங்க சுவாமிகள் சின்னவர், பெரியவர் என்று நினைக்கக் கூடாது. ஞானிகள் அத்தனை பேரும் சுத்தம் அசுத்தம், இருள் ஒளி, பாவ புண்ணியத்தோடு தோன்றியவர்கள் தான். அவர்கள் திருவருள் துணை கொண்டே முயற்சித்தார்கள், ஆசி பெற்றார்கள். ஆசி பெற்று பொருளைப் பெற்றார்கள். புண்ணியம் செய்தார்கள். பூஜை செய்தார்கள். அத்தனை பேர்களும் தோன்றும் போதே அசுத்தமாக தோன்றி சுத்தமாக ஆகிவிட்டார்கள். நாம் அசுத்தத்தில் தோன்றி அசுத்தத்தில் வாழ்ந்து அல்லது நரகத்தில் தோன்றி நரகத்தில் வாழ்ந்து நரகத்தில் வீழ்ந்து போகிறோம்.
நரகம் என்பது என்ன? அசுத்த தேகம், மும்மல தேகம். அசுத்தம் என்பது அறியாமையாகவும் இருளாகவும் இருக்கும்.
ஞானிகள் என்ன செய்கிறார்கள்? அசுத்தத்தை நீக்கி சுத்தத்தில் தங்கிவிட்டார்கள். அந்த சுத்தத்திற்கு என்ன பெயர். அறம் என்று பொருள். அருள் என்று பெயர். ஒளி என்று பெயர்.
ஆகவே உங்கள் வர்க்கம் அத்தனை பேரையும் நான் ஒரு நொடியில் அழைக்கின்றேன். எப்படி அழைக்கின்றேன் ? இராமதேவா என்று சொல்லி வாய் மூடுவதற்கு முன்னே திருமூலதேவரும் புஜண்ட மகரிஷியும், போகமகரிஷியும், காலாங்கிநாதரும் வந்து நிற்பார்கள் என்பதை நான் அறிந்தேன்.
இப்போது உங்கள் திருவடியை நான் தொடுகிறேன். உங்கள் திருவடியை மட்டுமா நான் தொடுகிறேன். இராமதேவா என்று உங்கள் திருவடியை தொடும்போதே, ஒன்பது கோடி ஞானிகள் திருவடியை நான் தொட்டுவிட்டேன். ஒன்பது கோடி ஞானிகள் திருவடியை தொட்டதால் தான் நான் வாசியை தொடுகிறேன்.
எத்தனையோ ஜென்மங்களாக தொட முடியாத ஒன்றை எத்தனையோ ஜென்மங்களாக என்னை ஆட்டிப் படைத்த மூச்சுக்காற்றின் இயக்கத்தை அதைப் பற்றி சிந்திக்க முடியாமலேயே என்னோடு இருந்து பல ஜென்மங்கள் எடுத்து பாவத்தையும் புண்ணியத்தையும் பாவத்தையும் செய்து செய்து அலுத்து மீண்டும் மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து அலுத்து விட்டேன்.
பிறவிக்கு நான் அஞ்சவில்லை. நோய் சூழ்ந்து அல்லற்பட்டு செத்திருக்கிறேன். இன்றுதான் அறத்தை அறிந்து கொண்டேன். திருவடியே அறம் என்று அறிந்து கொண்டேன். ஆன்மாவை அறிவதே அறம். மூச்சுக்காற்றின் இயக்கத்தை அறிவதே அறம். இதை நான் அறிந்து கொண்டேன்.
இன்று உன் திருவடியை தொடுகிறேன். மூச்சுக்காற்றை தொடுகிறேன். இந்த மூச்சுக்காற்றுதான் என்னுடைய பிறவிக்கு காரணமாக இருந்தது. உன் திருவருள் துணை கொண்டே அந்த மூச்சுக்காற்றை புருவமத்தியில் செலுத்துவதற்கு வாய்ப்பு தர வேண்டும். அப்படி செலுத்திய காற்று மூலாதாரத்தில் தங்கி விடும். அப்படி தங்கி விட்டால் அசுத்தம் நீங்கிவிடும், சுத்தம் தங்கி விடும். சுத்தம் தங்கினால் அந்த சுத்தத்திற்கு பொருள் அருள்.
மற்ற ஞானிகளுடைய கருணையே நமக்கு அறிவாக இருக்கு. அவர்களுடைய கருணையே நமக்கு அறிவாகவும், ஆற்றலாகவும், பொருளாகவும், புண்ணியமாகவும் இருக்கும். ஆசான் எனக்கு சொல்லி தராததால், ஞானிகளின் கருணையை பெறுவதற்கு பல ஜென்மங்களில் முயற்சிக்கவில்லை. உலக மக்கள் பால் கருணைகொண்டு இராமதேவரே ”எல்லோரும் கடைபிடியுங்கள்” என்கிறார். உலக மக்களே எல்லோரும் வாருங்கள், சுகம் இருக்குது இங்கே என்று மகான் நந்தனார் சொல்வார். எல்லோரும் இங்கே வாருங்கள், ஞானிகளுக்கு மட்டும் மறைக்கும் எண்ணமே இருக்காது. மறைக்கும் குணம் இருந்தால் அவர்கள் ஞானியாக இருக்க முடியாது. மறைக்கவே தெரியாது. அவர்கள் வெள்ளை உள்ளத்தோடு இருப்பார்கள். எப்போதும் நறுமணமுள்ள மல்லிகை, மலர்ந்தால் நறுமணம் இருப்பது போல் ஞானியானால் அவர்களுடைய இதயத்தில் தூய்மைதான் இருக்க முடியும். எல்லோரும் வரவேண்டுமென்று என்றுதான் எண்ணுவார்களே தவிர யாருக்கும் சொல்லக்கூடாது என்று நினைக்க மாட்டார்கள். எல்லோருக்கும் சொல்வார்கள். வினை என்ன செய்யும்? எட்டிப் பிடிக்க முடியாமல் போகச் செய்யும். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மகான் திருமூலர் பெருந்தன்மையோடு சொல்வார். மகான் நந்தனாரும் எல்லோரும் வாருங்கள் செல்வம் இருக்குது இங்கே என்று சொல்வார்கள். ஆசான் திருமூலதேவரோ,
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
– திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் 85.
நாங்கள் மேல்நிலை அடைவதற்கும் பாவத்திலிருந்து விடுபடுவதற்கும், என்றும் அழியாத பெருவாழ்வை பெறுவதற்கும் உடம்புதான் காரணமென்று அறிந்து கொண்டோம். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். உலக மக்கள் பேரின்பத்தை அடைய வேண்டுமென்று நினைக்கிறேன். இதற்கு என்ன உபாயம்? ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் – என் உடம்பைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். ஊன் என்றால் உடம்பு. உடம்பைப் பற்றி அறிந்தால் நான் உயிரைப்பற்றி அறிந்து கொள்வேன். உடம்பைப் பற்றி அறியாதவன் உயிரைப்பற்றி அறிய முடியாது. ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம். உடம்பைப் பற்றிய ஒரு உணர்வுள்ள மந்திரம்.
அடுத்து வான்பற்றி — நான் என்பதற்கு வான் என்று எதுகைக்காக சொல்வார். வான் தான் மேலான வாழ்வு. வான்பற்றி நின்ற மறைபொருள்
சொல்லிடின் – மேலான அந்த மறைபொருள் எது? மறை என்றால் வேதம் என்று பொருள். அப்ப வேதம் எது? நான் பெற்ற இன்பத்திற்கு வேதம் எது? அது உடம்புதான். உடம்புதான் வேதம்.
மேலான அந்த மறைபொருள் வேதம் எது என்றால், ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், உடம்பைப் பற்றி அறிவதே வேதம்.
உடம்பைப் பற்றி அறிந்தவன், வேதத்தைப் பற்றி அறிந்து விட்டான். உடம்பைப் பற்றி அறிந்தவன் உயிரைப் பற்றி அறிவான். உலக மக்களே நீங்கள் வாருங்கள்.
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே – பற்று என்று சொல்லாமல் பற்றப் பற்ற என்று சொன்னார். எப்பொழுதெல்லாம் நீ திருமூலதேவா என்று அழைக்கின்றாயோ, எப்பொழுதெல்லாம் இராமதேவா என்று அழைக்கின்றாயோ, எப்பொழுதெல்லாம் நீ இராமலிங்க சுவாமிகள் என்று அழைக்கின்றாயோ, எப்பொழுதெல்லாம் திருஞானசம்பந்தா என்று அழைக்கின்றாயோ அப்பொழுதெல்லாம் எங்களுக்குத் தெரியும். அப்பொழுது உன்னுடைய உடம்பே உனக்கு வேதம்.
வேதம் வகுத்ததே மனிதனுக்குத்தான். மென்மையான முயலுக்கோ, மானுக்கோ, மயிலுக்கோ வேதம் படைக்கவில்லை. வேதத்தை மனிதனுக்கே படைத்தான். ஆக வேதம் என்பது மனிதவர்க்கத்திற்குதான் உரியது. வேதம் என்றால் உடம்பு என்று பொருள் படும். அந்த உடம்புதான் உண்மையானது. அதுதான் வழிகாட்டும். பிறவியை உண்டாக்குவது உடம்பு. பிறவியை அறுப்பதும் உடம்பு. அதுதான் வேதம். அந்த உடம்புதான் ஞானத்திற்கு மூலதனம் என்று அறிகின்ற அறிவு இருந்தால் வேதத்தைப் பற்றி அறிந்து விட்டான் என்று பொருள். இராமதேவா நான் தொட்டு விட்டேன். எதை தொட்டு விட்டேன், உயிரை தொட்டு விட்டேன். இராமதேவா தொட்டு விட்டேன். என் உடலை தொட்டு விட்டேன். இராமதேவா நான் தொட்டு விட்டேன் உன் திருவடியை. இராமதேவா நான் தொட்டு விட்டேன் நல்வினையை.
ஆகவே திருவருள் இன்றுதான் இத்தனை ஆண்டுகளாக, இத்தனை ஜென்மங்களாக அறிய முடியாத தொட முடியாத ஒரு வாசிப்பயிற்சியை இன்றுதான் முதல் நிலையாக தொடுகிறேன். நீர் எனக்கு இருந்து அருள் செய்ய வேண்டும்.
இதற்கு என்ன உபாயம். காலை நான்கரை மணிக்கோ, ஐந்து மணிக்கோ எழுந்து காலைக்கடனை முடித்து விட்டு சித்தர்கள் போற்றித்தொகுப்பை வணங்கி மானசீகமாக இராமதேவர் திருவடியை தொட வேண்டும். இதற்கு உணவு பழக்கம் என்ன? அசைவ உணவு ஆகாதப்பா. ஓர் உயிரைக் கொன்று உண்டால், அந்த உயிரைக் கொல்லுகின்ற பாவம் உன் ஆன்மாவைச் சாரும்.
எனவே கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்றார். பாவமாக தெரியும், எப்படித் தெரியும். அது புற்று நோயாகவும், வறுமையாகவும் இருக்கும். கொன்றால் பாவம் தின்றால் தீராது. அந்த பாவத்தை உன் திருவடி துணைகொண்டுதான் நீக்க முடியும். சைவ உணவை நான் கடைப்பிடிக்க வேண்டும். சைவ உணவு மிக அவசியம். அசைவ உணவை உண்டால் உடம்பு மாசுபடும். உடம்பு மாசுபடுவதே மீண்டும் பிறவிக்கு காரணமாகும். ஆகவே அசுத்த உணவு கூடாது. ஆகவே சைவத்தை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து எதை கடைப்பிடிக்க வேண்டும்? நவீன உணவு பொருட்கள் பிஸ்கட், சாக்லேட், கொக்கோகோலா , செவன் அப் இதுபோன்ற குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். உப்பு, புளி, காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற குளிர்பானங்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக இரசாயனப் பொருட்களை சேர்த்திருப்பார்கள். எனவே அந்த உணவை தள்ள வேண்டும். அப்புறம் என்ன செய்ய வேண்டும்? சைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.
டீ, காபியை நிறுத்த வேண்டும். இப்படி டீ காபியை நிறுத்து என்று சொன்னால், என்னால் முடியாது. ஐயனே வேறு எதை சொன்னாலும் சரி அல்லது பட்டினி கிடக்க சொன்னாலும் சரி, இந்த டீ காபி குடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை. பழக்கப்பட்டுவிட்டேன் இந்த பாவி .
அடே பாவி டீக்கு பதில் பால் சாப்பிடலாமே என்று சொன்னால் இல்லை எனக்கு டீ குடிச்சு பழக்கமாச்சு என்றான். இன்னும் வினை இருக்கு. இந்த டீயாவது கொடு என்றான். கடவுள் வேண்டாமென்றான். டீ காபி கெட்டுப் போகாமல் இருக்க அதிலும் இரசாயனப் பொருள் கலந்திருக்கு, கலப்படமும் இருக்கு . ஆக அதற்குரிய நோயும் அது தரும்.
எனவே பால், தயிர், மோர், காய்கறிகள் போன்ற சுத்த சைவமான இயற்கை உணவாக இருக்க வேண்டும்.
முப்பது வருடமாக காலையில் எழுந்தவுடனே காபி, டீ குடித்து பழக்கப்பட்டவன். ஏதோ ஞானம் தருவேன்னு உன் திருவடியை பிடிச்சேன். நான் என்னய்யா பாவம் செஞ்சேன்? காபி டீயை நிறுத்த சொல்கிறாயே. இதற்கு ஆசான் ”என் திருவருள் கொண்டே இந்த காபி டீயையும் நிறுத்த முடியும், காபி டீ பழக்கத்தை கைவிட உன்னால் முடியாது. இது எனக்குத் தெரியும். எனது ஆசியை கொண்டே காபி, டீ, பிஸ்கட் போன்றவற்றை தள்ளு, இவையெல்லாம் வேண்டாம். பிஸ்கட் வேண்டாம், காபி வேண்டாம், செவன் அப் போன்ற குளிர்பானங்கள் வேண்டாம். சைவத்தை கடைப்பிடி என்றார். குடி, பீடி, சிகரெட் இந்த பழக்கமிருந்தால் அதை ஒழிப்பதற்கும் உனது ஆசி வேண்டுமென்று ஆசானை கேட்கவேண்டும். அடிமைப்பட்டுவிட்டால் விடுபடுவதற்கு ஆசானை கேட்க வேண்டும். இந்த தீய பழக்கங்கள் பிராணாயாமத்துக்கு தடையாக இருக்கும். சிலபேர் கஞ்சா குடிப்பான், போதைப் பொருள் சாப்பிடுவான். யோகத்துக்கு காபி, டீ ஆகாது. ஆனால் பால் சாப்பிடலாம்.
பிராணாயாமம் செய்யலாம். ஆனால் வெறும் வயிற்றில் செய்யக்கூடாது. பிராணாயாமம் செய்வதற்கு முன்னே, மல ஜலம் கழித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வடதிசை நோக்கி அமர்ந்து, பத்மாசனத்தில் அமர வேண்டும்.
பிராணாயாமம் செய்த பின் அரைமணி நேரம் கழித்துதான் குளிக்க வேண்டும். வயிற்றில் அதிகமாக உணவு இருக்கக் கூடாது. பசிக்கு சாப்பிட வேண்டும். பட்டினி போடக்கூடாது. பட்டினி போட்டால் செத்துப்போவான். ஒரு மனிதன் அளவான உணவு, ஆறு மணி நேரம் அளவாக தூங்க வேண்டும்.
ஒரு மனிதன் கடவுளை அடைய வேண்டுமென்றால், சுட்டிடாதே ஜடத்தைப் பட்டினி போட்டு, பட்டினி போட்டுக் கொன்றுவிடாதே உடம்பை. அதுதான் ஞானத்துக்கு வேதம். அதுதான் படகு. கடலைக் கடப்பதற்கு அதுதான் கப்பல்.
சுட்டிடாதே ஜடத்தைப் பட்டினி போட்டு தூங்காது பாராதே தவநேரா
ஆறுமணி நேரம் நிச்சயம் தூங்க வேண்டும். பத்து மணிக்குப் படுக்க வேண்டும். நான்கு மணிக்கு எழுந்திரிக்க வேண்டும்.
ஆக, அதிகாலையில் எழுந்து, மல, ஜலம் கழித்து விட்டு, ஒரு டம்ளர் சுத்த ஜலத்தை குடிக்க வேண்டும். ஆசானை வணங்கி, பத்மாசனத்தில் அமரலாம். அப்படி பத்மாசனத்தில் அமர முடியவில்லை என்றால் பரவாயில்லை.
வினாத் தண்டு நிமிர்ந்திருக்க வேண்டும். வினாத் தண்டு நிமிர்ந்திருந்து, ஆசானை வணங்குகிறோம். பல ஞானிகளை வணங்கி, கேட்கிறோம்.
இப்படி ஆசானை வணங்கி, வினாத் தண்டை நிமிர்த்தி அமர்ந்து, மூக்குப் பக்கம் வாசியாகிய மூச்சுக் காற்றை இழுக்கிறோம். வயிற்றில் உணவில்லை. மல, ஜலம் கழித்து விட்டோம். இப்படி வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு செய்கிறோம். இப்படி செய்வது இல்லறத்தானா என்றான், அவரும் இல்லறத்தார்தான். இல்லறத்தான்னா, பூஜை செய், பிராணாயாமம் செய், அவ்வளவுதானே, பூஜை செய்யத் தடையாகும்னா, குளிக்கிறோம். தாம்பத்திய உறவு, உடலுறவுக் கொண்டால், காலை குளித்து விட்டு, பூஜை மட்டும் செய்து பார். பிராணாயாமம் செய்யாதே.
இந்தப் பயிற்சி செய்கிறவர்களுக்கு என்னென்ன இருக்கக்கூடாது? தலைவலி, காய்ச்சல், ஜூரம் இருந்தால் வேண்டாம். நோய் இருந்தால் வேண்டாம். எண்ணெய் ஸ்நானம் செய்யும்போது வேண்டாம்.
அப்ப, காய்ச்சல், தலைவலி, உடல் உபாதைகள், நோய் இருந்தால் வேண்டியதில்லை.
வடதிசையை நோக்கி அமர்கிறோம். காந்த புலன், தென், வடலாக இருக்கும். கீழ், மேலாக இருந்தால், எண்ண அலைகள், பிரச்சினையை உண்டாக்கும். மனம் ஒருநிலைப்படுவதற்கு வடமுகமாக அமரவேண்டும். அப்ப கீழ்திசை , ஏதோ செய்யலாம். பிராணாயாமம் செய்யும்போது வடதிசை , இது மனம் ஒருநிலைப்படுவதற்கு, காந்தபுலன் நம்மை இழுப்பதால், ஒரு கோட்டுக்குக் கொண்டு வருகிறோம். அதனால், வினாத்தண்டு நிமிர்ந்திருந்து, மூக்குப் பக்கம் வாசி இழுக்கிறோம். மேலே இழுக்கிறோம். மூக்குப் பக்கம், எந்தப் பக்கம் வேணாலும் வரலாம், இடபக்கமாகவும் வரலாம், வலபக்கமாகவும் வரலாம். வினாத்தண்டு நிமிர்ந்திருந்து, வயிற்றில் உணவு இல்லாதபோது, பழைய உணவு வயிற்றில் இல்லாதபோது, வெறும் வயிற்றிலே, மூச்சுக்காற்றை இழுக்க வேண்டும்.


இது மான் முத்திரை. இந்த முத்திரைக்கு மான் முத்திரை என்று பெயர்.இப்படி மூச்சுக் காற்றை இழுத்து, இப்படி அடைக்கனும். முதல்ல மூச்சுக் காற்றை இழுக்கிறோம். வலது பக்கம் அடைக்கனும். அப்படி இழுத்த காற்றை, லேசாக இடதுபக்கம் விடுகிறோம், இடகலை அது. சூரியகலைப்பக்கம் அடைச்சிக்கிட்டோம். இரண்டு பக்கம் காற்று ஒடுங்க வேண்டும். முதல்ல இழுத்துக்கிறோம். எந்த பக்கம் காற்று ஓடினாலும் சரி, சந்திர கலையில் ஓடினாலும் சரி, சூரியக் கலையில் ஓடினாலும் சரி, மூச்சுக் காற்றை, வினாத்தண்டு நிமிர்ந்திருந்து, நன்றாக கவனிக்க வேண்டும், வினாத்தண்டு நிமிர்ந்திருக்க வேண்டும். தண்டு எலும்பு, முதுகெலும்பு விரைப்பாக இருக்க வேண்டும்.

மெதுவாக காற்றை இழுத்து, மெதுவாக விட வேண்டும். காற்றை மெதுவாக அப்படியே ரேசிக்க வேண்டும், மெதுவாக விட வேண்டும். காற்றை மெதுவாக விட்டு, அதற்கப்புறம், அதே மூச்சுக் காற்றை இப்படி அடைச்சிக்கிட்டு, மெதுவாக விடுகிறோம். இவ்வளவு நேரம் வரையிலும் இழுத்த மூச்சுக் காற்றை மெதுவாக விட வேண்டும். இது ஒரு சுற்று. முன்னமே ஆசான் திருவடியைத் தொட்டு விட்டோம். வாசியைத் தொட்டு விட்டோம்.
வாசியைத் தொட்டு விட்டால், ஆன்மாவைத் தொட்டதாக அர்த்தம். வாசியை தொட்டு விட்டால் வேதத்தைத் தொட்டதாக அர்த்தம். வாசியைத் தொட்டு விட்டால். மூச்சுக் காற்று அல்லது வாசியை, மூச்சுக் காற்றைத் தொட்டு விட்டால், எமனை புறமுதுகு அடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். எமனை ஓட ஓடத் துரத்தப் போகிறோம். மூச்சுக்காற்றுதானே, மரண செய்தி அறிவிக்கும்.
மூச்சுக் காற்றை தொட்டு விட்டோம். எமன் நெருங்க முடியாது. அப்ப மூச்சுக் காற்று நின்றால், இறந்துவிடுவான். இந்த மூச்சுக் காற்று புருவமத்தியில் ஒடுங்கிவிட்டது, இது சாகாக்கால். புருவமத்தியில் ஒடுங்கியதால், அந்தக் காற்று வெளியே வராது, சாகாக் கால்.
கால் என்பது சுவாசம். மூச்சுக் காற்றுக்கு கால் என்ற பொருள் உண்டு. அந்தக் கால் புருவமத்தியில் ஒடுங்கிவிட்டது, தங்கி விட்டது. அது வெளியே வராது, எனவே சாகாது.
மூலத்தில் தோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.
– மகான் ஒளவையார் – வாயுதாரணை – குறள் எண் 1.
அப்படி ஒடுங்கிய காற்று வெளியே வராது, தங்கிவிடும். அப்படி தங்கிவிட்டால், உள்ளே ஓங்கார, ரீங்கார ஒலி கேட்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு புண்ணியவான்களுக்குத்தான் கிடைக்கும் அல்லது புண்ணியவான்கள் திருவடியைப் பற்றினால் கிடைக்கும்.
மூச்சுக் காற்றுக்கு வேதம் என்று பொருள். மூச்சுக் காற்றுக்கு ஆன்மா என்று பொருள். மூச்சுக்காற்றை அறிந்தவன் நிச்சயமாக எமனை வெல்லுவான். ஞானிகள் வந்து போகின்ற காற்றை ஸ்தம்பிக்கிறார்கள். இரண்டு பக்கம் வரும். இப்போது சொல்லக் கூடாது அதை. இருந்தாலும் ஒரு பயன், அதனுடைய இலாபத்தைச் சொல்ல வேண்டும்.
நான் ஆரம்பத்தில் இராமதேவர் சொன்னது, வாசியைத் தொடுங்கள், என் திருவடியைத் தொடுங்கள். தொடுவதற்குத்தான் உனக்குச் சொல்லியிருக்கேன் தவிர, கட்டுவதற்குச் சொல்லவில்லை. பின்னே சொல்லுகிறேன். அதுவரை அவசரப்படாதிருக்க வேண்டும். விரைவாக செல்ல முடியாது.
குழந்தைகள் தவழ்ந்து செல்வது போல் செல்ல வேண்டும், தாவி ஓட முடியாது. ஆக, மெதுவாக செய்யுங்கள். நான் உங்களுக்கு அருள் செய்கிறேன். நான் துணை இருக்கிறேன். என்னை அழைக்கின்றாய். மகனே, பிள்ளைகளே, மகனே நீ அழைக்கின்றாய். உன் நோக்கம் புரிந்து கொண்டேன். நீர் அடைந்த பேரின்பத்தை அடைவதற்காகத்தான் உன் திருவடியைப் பற்றுகிறேன். நீர் அடைந்த பேரின்பத்தை அடைவதற்காக, இராமதேவா, எனக்கு அருள் செய்! தாயே. நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக ஏற்று, அருள் செய்யென்று கேட்பது, நீர் அடைந்த பெரும் பேறை, அந்தப் பேரானந்தத்தை அடைய விரும்புகிறேனய்யா நான். எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று உன் திருவடியைப் பற்றுகிறேன்.
ஆகவே, வேதத்தைத் தொட்டு விட்டேன். வேதம் என்பது மூச்சுக் காற்று. வேதம் என்பது உடம்பு. நான் திருவடியைத் தொட்டு விட்டேன்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
– திருமந்திரம் – பிராணாயாமம் – கவிஎண் 571.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் என்பது ஒரு கணக்கு. அதன் இலாபத்தை இப்போது சொல்கிறேன். அந்த கணக்கு என்பது வாசியோடு பழக வேண்டும். இடைகலையும், பின்கலையும் புரிந்து கொண்டு, அந்தக் காற்றை உள்ளிழுக்க மூச்சுக்காற்று சொன்னபடி இயங்கும். மூச்சுக்காற்று சொன்னபடி கேட்கும். இப்ப நான் சொல்வது நான்காம் படி.
அப்படி ஏற்றி இறக்கி, இருகாலும் பூரிக்கும் – ஒருபக்கம் காற்றை இழுக்கிறான், இழுத்து ஸ்தம்பிக்கிறான். அப்படி செய்யும் போது இரண்டு பக்கமும் காற்று வர துவங்கிவிடும். அது புருவமத்தியில் ஒடுங்கிவிடும். இருகாலும் பூரிக்கும் – இரண்டு பக்கமும் சுவாசம் வரும். அதை அப்படியே சேர்த்து, புருவமத்தியில் செலுத்தி விடுவான். இது நமது முயற்சியால் செய்ய முடியாது. இதை ஆசான்தான் செய்யனும்.
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
கூற்று என்பது எமன். எமனை வெல்லலாம். எப்படி எமனை வெல்லலாம்? மூச்சுக் காற்று வெளியே போனால்தான் எமன் பிடித்துக்கொள்வான். மூச்சுக் காற்று உள்ளே தங்கிவிட்டால் எமனுக்கு வேலையில்லை. நாம் எமனை பார்த்து எந்த ஊருடா நீ? போன ஜென்மத்தில் வந்து என்னை பிடித்தது போல் நினைத்தாயா? போன ஜென்மத்தில் நான் ஆசான் ஆசியைப் பெறாமல் இருந்தேன். மூச்சுக்காற்று வெளியில் போனால் தானே எமன் பிடிப்பான்? திருவருள் துணையினால் மூச்சுக்காற்று உள்ளே தங்கிவிட்டது.
இனி எமனாகிய உனக்கு என்னிடம் வேலையில்லை. இன்று மட்டுமல்ல, இன்னும் எத்தனை கோடி யுகங்களுக்கும் உனக்கும், எனக்கும் சம்பந்தமில்லை, பக்கத்தில் வராதே ஓடிப் போ என்று எமனை பார்த்து சொன்னான். மூச்சுக் காற்று உள்ளே தங்கிவிட்டது, கபம் அற்று விட்டது. மூச்சுக்காற்று உள்ளே தங்கிவிட்டது, குணக்கேடுகள் நீங்கியது.
இப்படிப்பட்ட வாய்ப்பை ஆசான் இராமதேவர் அவர்கள், உலக ஆன்மீகவாதிகள் பால் கருணை கொண்டு அருளியுள்ளார்கள். தொடுங்கள் எனது திருவடியை, தொடுங்கள் வாசியை. அதற்குத்தான் இந்த மான் முத்திரை சுட்டிக்காட்டியுள்ளேன்.
வெறும் வயிறோடு இருக்கனும். வினாத்தண்டு நிமிர்ந்திருக்க வேண்டும். மூச்சுக்காற்று எந்தப் பக்கம் வந்தாலும் சரி. வாசியை மேலிழுத்து, அப்படி லேசாக அடைக்கிறோம். இப்ப நீங்க ஒன்றை புரிஞ்சிக்கனும். லேசாகத்தான் மூச்சுக்காற்றை இழுக்க வேண்டும். வெடுக்குன்னு இழுக்க கூடாது. மூச்சுக்காற்றை இழுக்கும்போது வேகமாக இழுக்கக் கூடாது. மூச்சுக்காற்றை தொட வேண்டும். இதுதான் தொடுநிலை வாசிப் பயிற்சி.
இப்படித்தான் கடவுள், ஞானிகள், இயற்கை அன்னை படைத்திருக்கிறாள். எந்த ஜீவராசிகளுக்கும் பத்தாம் வாசலாகிய புருவமத்தி கிடையாது. இயற்கை அன்னை மனிதனுக்கு மட்டும்தான் பத்தாம் வாசலாகிய புருவமத்தியை அமைத்திருக்கிறாள். அந்த இடத்தை அறிந்து, சொர்க்க வாசலைத் திறந்து, உள்ளே சென்று, இந்தப் பேரின்பத்தை எல்லோரும் அடைய வேண்டும்.
இதற்காகத்தான் ஞானிகள் மனமிரங்கி, இன்று ஆசான் இராமதேவர் அருளிய நூலுக்கு நான் விளக்கம் சொல்லியிருக்கிறேன். இன்னொரு பகுதி இருக்கு. அந்தப் பகுதியிலும் இதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆசான் இராமதேவர் இந்த உடம்பை ஆலயமாக நீங்கள் கருத வேண்டும் என்கிறார். உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பாலயம் என்பார் ஆசான் திருமூலதேவர். அதை ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் என்பார்.
உள்ளம் பெருங்கோவில், அதை சிறுகோவில் என்று நினைக்க வேண்டாம். பெருந்தன்மை இருக்கின்ற இடம், பெருமைக்குரிய இடம், பெருந்தன்மை இருக்கின்ற இடமும், அறம் இருக்கின்ற இடமும் கடவுள் வாழுகின்ற இடமும், நமது உள்ளம்தான், நமது மனம்தான் என்பதை நீங்களெல்லாம் அறிய வேண்டும்.
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பாலயம் – உயர்ந்த மனம், அது பெரும் கோவில். இந்த உடம்பே ஆலயம்.
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பாலயம்
வள்ளல் பிரானாருக்கு வாய் கோபுர வாசல்
வாய்தான் கோபுர வாசல், தலைவனுக்கு வாசல் இது.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
– திருமந்திரம் – சிவபூசை – கவி எண் 1823.
இந்த உள்ளம் அல்லது மனதை கோவிலாகவும், உடம்பை ஆலயமாகவும் கருத வேண்டும். இப்படி எண்ணுவதற்குரிய அறிவை ஆசான் திருமூலதேவர்தான் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது என் மனது கோவிலாகவா இருக்கு? வறட்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் பெரும் குணக்கேடுகளெல்லாம் உள்ளே இருக்கு. இதை ஆலயமாக்க வேண்டும். உள்ளம் பெருங்கோவில், உள்ளுடம்பை ஆலயமாக்க வேண்டும்.
வாய் தலைவனுக்கு கோபுரவாசல் என்றார். தெள்ளத் தெளிந்தார்க்கு என்று சொன்னார். தெள்ள என்று சொல்லாமல், தெள்ளத் தெளிந்தார்க்கு என்றார். தெளிவு, தெளிந்தார் என்றால் தெளிவுடையவர் என்று அர்த்தம்.
மிக்க தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே என்றார். காளா மணிவிளக்கு என்றால், ஜோதி தோன்றுகின்ற மக்களுக்கு, எப்படி இருக்குமென்றால், செங்கல் காளவாய் வைப்பார்கள். இரவில் பார்த்தால், அப்படியே தகதகன்னு கண்ணைப் பறிக்கும்.
அதுபோன்று நம்மை வஞ்சிக்கக்கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட ஐம்புலன்களும் அப்படியே தம்முள் மாறி ஜோதி வடிவமாகத் தெரியும். இதைப் பற்றியெல்லாம் நிறைய கருத்துகள் இருக்கு. அடுத்து ,
தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடுந்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடுந்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.
– திருமந்திரம் – உபதேசப்பகுதி 28 – கவி எண் 140.
இப்பொழுது நமக்கு பொறிபுலன்கள் விரோதமாக இருக்கிறது. ஆசான் அருள் பெற்றவுடன் பொறிபுலன்கள் நமக்கு சாதகமாக மாறிவிடும்.
எரிகின்ற செங்கல் காளவாயை நிலா வெளிச்சத்தில் பார்க்காமல், அமாவாசை இருட்டில் பார்க்கும் போது தகதகவென்று இருக்கும். அதேபோன்று நம்முள் தெரிகின்ற ஜோதி இருக்கும்.
அடுத்த படியாக இதைத் தொடர்ந்து இன்னொரு பகுதி ஆசான் இராமதேவர் அருளியது இருக்கிறது. அதைப் பார்ப்போம்.
ஓம் மகான் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஆசான் இராமதேவர் அருளிய பிராணாயாமம் நெறிமுறை ஆசி காண்டம்.
ஓங்கார இறையருளே அரங்கா போற்றி
ஓங்கார குடில் வாழும் அரசா போற்றி
ஓங்கார ஜோதியே தேசிகா போற்றி
ஓங்காரன் உன் திருவடிகள் போற்றி போற்றி
போற்றியே இராமதேவர் யான் பிராணாயாம ஆசி
புகலவந்தேன் இதன் காலம் அறிவாயப்பா
போற்றிடும் நாள் விக்கிரம ஆண்டு மாசி 17ஆம் நாள்
பூவுலகில் தொண்டர்கள் ஞான வாழ்வு சிறக்க
சிறக்கவே நெறிமுறைகள் அளிக்க வந்தேன்
சிறப்புப் பெற முறை செய்தால் யோகம் சித்தி
அருள் ஞானநிலை ஓங்கும் தொண்டருக்கும்
அறுமுகன் உன் ஆசியினால் மகான்களாவார்
மகான் நிலை அடைந்திட நெறிமுறைகள்
மகான் இராமதேவர் வழங்குவேனே
யோகத்தின் முதல் நிலையே பிராணாயாமம்
ஓங்காரன் நீ அறிவாய் என்று சொல்வேன்
சொல்லிடவே பிராணாயாமம் செய்யும் தொண்டர்
சிறப்புப்பெற உப்பு புளி காரம் குறைத்து
நல்விதமாய் அசைவ உணவு அனைத்தும் நீக்கி
நவீன உணவு தேநீர் கோக்கோ காபி நீக்கி
நீக்கியே முறை செய்தால் மிகவும் நன்று
நிலமதனில் பொடி, பீடி, வெண்குழல் வத்தி (சிகரெட்)
ஊக்கமிலா லாகிரியாம் புகையிலை நீக்கி
உடம்புதான் ஆலயம் என்ற நிலை உணர்ந்து
நிலை உணர்ந்து உறுதியுடன் முறைகள்
செய்தால் நீங்காது பல யுகங்கள் வாழலாமே
நிலை வாழ்வு மரணமிலாப் பெருவாழ்வுதான்
நிலைபெறுவார் தொண்டர்கள் யுகயுகத்தும்
யுகயுகமாய் வாழ்ந்திருக்கும் சூட்சமம் சொல்வேன்
யுகங்களிலே ஞானியாக்கி உலவ வைப்பேன்
யுகமதிலே பீடை இல்லா வாழ்வு அளிப்பேன்
யுகத்தினிலே சூட்சமங்கள் பலவும் பெறுவார்
பெற்றிடுவார் அரங்கர் உன் அருளினாலே
பிராணாயாமம் சித்திக்கும் ஆசி உண்டு
பற்றறுத்த யோகிபோல் காயசித்தி
பண்பான சீடர்கள் பெறுவாரப்பா
அப்பனே யோக சித்தி அடையும் தொண்டர்
அறிவித்த என் வாக்கை சிரம்மேல் கொள்வார்
ஒப்பில்லா அவர்களெல்லாம் ஞானியாவார்
ஓங்காரன் உணர்ந்து கொள்வாய் உரைத்தேனப்பா
அப்பனே அன்பருக்கும் தொண்டருக்கும்
அருள் சித்திப் பெற்றிட நெறிமுறை தந்தேன்
ஒப்பில்லா முறை செய்தால் வெற்றி வெற்றி
ஓதிவிட்டேன் நெறிமுறையின் இப்பாகம் முற்றும் முற்றே
– சுபம் –
சுவடிக்கு விளக்கம் –
பிராணாயாமம் செய்யும்போது வயிற்றில் உணவு இருக்கக் கூடாது. தலைவலி காய்ச்சல் இருக்கக் கூடாது. உடலுறவுக் கொள்ளும் நாட்களில் பிராணாயாமம் செய்யக் கூடாது. எண்ணெய் ஸ்நானம் செய்யும் காலங்களிலும் பிராணாயாமம் செய்யக் கூடாது. குளித்தவுடன் பிராணாயாமம் செய்யக் கூடாது. அப்படி செய்ய விரும்பினால், குளித்த அரைமணி நேரத்திற்குப் பிறகுதான் செய்ய வேண்டும். தியானம் செய்யலாம். வயிறு சுத்தமாக இருக்க வேண்டும். நோயிருந்தால் பிராணாயாமம் செய்யக்கூடாது.
எப்பொழுதும் சைவ உணவைத்தான் உண்ண வேண்டும். மாமிசம், போதைப் பொருட்கள் ஆகாது. மிகுதி உணவும் ஆகாது, பட்டினியும் போடக் கூடாது.
மனம் ஒருநிலைப்படாவிட்டால், வெளியில் சென்று இயற்கை காட்சிகளைக் கண்டுவிட்டு, வேறு சிந்தை இல்லாமல் வீட்டிற்கு வர வேண்டும். பின் உட்கார்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும்.
பிராணாயாமம் செய்யும் முன்பு, ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்டபின் பிராணாயாமம் செய்யக் கூடாது. மலச்சிக்கல் இருந்தால், பாசிப் பயிறு, பழ வகைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு ஒன்பதரை அல்லது பத்து மணிக்குள் படுத்து விட வேண்டும். இரவில் ஆறு மணி நேரம் தூங்க வேண்டும்.
பிராணாயாமம் செய்யும் சாதகர்கள் உப்பு, புளி, காரம் குறைத்து உண்ண வேண்டும். அசைவ உணவுகள் அனைத்தும் நீக்க வேண்டும்.
மேலும் நவீன உணவு என்று சொல்லக்கூடிய, டீ, காபி, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, கோக்கோ, மதுபானங்கள், பிஸ்கட்ஸ், சாக்லேட் வகைகள், கேக், அனைத்தும் நீக்க வேண்டும். மூக்குபொடி, பீடி, வெண்குழல்வத்தி (சிகரெட்), சுருட்டு, புகையிலை, கஞ்சா, போன்ற லாகிரி போதைப் பொருட்களை நீக்க வேண்டும். உடம்புதான் ஆலயம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
யோகப்பயிற்சியில் ஈடுபடும் அன்பர்கள் பிரம்ம முகூர்த்தமாகிய, நாலரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் எழுந்து, காலைக் கடன்களை முடிக்க வேண்டும். பின்பு பத்து நிமிடம் சித்தர் போற்றித் தொகுப்பினைப் படித்தும், திரு அருட்பா , திருவாசகம், திருமந்திரம், திருக்குறள், தாயுமான சுவாமிகள் பாடல்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நூலைப் பத்து நிமிடம் படிக்க வேண்டும்.
பிராணாயாமம் செய்யும்போது வயிற்றில் உணவு இருக்கக் கூடாது. பிராணாயாமம் செய்யும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் செய்யக் கூடாது. வடக்குப் புறம் நோக்கி, வெண்ணிறத் துணியில் அல்லது பாயில் அமர்ந்து மான் முத்திரைப் போல் கைகளை வைத்துக் கொண்டு, முதுகின் நடு எலும்பு நிமிர்ந்து, அதன் பின்னர் பிராணாயாமம் செய்தால், ஆசி கிடைக்கும்.
முதல்ல மூச்சுக் காற்றை இழுக்கிறோம். வலது பக்கம் அடைக்கனும். அப்படி இழுத்த காற்றை, லேசாக இடதுபக்கம் விடுகிறோம். இதையே இடது பக்கம் அடைத்து வலது பக்கம் இழுத்து லேசாக வலதுபக்கம் விடுகிறோம். இது ஒரு சுற்று. இப்படியே ஒரு வாரத்திற்கு செய்ய வேண்டும்.
அடுத்த வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும். அது இரண்டு சுற்று. மூன்றாவது வாரம் மூன்று முறை செய்ய வேண்டும். நான்காவது வாரம், நான்கு முறை செய்ய வேண்டும். இதற்கு மேலே மீறக் கூடாது. அதிகமாகச் செய்தால் உடம்பு கெட்டு விடும். ஒரே முறைதான் சொல்லியிருக்கிறார். அதுதான் இதன் சாரம்.
சமுதாயத்திற்கு பயன்படுமென்று ஆசான் இராமதேவர் அருளிய முதல் நிலை வாசிப்பயிற்சிக்கு விளக்கங்கள் கூறியுள்ளேன். கற்றுணர்ந்த பெரியோர்களும் தாய்மார்களும் இதை கேட்டு ஆசான் இராமதேவரை வணங்கி ஆசி பெற்று ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளுங்கள் என்று முடிக்கிறேன் வணக்கம்.
திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை
26. இலவம் பஞ்சில் துயில்
இல்லறவாசிகள் உறங்குவதற்கான படுக்கை முறைப்பற்றி கூறுவது போல் அமைந்த இந்த பாவானது ஒருவர் அமைதியாக உறங்குவதற்கு அவரது தேகமானது மென்மையான படுக்கையில் உறங்கினால் உடல் அசதிகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவார் என்பதால் மிக மென்மையான இலவம் பஞ்சினால் ஆன படுக்கையை தயார் செய்து அதன் மீது உறங்கிட உடற்சோர்வு நீங்கி சுகமாக உறங்குதல் தேகத்திற்கு நலம் பயக்கும் என்கிறார்.
இது இல்லறவாசிகளுக்கு சொல்லப்பட்டது போல் இருந்தாலும் யோகிகளுக்கு அவர்களது தவகாலங்களில் பயன்படுத்த வேண்டிய படுக்கையாக இதைச் சொல்கிறார் மகான் ஒளவையார்.
வாசிவசப்பட்டு வாசியோகம் தொடர்ந்து செய்து வருங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட கால அளவு பேசாமல் இருந்து வெளிநபர்கள் யாரையும் சந்திக்காமல் தாமே உணவு சமைத்து, எந்தவொரு காரணத்தினாலும் பிறரை சந்திக்காமல் தனி அறையில் இருந்து சதாசர்வ காலம் ஞானிகள் நாமசெபத்தை ஜெபித்துக் கொண்டும் பிராணாயாமம் செய்து கொண்டும் இருக்கும்படியான மிகக் கடுமையான அடயோகம் செய்வார்கள். அடயோகம் முடித்த யோகிகளின் யோகநிலையாக அடுத்து அவர்கள் யோகநிலையின்போது உப்பு, புளி, காரம் நீக்கி உணவினை உண்டு வருவார்கள்.
அப்படி தவக்காலம் முழுதுமே சுவையற்ற உணவினையே உண்டு வருவார்கள். அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலவரைக்கு ஞானகுருவினால் அந்த யோகிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு முற்றிலுமாக உணவை நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தப்படும். அப்படி முற்றிலும் அவர்கள் உணவினை நிறுத்திவிடுவார்கள்.
ஒவ்வொரு நாளும் அவர்களது உடல் உறுப்புகள் இயங்குவதற்கு மட்டுமே அவர்களுக்கு அவர்களது தவத்தின் தன்மையை உடல் வெப்பத்தை பிராணாயாமம் காலஅளவை பொறுத்து சிறிது பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் காலை சூரிய உதயத்திற்கு முன்னால் அதிகபட்சமாக இரண்டு பழங்களும் மாலை சூரிய மறைவிற்கு பின் இரண்டு பழங்கள்தான் சாப்பிட ஞானகுருவால் அனுமதிக்கப்படும். இடையே உள்ள நேரங்களில் எந்த சூழ்நிலையிலும், பழங்களோ மற்ற திரவ வடிவிலான பழச்சாறுகளோ எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்.
இப்படி ஆரம்பிக்கின்ற தவத்தில் இடையில் குடிநீர் அருந்துவதாய் இருந்தாலும் ஆசான் உத்திரவினை கேட்டு அனுமதித்தால்தான் வெறும் குடிநீர் கூட குடிக்க முடியும். நாவறட்சியாக இருக்கிறதே என்று நம் இஷ்டத்திற்கு குடிநீர் சாப்பிட முடியாது. அதுவும் சில சமயம் தண்ணீ ர் குடிக்கும்போது, போதும் நிறுத்து என்று சொல்லிவிடுவார்கள். வேறு வழியில்லை தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி தண்ணீர் அருந்தக்கூடாது என்பதை மீறி தண்ணீர் அருந்தினால் உடல் வெப்பம் குறைந்து தவத்தில் குறைபாடு ஏற்படும்.
காமதேகத்தினை உடைக்கும்படியான இந்த கடுமையான தவ காலக்கட்டத்தில் உடம்பில் உள்ள எல்லா சத்துக்களும் படிப்படியாக குறைந்து உடல் இளைத்து மெலிந்து நடக்கக் கூட முடியாமல் சோர்ந்து போய் மிக பலவீனமாக இருக்கும், சதைகளெல்லாம் வற்றிவிடும். தேகம் கனல்போல் தீமூட்டியது போல் தகித்துக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் அவர்கள் வெறும் தரையில் அமரவோ படுக்கவோ கூடாது. பாய்போன்ற கடினமான படுக்கைகளை பயன்படுத்தக்கூடாது. அவர்களது சதையெல்லாம் வற்றிப்போய் எலும்புகள் வெளியே துருத்தும் அளவிற்கு மெலிந்து காணப்படுவார்கள்.
அந்த நிலையில் அவர்கள் மென்மையான இலவம் பஞ்சினால் அமைந்த படுக்கையில் படுத்தால்தான் அவர்களது தேகம் வலிக்காமல் இதமாக இருக்கும். மேலும் வேறுவிதமான செயற்கையான படுக்கைகளையும் பயன்படுத்தக்கூடாது, மென்மையாகவும் இருக்க வேண்டும்.
அதேசமயம் தேகத்தின் புறத்தோல் பகுதிக்கு காற்றோட்டமும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட வசதி இலவம் பஞ்சு மெத்தையில்தான் கிடைக்கும். ஆகவே இந்த பாவானது வழிவழிவந்த திருக்கூட்ட மரபில் வந்து கடுமையான யோகப்பயிற்சி மேற்கொண்டு யோகம் செய்து ஞானமடைகின்ற யோகிகளுக்கும் தவசிகளுக்கும் சொல்லப்பட்ட கருத்தாகும்.
மகான் ஔவையார் மிகப்பெரும் ஞானி அப்படிப்பட்ட ஞானி சாதாரணமாக ஒரு கருத்தை சொல்லமாட்டார்கள். அவர்கள் யோகிகளுக்காக சொல்லியதே இக்கருத்தாகும்.
27. வஞ்சகம் பேசேல்
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அவை அவை தம்தம் வாழ்வியல் சூழலிற்கு ஏற்ப வாழ்கின்றன. அவையெல்லாம் தமக்கு பிற உயிர்களால் இடையூறு ஏற்பட்டால் அவை ஒன்று நேருக்கு நேர் எதிர்த்து தம்மால் இயன்ற அளவு தாக்கி போராடும் அல்லது எதிரி வலுவுள்ள உயிராக இருந்தால் அவை பயந்து ஓடிவிடும்.
ஆனால் எதிரி தம்மை தாக்கிவிட்டதை ஞாபகம் வைத்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்து கொல்லும்படியான அறிவு பெரும்பாலும் ஐந்தறிவு வரையுள்ள உயிர்களிடத்து காணப்படுவதில்லை. ஆனால் நன்மை தீமைகளை உணர்ந்து மனிதன் கடைத்தேறுவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட சிறப்பான கொடையே ஆறாம் அறிவாகிய பகுத்தறிவாகும். இதை அவன் நல்லபடியாக வாழ்ந்து தீயனவிலக்கி மேல்நிலை அடைய வேண்டுமே அன்றி அந்த அறிவை தீயவழிகளில் பயன்படுத்தி மேலும் மேலும் பாவியாகக் கூடாது.
விலங்குகள் கூட தமக்கேற்பட்ட துன்பத்தை மறந்து அவை மீண்டும் இயல்பாக வாழ்கின்றன. ஆனால் மனிதனோ தமக்கு ஒருவர் இடையூறு செய்து விட்டால் வலுவுள்ளவனாக இருந்தால் அவன் உடனே தமது கோபத்தினால் எதிரியை தாக்கி அழித்துவிடுகிறான்.
எதிரியை அழிக்க இயலாத போது அவன் அந்த நிகழ்வை மறக்காமல் தமது மனதிற்குள்ளாகவே ஆழப்புதைத்து எதிரியை தாக்கி அழிக்க, தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி வஞ்சகமாய் காத்திருந்து தக்க சந்தர்ப்பம் ஏற்பட்ட உடன், எதிரி எதிர்பாராத வகையில் தாக்கி அழித்துவிடுகிறான்.
ஒருவன் மற்றொருவரால் பாதிக்கப்பட்டால் நேருக்கு நேர் தமது மனவெளிப்பாட்டை வெளிப்படுத்தினால் அதைக் கண்டு எதிரி, இவன் நம்முடன் ஒத்துப்போகாதவன், இவன் தொடர்பு தேவையில்லை, இவன் நமது எதிரி என எண்ணி அவனது பார்வையினின்று அகன்று சென்றுவிடுவான் அல்லது ஒதுங்கி வாழ்வான்.
ஆனால் நடந்த சம்பவங்களை மறக்காமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எதிரியிடத்து தான் பணிந்து விட்டதாகவும் அவனிடம் நட்பாக நடந்துகொள்வது போல நடந்து இனிமையாக அவனை புகழ்ந்து பேசி அவனது நம்பிக்கையைப் பெற்று எதிரி அயர்ந்த சமயம் பார்த்து நயவஞ்சகமாக பேசி பேசி இறுதியில் வீழ்த்தி வெற்றி காண்கின்ற நயவஞ்சக செயல் மிகக் கொடுமையான செயலாகும்.
ஒருவன் தனக்கு எதிரி என்றால் அது வெளிப்படையாக தெரிவதால் ஒன்று எதிர்த்து போராடுவான். இல்லை தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கி விடுவான். ஆனால் வஞ்சகம் உள்ளவன் அவ்வாறில்லாமல் எப்போது என்ன செய்வான்? எப்படிப் பேசுவான் என்று தெரியாததால் அவன் மிகக் கொடுமையானவன் ஆவான்.
எப்போது மனிதனின் மனதில் தூய்மையில்லையோ, பொறாமை உள்ளதோ, பொருள் பற்று உள்ளதோ, காமம் உள்ளதோ, அப்போது அவனது மனதில் கள்ளம் தோன்றி வஞ்சனை கொள்வான். ஒருவன் பொருள் பற்றினாலும், பிறர்மீது கொண்ட பொறாமையினாலும் வஞ்சனை கொள்வான். ஆயினும் வஞ்சனையாக உள்ளோர் பழி உணர்வை பெரும்பாலும் வெளிப்படையாக தெரியும்படி நடந்து பகை உணர்வு கொள்வதால் எதிராளி விலகிச் சென்று விடுவான்.
அவனிடம் நட்பு கொள்ளாமல் விலகிவிடுவான். ஆனால் சிலர் தாம் எடுத்துக் கொண்ட காரியத்தை பகையை முடிக்க எண்ணி எவர் எதிரியோ அவனிடமே நட்பு பாராட்டி ஆழ்ந்த நட்பு உள்ளவரைப் போல் நடித்து உள்ளத்தில் வஞ்சமும் புறத்தில் அளவில்லா அன்புள்ளவனாகவும் அவனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவனாகவும், அவனுக்காக இவன் தியாகம் செய்வது போல தேனொழுக இனிமையாக பேசி அவனை நம்பச்செய்து இறுதியில் பகை முடித்து வீழ்த்திவிடுவான்.
உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் தேனும் கொண்டு பேசுகின்ற இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும். இச்செயல் மிகக் கொடுமையான செயல், நம்பிக்கைத் துரோகமான செயல். ஆதலால் வஞ்சகம் பேசேல் எனக் கூறுகிறார் மகான் ஒளவையார். அப்படி வஞ்சனையாக பேசினால் அதை நம்பி ஏமாந்தவன் உண்மையை அறியும்போது ஏமாற்றப்படுபவனின் மனத்துயரானது அவனது ஆற்றாமை, வஞ்சனை செய்தவனை தாக்கி கொடுமையான நரகத்தில் தள்ளிவிடும். உதாரணமாக…..
ஒரு கிராமத்தில் நன்கு விளையும் நிலம் ஒரு ஏழைக்கு சுமார் இரண்டு ஏக்கர் இருந்தது. அது அவனது பரம்பரைச் சொத்தாகும். அந்த ஏழை அந்த நிலத்தை நம்பியே தமது குடும்பத்தை நடத்தி வந்தான். அந்த நிலத்தின் மீது பக்கத்து பணக்கார நிலக்கிழாருக்கு எப்போதும் ஒரு விருப்பம் இருந்தது. எப்படியாவது அந்த நிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற எண்ணம் உள்மனதில் இருந்து வந்தது. ஆனால் அவனோ தனது விருப்பத்தினை அந்த ஏழையிடம் வெளிப்படையாக சொல்லாமல் மனதினுள் வைத்துக் கொண்டு வெளியிலே ஏதோ எதன்மீதும் பற்றில்லாதவன் போல அந்த ஏழையிடம் அடிக்கடி வஞ்சனையாக பேசிப்பேசி பழகிவந்தான்.
அந்த ஏழை விவசாயியும் எவ்வளவு நல்ல மனிதர் ! பற்றில்லாமல் இருக்கிறாரே! இவ்வளவு பணமிருந்தும் நம்மை மதித்து பேசுகிறாரே! என வியந்து அவரை முழுமையாக நம்பினான்.
அந்த ஏழை விவசாயியின் குடும்பத்தில் மூத்த பெண்ணிற்கு திருமணம், நல்ல இடம் உடனே திருமணம் செய்யும்படியான சூழ்நிலை. ஆதலினால் அதிக பணம் தேவைப்பட்டது. அவனுக்கோ யாரிடம் செல்வது எனத்தெரியாமல் பக்கத்து நிலத்து பணக்காரனிடம் பணம் கேட்டான். அவனும் சரி தருகிறேன் உனக்கில்லாததா நான் தருகிறேன் கவலைப்படாதே! ஏற்பாடுகளை கவனி என புன்சிரிப்போடு இன்முகமாக கூறி வஞ்சனையோடு அனுப்பி வைத்தான். ஏழையும் அதை உண்மையென்று நம்பி ஏமாந்து ஏற்பாடுகளை செய்தான்.
பணக்காரனோ அந்த நிலத்தைக் கைப்பற்ற இதுதான் தக்க சந்தர்ப்பம் என எண்ணி தமக்கு தெரிந்த சில நபர்களை அழைத்து இந்த நிலத்தை நான் வாங்க போகிறேன். அந்த விவசாயி உங்களிடம் வந்து கேட்டால் இதன் மதிப்பு ஒரு ஏக்கர் ஐம்பதாயிரம் முதல் எழுபத்தைந்தாயிரம்தான் பெறும் எனக்கூறிவிடுங்கள் என சொல்லிவிட்டான்.
ஏக்கர் நான்கு இலட்சம் பெறுமானமுள்ள நிலத்தை எழுபத்தைந்து ஆயிரம்தான் பெறும் எனும்படியாக ஒரு வஞ்சக வலை விரித்தான். காலம் நெருங்கியது, ஏழை விவசாயி மகளுக்கு கல்யாண தேதி நெருங்கிவிட்டது.
“கையில் காசில்லை, தாங்கள் தருகிறேன் என்று சொன்னதை நம்பி எல்லா வேலைகளையும் தொடங்கி செய்து விட்டேன், கையில் காசில்லை. தாங்கள் தந்தால் அதற்கான பணத்தை அளித்து பொருள்களை வாங்கி திருமணத்தை நடத்திவிடுவேன்” என பணிவோடு கூறினான்.
ஆனால் பணக்காரனோ “அடடா மறந்தே போய்விட்டேன். வீட்டில் யாருக்கும் பணம் கைமாற்றாக கொடுக்கக்கூடாது” என என் பிள்ளைகள் சத்தம் போடுகிறார்கள் என்ன செய்வது? எனக்கு நல்ல மனதுதான். அவர்களுக்கு இல்லையே! என நடித்தான். விவசாயியோ தடுமாறினான்.
வேண்டுமானால் ஒன்று செய்கிறேன் உனது நிலத்தை வேண்டுமானால் என்னிடம் கொடுத்து விடு மற்றவர்களுக்கு எழுபத்தைந்தாயிரம் என்றால் உனக்கு ஏக்கருக்கு இருபத்தைந்தாயிரம் கூட போட்டு ஒரு இலட்சமாக தருகிறேன் என வஞ்சனையாக கூற, ஏழை விவசாயியும் அவனது பேச்சை நம்பி சரி! அப்படியே செய்யுங்கள் என்று பெண்ணின் திருமணம் நடந்தால் போதும் என கூறி வெறும் பத்திரத்தில் கையொப்பமிட்டு பணத்தை வாங்கி சென்றார்.
திருமணம் முடிந்தது. பின் ஒரு சில மாதம் கழித்து நிலத்தை இழந்த விவசாயி கூலி வேலை செய்து தமது குடும்பத்தைக் காப்பாற்றினான். விவசாயி தான் கூலி வேலை செய்து கொண்டிருந்த நிலம் விலைக்கு போன போது, எவ்வளவு விலை என்பதை கேட்டான். ஒரு ஏக்கர் ஐந்து இலட்சம் என்பதை விற்றவன் கூறினான். ஒரு ஏக்கர் ஐந்து இலட்சமா? எனது நிலம் ஒரு இலட்சம் தானே போனது என கூறினான்.
அதற்கு நல்லவிலைக்கு தானே விற்றேன் என்று இருந்தேன். என்னை ஏமாற்றி விட்டார்களே? என கண்ணீர் மல்கி அழுதான். அன்று அவன் அழுத அந்த கண்ணீர் அவன் வணங்கும் தெய்வத்தின் திருவடியை தொட்டது.
அந்த நிலத்தினை வஞ்சகமாக பேசி கைப்பற்றிய அந்த பணக்காரன் வெகு விரைவில் கடுமையான நோய்களுக்கு ஆட்பட்டு அவனது குடும்பத்தார்களே அவனிடம் நெருங்க முடியாத அளவு துர்நாற்றமெடுத்து யாருமற்ற அனாதையாக இறுதியில் இறந்து போனான். அவன் செய்த வஞ்சனையே அவனைக் கொன்றது.
உலகில் பலர் இறைவனை அடைய வேண்டியும், ஆன்மீகத்தில் ஈடுபட்டு மேன்மை அடையவும் வேண்டி, அதற்கு குருநாதரின் துணை வேண்டுமென்றும், தக்க ஆன்மீகவாதிகளின் வழிகாட்டல் வேண்டுமென்றும் உலகிலுள்ள ஆன்மீகவாதிகளை நாடி அவரவர் ஆன்மீகத்தில் முன்னேற நினைக்கின்றனர். அவர்களது முயற்சி பாராட்டத்தக்கதுதான்.
ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் குருநாதர் அல்லது ஆன்மீகவாதிகள் உண்மையானவர்கள் தானா? என ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தெளிவாக ஆராய்ந்து தேர்ந்தெடுக்காவிட்டால் இறுதியில் அவர்கள் தான் துன்பப்பட நேரும். உலகில் பலபேர் ஆன்மீகம் என்ற பெயரில் பொய் தவவேடமிட்டு ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற குடும்பஸ்தர்களையும், இன்னும் பலரையும் ஏமாற்றி பொய் தவவேடமிட்டு அவர்கள் நம்பும்படியாக இனிமையாக தேனொழுகப் பேசி அவர்களை வஞ்சித்து அவர்களிடமுள்ள பொருளை அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் எனக் கூறியும், இதைக் கற்றுத் தருகிறேன் அதைக் கற்றுத் தருகிறேன் எனக்கூறி கட்டணங்கள் வசூலித்தும் போலியான வகையில் உண்மை ஆன்மீகத்திற்கு புறம்பாக
பல பயிற்சிகளை மனதில் தோன்றியதையெல்லாம் சொல்லிக் கொடுத்து தானும் கெட்டு தம்மை உண்மையான ஆன்மீகவாதி என்று நம்பி வந்தவர்களையும் ஏமாற்றி தவறான பயிற்சிகளால் அவர்களையும் நோயாளியாக்கி வஞ்சனை செய்வார்கள்.
அவனை உண்மையென நம்பி அவன் மேல் பக்தி செலுத்துவார்கள். அவனது தொண்டர்களுக்கெல்லாம் என்றேனும் ஒருநாள் உண்மை தெரியும்போது உண்மையான பக்தி செய்து தொண்டு செய்து வந்த, அந்த தொண்டர்களின் மனவேதனையும், உண்மையான அந்த பக்தர்களின் மனவேதனையானது மாபெரும் சக்தியாக மாறி ஏமாற்றிய ஆன்மீகவாதியை மிகக் கடுமையான முறையில் தாக்கி மாபெரும் பாவியாக்கி அவர்கள் இறுதியில் மிகக் கொடுமையான நோய்களுக்கும் ஆளாகி வருந்தி வருந்தி சாவார்கள்.
இப்படி தம்மை நம்பி வருகின்ற அன்புள்ளம் கொண்ட பக்தர்களையும், தொண்டர்களையும் வஞ்சனையாகப் பேசி ஏமாற்றி பொருள் பறித்து வாழ்பவனை அந்த இயற்கையும், இறைவனும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கண்டிப்பாக மீளா நரகத்திற்குத்தான் செல்வார்கள்.
இவர்களது வஞ்சனையான செயல்களினால் இறைவன் மேல், மக்கள் கொள்ளுகின்ற பக்தியும் குறைந்து போய்விடுவதாலும், இறை நம்பிக்கை குறைவதாலும், பாவபுண்ணியங்களைப் பற்றி மக்கள் பயப்படாமல் மனதில் தோன்றியதை சரியென்று எண்ணி செய்வதாலும், தர்மசிந்தனை குறைவதாலும், நாட்டில் புண்ணியபலம் குன்றி பருவமழை தவறி எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு என மனித மனங்கள் கொடும் வஞ்சத்தில் வீழ்ந்து பெரும் அவதிக்குள்ளாக நேரிடும்.
எனவே போலி ஆன்மீகவாதிகளிடம் விழிப்போடு இருங்கள். அவர்களது வஞ்சகமான பேச்சினை நம்பாதீர்கள். உண்மையான குருநாதரை அடையாளம் கண்டு கொண்டு உண்மை ஆன்மீகத்தில் செல்லுங்கள். அதுவே உங்களுக்கும் நாட்டிற்கும் நல்லது. இப்படிப்பட்டவர்களும் மனந்திருந்தி வாழ வேண்டுமென்ற பெரும் கருணையினால்தான் மகான் ஒளவையார் “வஞ்சகம் பேசேல் எனக் கூறுகிறார்.
மகான் திருவள்ளுவப்பெருமானும் தமது திருக்குறளில் இப்படிப்பட்ட வஞ்சகர்களின் செயல்களும் அதன் தன்மையும் அதனால் விளையும் தீமைகள் குறித்து இருபத்தெட்டாவது அதிகாரத்தில் பத்து குறள்களை கூடா ஒழுக்கம் என்ற தலைப்பில் கூறுகிறார்.
28. கூடா ஒழுக்கம்
271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
272. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான் அறி குற்றப் படின்.
தன் மனம், தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?
273. வலி இல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது.
274. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
275. பற்று அற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்று எற்று என்று
ஏதம் பலவும் தரும்.
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், என்ன செய்தோம், என்ன செய்தோம் என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.
276. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப்போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.
277. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கில் கரியார் உடைத்து.
புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்கு போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு.
278. மனத்தது மாசு ஆக மாண்டார் நீ ராடி
மறைந்து ஒழுகு மாந்தர் பலர்.
மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல் நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
279. கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.
280. மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால் மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக்கோலங்களும் வேண்டா.
நன்றி – மு.வரதராசனார்.
அதுமட்டுமன்று மகான் சிவவாக்கியர் போன்ற சித்தர்களும், மகான் திருமூலர் போன்ற ஞானிகளும் உலக மக்கள் விழிப்படைய வேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
மகான் திருமூலர் தமது திருமந்திரத்தில் இராசதோடம் என்ற தலைப்பில் கீழ்வருமாறு கூறுகிறார்.
நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவநெறி (தீயநெறி) நாடானேல்
நாள்தோறும் நாடு கெடமூட நண்ணுமால்
நாள்தோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே
– திருமந்திரம் – இராசதோடம் – கவி எண் 239.
எனக் கூறுவதன் மூலம் இப்படிப்பட்ட ஆன்மீகவாதிகள் கண்டிக்க தக்கவர்கள். அப்படி அவர்களை அரசு கட்டுப்படுத்தாவிட்டால் அவர்களால் நாட்டின் நிலை குன்றும் என்கிறார்.
ஆசைகொண்ட னுதினமும் அன்னியர்பொ ருளினை
மோசஞ்செய்த பகரிக்க முற்றிலும்ம லைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினில் எழுநரகைக் காத்திருப்ப துண்மையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 536.
ஆகவே மகான் ஒளவையார் வாக்கிற்கேற்ப வஞ்சகம் பேசாமல் உண்மை பேசி வளமோடு வாழ்வோமாக.

Leave a Reply

Your email address will not be published.

Lucky Wisdom Persons

  • Visits Today: 552
  • Total Visits: 308684
  • Total Visitors: 1
  • Total Countries: 171

Watch colorized old Tamil movie
Secrets of Lord Kartikeya semen retention முருகன் ரகசியம் விந்துவை பற்றி சித்தர்